யுத்தத்துக்கு மத்தியில் சமாதானத்தைத் தேடிச் சென்ற இருபத்தி எட்டு வருடங்கள்
சம்பத் தேசப்பிரிய
முழு நாட்டையும் சூழ்ந்திருந்த 1988 மற்றும் 1989 கலவரம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. கொள்ளுபிடியில் எலொய் எவனியுவில் அமைந்திருந்த அலுவலகத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்த யுக்திய பத்திரிகை இரு வாரங்களுக்கு ஒரு முறை அச்சிடப்பட்டு விநியோகப்பட்டது. இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்த அப்பத்திரிகையின் ஆசிரியர் குழாமில், புதுவருகை எழுத்தாளராக நான் இணைந்தது 1990 தசாப்த்தின் முதல் பாதியிலாகும். 1971 கிளர்ச்சியின் பெரிய வழக்கின் பிரதிவாதியான சுனந்த தேசப்பிரிய அதன் ஆசிரியராக இருந்ததோடு, 71கிளர்ச்சியின் இன்னுமொரு பிரதிவாதியான கெலீ சேனாநாயக்கவுக்கு சொந்தமான இரத்மலானையில் அமைந்திருந்த நவமக அச்சகத்தில் பத்திரிகை அச்சிடப்பட்டது. அப்பத்திரிகை மேர்ஜ் (இனங்களுக்கு இடையிலான நீதி மற்றும் சமத்துவத்துக்கான இயக்கம்) நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்தது.
இந்நாட்டின் பிரபல சிவில் சேவையாளரும், புத்தஜீவியும், சிவில் சமூக செயற்பட்டாளருமான சார்ள்ஸ் அபேசேகர அவ்வமைப்புக்கு தலைமை தாங்கினார். அவரது மகளான சுனிலா அபேசேகர உட்பட இந்த நாட்டின் இனங்களுக்கு இடையிலான சமாதானத்துக்காக முன்நிற்கும் புத்திஜீவிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் இந்நிறுவனத்துடன் தொடர்புபட்டிருந்தனர். இடதுசாரி பின்னணி கொண்ட ஒரு குடும்பத்து இளம் எழுத்தாளனாக அதில் தொடர்புபட்ட நான், பத்திரிகையாசிரியர் சுனந்த தேசப்பிரிய, பிரதி ஆசிரியர் சீ.ஜே.
அமரதுங்க, ஜோ செனவிரத்ன, சீதா ரஞ்சனீ, மனோ ரஞ்சன், சார்ள்ஸ் அபேசேகர, சுனிலா அபேசேகர, கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிரி, பேராசிரியர் சுமனசிரி லியனகே, பேராசிரியர் ஜயதேவ உயன்கொட போன்ற புத்திஜீவி எழுத்தாளர்களுடன் பணிபுரிய வேண்டியேற்பட்டது.
அதேபோன்று எம்முடன் நெருக்கமாக செயற்பட்ட சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் கலாநிதி நியூட்டன் குணசிங்க உள்ளிட்ட குழுவினர் மற்றும் குமுதினி சாமுவேல், யுக்திய பத்திரிகையின் தமிழ் பத்திரிகையான சரிநிகர் பத்திரிகையின் சகோதர தமிழ் ஊடகவியலாளர்கள் நல்லிணக்கத்தை தேடிச்செல்லும் எமது பயணத்தின் எமது பயண சகாக்களாக இருந்தனர்.
யுத்தத்துக்கு சமாதானமான தீர்வு தேவை என்று முன்நின்ற பத்திரிகையும், நாமும் இந்த நாட்டின் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வொன்று தேவை என்ற விடயத்துக்காக தொடர்ந்தும் முன்நின்று வந்தோம். அப்போது நிலவிய ஆட்சியின் ஜனநாயக விரோத செயல்கள் அனைத்தும் எமது இரக்கமற்ற விமர்சனத்துக்கு உட்பட்டன. யுக்திய பத்திரிகை அச்சிட்டப்பட்ட நவமக அச்சகத்துக்கு தீ வைக்கப்பட்டது. ஆனால், யுக்தியவைச் சூழ்ந்திருந்த போராட்ட சகாக்கள் அத்தோடு நின்றுவிடவில்லை. அன்று இருந்த யுக்திய பத்திரிகை வெறுமனே பத்திரிகைகளுக்கென இருந்த எல்லைகளைத் தாண்டி, சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மாற்றுக் கருத்துடைய கலைஞர்கள், எதிர்க்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்த மத்திய நிலையமாக இருந்தது.
அதற்கு சமாந்திரமாக உருவான சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளின் பிரசவ அறையாக யுக்திய அலுவலகம் இருந்தது. அன்று அதில் தொடர்புபட்ட, இன்றும் உயிருடன் உள்ள எனது நட்புக்குரிய ஊடக சகாக்ககள் அதற்கு சாட்சி. “பயத்திலிருந்து விடுதலையடைவோம்” (freedom of fear) என்பதை அடிப்படையாகக் கொண்டு யுக்தியவை ஆரம்பித்த சிவில் சமூக இயக்கம் வடக்கு மற்றும் தெற்கு கொலை கலாசாரத்துக்கு எதிராக நாடு முழுவதும் கூட்டங்கள், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தது.
ஊடகவியலாளர் ரிச்சட் டி சொய்ஸா, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ராஜினி திராணகம ஆகியோரின் கொலைகளை கண்டித்து, அவர்களை நினைவுகூர்வதற்காக சுதந்திர ஊடக இயக்கம்ரூபவ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் ரச்சட் டி சொய்ஸாவின் சடலம் ஒதுங்கிய மொரடுவ கொரலவெல்லயிலிருந்து கொழும்பு விகார மகா தேவி பூங்கா வரையில் வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடை யாத்திரை, அப்போதைய ஆட்சிக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஒரு பாரிய அடியாக அமைந்தது. விஷாரத் குணதாச கபுகே, கருணாரத்ன திவுல்கனே, ஜயதிலக பண்டார, தீபிகா பிரியதர்ஷனீ பீரிஸ் உள்ளிட்ட இடதுசாரி தளத்தின் கலைஞர்கள் கொலைகளுக்கு எதிராக சமாதானத்தை விரும்பும் மக்களின் உள்ளங்களுக்கு அப்போது ஆறுதலளித்தனர். சுதந்திர ஊடக இயக்கத்தினால் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்கு பேச்சாளர்களை ஒன்றுசேர்த்து உரிய இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட அன்றை எதிர்க்கட்சியின் அனைத்து குழுக்களையும் மேடைக்கு எடுக்காத நுகேகொட கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பு சுதந்திர ஊடக இயக்கத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. நான் உட்பட யுக்தியவின் இளம் குழுவினர் மிகவும் அர்ப்பணத்துடன் செயற்பட்டனர். நான் கூட்டத்துக்கான உதவி பொலிஸ் அதிகாரியிடமிருந்து பெற்றது மிகுவும் இலகுவாகவல்ல. ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்திலிருந்து விலகிய லலித் காமினி அரசியல் ஜோடி, சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்காக நாம் அன்று பிரதிநிதித்துவம் செய்த முகாமை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு பின்னணியிலிருந்து வழங்கிய உதவி. இந்த சக்திகள், யுக்திய பத்திரிகை, ராவய, சிவில் சமூக குழுக்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பன ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசியல் வருகைக்கு ஆரம்ப விதையை தூவின. எஸ்.பீ. திசாநாயக்க, மங்கல சமரவீர, டிலான் பெரேரா போன்றவர்கள் சமாதானம் மற்றும் ஜனநாயகத்துக்காக எமது குழு மேற்கொண்ட போராட்டத்தின் நட்புத் தரப்புக்களாக இருந்தனர். இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்ற விடயம் அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஒரு பிரதான விடயமாக மாறியது, மேற்குறிப்பிட்ட சக்திகளின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாகவே என்று குறிப்பிட்டால், அது மிகையாகாது என்பதை, இன்றும் அரசியலில் ஈடுபடுகின்ற அவர்கள் ஏற்றுக்கொள்வர் என்று கருதுகிறேன்.
1994 இல் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசியல் வருகையுடன் இனங்களுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அதிகராத்தை பரவலாக்கம் செய்தல், ஊழல் வீண்விரயத்தை குறைத்தலுக்கான செயல்முறைகளில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று, மாற்றுக்கள ஊடக செயற்பாட்டில் ஈடுபட்ட நாம் உள்ளிட்ட பலரும் எண்ணினோம். எனவே, நாம் இதுவரையில் மேற்கொண்ட ஊடகக் கலையில் மாற்றத்துக்கான ஒரு பிரவேசத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயம் எம்மில் பலரின் கலந்துரையாடலுக்கு உட்பட்டது.
இந்த கற்பனைகள், கலந்துரையாடல்களின் இறுதி விளைவாக, 1994 இல், திவயின, ராவய, யுக்திய, அத்த பத்திரிகைகளிலிருந்து வந்த நான், சமன் வகஆரச்சி உட்பட ஒரு குழுவினர், சுதந்திர ஊடக இயக்கத்துடன் நெருங்கிச் செயற்பட்ட பூப் பத்திரிகைக்காரர் என்று சிலரால் அறிமுகம் செய்யப்பட்ட பந்துல பத்ம குமாரவுடன் இணைந்து லக்பிம பத்திரிகையை ஆரம்பித்தோம். இதை இலங்கை பத்திரிகைத்துறை வரலாற்றில் திருப்புமுனை என்று பதிவு செய்ய முடியும்.
இப்பத்திரிகை ஆரம்பம் முதல் இனங்களுக்கு இடையிலான சமாதானத்துக்காக முன்நின்றது. மூலதன உரிமையாளரும், பத்திரிகையாசிரியரும் அன்று பிரதிநிதித்துவம் செய்த கருத்தியலானது, இனங்களுக்கு இடையில் சமாதானத்தை நோக்காகக் கொண்டு செயற்பட்ட யுக்திய மற்றும் அத்த பத்திரிகைகளிலிருந்து வந்த ஊடக சகாக்களுக்கு சிறந்த ஆதரவாக அமைந்தது. இனங்களுக்கு இடையிலான சமாதானத்துக்காக ஜனாதிபதி சந்திரிக்கா ஆரம்பித்த வெள்ளைத் தாமரை இயக்கத்துக்கு நாம் குறைவின்றி ஒத்துழைப்பு வழங்கினோம். அவர் நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறும்போது விமர்சித்த அதேநேரம், லக்ஷ்மன் கதிர்காமரை வெளிவிவகார அமைச்சராக நியமித்தல், ஐக்கிய நாடுகள் சபையில் அவர் ஆற்றிய முதல் உரை, ஜனாதிபதியின் அரசியல் முன்மொழிவுகள், சமாதானத்துக்காக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களை பாராட்டி நான் எழுதிய அரசியல் பகுப்பாய்வுகள் லக்பிம பத்திரிகையில் பிரசுமாகின.
ஜனாதிபதி சந்திரிக்கா பாராளுமன்றில் முன்வைத்த அரசியல் திட்டத்தை, ஐக்கிய தேசியக் கட்சி இனவாதக் கண்ணோட்டத்தில் விளக்கிக் கொண்டு, பாராளுமன்ற சபையில் தீயிட்டுக் கொழுத்தியபோது, பாராளுமன்ற செய்தியாளராகக் கடமையாற்றிய நான், அதை கண்களால் கண்டுகொண்டேன். இது இந்த நாட்டின் இனப் பிரச்சினை தொடர்பிலான ஒரு மோசமான முன்னறிவிப்பு என்று நான் பத்திரிகையில் பதிவு செய்தேன். சமாதானத்தின் தூதுவராக வந்த ஜனாதிபதி, தேசிய மற்றும் இனவாத அரசியல் சக்திகளின் செல்வாக்குக்கு உட்பட்டு, இனங்களுக்கு இடையிலான சமாதானத்தை மறந்து, யுத்தத்தை நோக்கி தள்ளப்பட்டுச் செல்லும்போது, அவரின் அரசியல் கடந்த காலத்தை நினைவுபடுத்தி, இது இடம்பெறக்கூடாத ஒரு விடயம் என்று குறிப்பிட்டு நான் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். சமாதானத்துக்காக முன்நின்ற லக்பிம, எப்போதும் சமாதானத்துக்கு, நல்லிணக்கத்துக்கு தடையாக அமைகின்ற பழங்கதைகளுக்கு எதிராகவும் முன்நின்றது.
கடுமையான நோயாளிகளை குணப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு, தொளுகந்தே தேரரொருவர் கங்கைகளைக்கூட பிரித் நீராக மாற்றுவதாக நாடு முழுவதும் ஊடகங்கள் மூலம் மூடக்கொள்கை பிரசாரம் செய்தபோது, “தொளுகந்தே பொரு கந்த” (தொளுகந்தேயில் பொய் மலை) என்று கட்டுரைத் தொடரொன்றை வழங்கி, மக்கள் கருத்தை மாற்றியது, யுக்திய பத்திரிகையிலிருந்து எம்மோடு வந்த ஊடக நண்பர் ஒருவராவார். இனங்களுக்கு இடையிலான சமாதானத்துக்காக முன்நிற்கும் சிங்கள பத்திரிகைகளுக்கு வாசகர் ஈர்ப்பு இல்லை என்ற தப்பபிப்பிராயத்தை உடைத்து, அன்று அதிகளவில் விற்பனையான லங்காதீப ஞாயிறு இதழுக்கு சமமாகுவதற்கு லக்பிம ஞாயிறு இதழால் முடிந்தது. சந்திரிக்காவின் ஆட்சியின் அழுத்தம் காரணமாக பந்துல பத்ம குமார பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து நீங்கிச் சென்றார். பின்னர், சிங்கள தேசியவாத பத்திரிகையொன்றான திவயின பத்திரிகையிலிருந்து வந்து லக்பிமவில் இணைந்த ஊடக சகா ஒருவர், லக்பிம பத்திரிகையின் பிரதம ஆசிரியரானார். ஆரம்பம் முதல் சமாதானத்துக்காக செயற்பட்ட எனதும், அத்த பத்திரிகையிலிருந்து லக்பிம பத்திரிகைக்கு வந்த நண்பரதும் வேலை, தெளிவான காரணங்கள் முன்வைக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. சிறிது காலத்தில் இருவரும் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் இடம்பெற்று சில நாட்களின் பின்னர், யுக்திய பத்திரிகையில் இருந்த இன்னுமொரு ஊடக நண்பர் லக்பிம நாளிதழில் இணைந்தார்.
அப்போது பிரதம ஆசிரியராக இருந்த சிரேஷ்ட ஊடகவியலாளரின் அலுவலகத்துக்கு நாமிருவரும் சென்றபோது, மிகவும் அன்புடன் எம்மை வரவேற்ற அவர், இது ஒரு சிங்கள பௌத்த தேசிய பத்திரிகை. உங்களது என் ஜீ ஓ வழி இதற்கு சரிவராது. கவனமாக வேலைகளைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார். அரச சார்பற்ற நிறுவனங்களுடன் எந்தவொரு தொடர்புமில்லாதிருந்த நாமிருவரும் புன்முறுவலுடன் மாத்திரம் அதற்குப் பதிலளித்தோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2005 இல் அதிகாரத்துக்கு வந்தபோது, ஆரம்ப சமாதான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், யுத்த ரீதியான தீர்வில் இறங்கினார். இடை ஆயுதக் குழுக்கள் வேலைகளை ஆரம்பித்தன. பெரும்பாலான ஊடக சகாக்கள் அவற்றின் செயற்பாடுகளை பாராட்டும்போது, அதற்கு எதிராக நான் எழுதிய கட்டுரையொன்றை எனது பெயரில் பிரசுரிப்பது பொருத்தமா என்று புதிதாக வந்திருந்த பத்திரிகையாசிரியர் என்னிடம் வினவினார். நான் பரவாயில்லை என்று கூறியதன் பின்னர், அது பிரசுரிக்கப்பட்டது. அரசியல் தேவைகளுக்காக உருவாக்கப்படும் இவ்வாறான இடை ஆயுதக் குழுக்கள், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த அதிகாரத்தின் ஈர்ப்பிலிருந்து நீங்கி, தமது தனிப்பட்ட அபிலாசைகளுக்காக செயற்படுவதற்குள்ள வாய்ப்பு பற்றி அக்கட்டுரை மூலம் நான் விளக்கியிருந்தேன். 88, 89 கலவர காலத்து அனுபவங்களை ஒப்பிட்டு, நான் அக்கட்டுரையை எழுதியிருந்தேன். அக்குழுக்கள் உருவாகிய காலத்தில் நான் எழுதிய குறிப்புக்கள், அக்குழுக்களின் பிற்கால செயற்பாடுகள் மூலம் உறுதி செய்யப்பட்டன.
அக்காலத்தில் என்னால் எழுதப்பட்ட எந்தவொரு கட்டுரையிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையோ, அவ்வியக்கத்தின் செயற்பாடுகளையோ நியாயப்படுத்தவில்லை. அது தமிழ் மக்களின் விடுதலைக்கான இயக்கமல்ல. மாறாக, பாசிச பண்புகள் கொண்ட இயக்கமென நான் விளக்கியுள்ளேன். நான் லக்பிம பத்திரிகையில் செய்தியாசிரியாக கடமையாற்றியபோது, யுத்த செய்திகளை சேகரிப்பதில் ஈடுபட்ட புதிய ஊடகவியலாளர்கள், அவற்றை மகிமைப்படுத்தி, ஏனைய இனத்தவர்களை அவமதித்து எழுதும்போது, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திலுள்ள பெறுமதிகளை அவர்களுக்கு புரிய வைப்பதற்கு செலவழித்த நேரம், மொத்தகமாகவே வீணாகியிருக்கும் என்று இன்றுவரையில் நான் எண்ணியது கிடையாது.
ஜனாதிபதியின் செய்திகளை சேகரித்தல், யுத்த செய்திகளை சேகரித்தல், அமைச்சுக்களின் செய்திகளை சேகரித்தலுக்கு என்னால் நியமிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள், தமது செய்தியாசிரியருக்கே பொறுப்புக்கூற வேண்டியிருந்தபோதும், தாம் பொறுப்புக்கூற வேண்டியது மேற்குறிப்பிட்ட தரப்புக்களுக்கே என்று எண்ணி செயற்படுவதனால், அவர்களுடன் பணியாற்றுவது கூர்மையான கத்தியால் பால் அருந்துவது போன்ற ஒரு வேலையாக இருந்தது. இவை அனைத்தினதும் இறுதி முடிவாக அமைந்தது என்னவென்றால், ஒரு நாள் இரவு நான் எதிர்கொண்ட பயங்கரமான அனுபவமாகும். அந்த சம்பவத்தின் பின்னர் என்னை சந்திக்க வந்த சுனந்த தேசப்பிரிய, சனத் பாலசூரிய, போத்தல ஜயன்த, மஞ்சுல வெடிவர்தன உள்ளிட்ட எனது ஊடக நண்பர்கள், எனக்கு கொழும்பில் பாதுகாப்பு விடுதியொன்றை வழங்குவதற்கு, எனது விருப்பத்தைக் கேட்டனர். நான் அதை அன்புடன் மறுத்தேன்.
அப்போதைய ஆட்சிக்கு என்னைப் பற்றி ஏதாவது பிரச்சினை இருந்தால், அதை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கு, அன்று எனக்கிருந்த இயலுமை காரணமாக நான் அந்த முடிவை எடுத்தேன். நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பை உருவாக்குவதற்காக சிங்கள இனவாத குழுக்கள், குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சாபி சிங்கள பெண்களை மலடாக்குவதாக குற்றம்சாட்டியபோது, பிரதான தளத்தின் அனைத்து ஊடகங்களும் அவர்களுடன் இணைந்தனர். ஆனால், நான் பத்திரிகையாசிரியராக இருந்த லக்பிம பத்திரிகை, அப்பழங்கதைக்கு எதிராக விஞ்ஞான ரீதியான நிலையை நாட்டுக்கு தெளிவுபடுத்தியது. யுத்தம் முடிந்தபோதும், நாட்டில் இன நல்லிணக்கத்துக்கு ஒரு அரசியல் தீர்வு அவசியம் என்ற விடயத்துக்காக முன்நிற்பதற்கு, லக்பிம இறுதித் தருணம் வரையில் செயற்பட்டது. நூறு வீதமாக இல்லாதபோதும், உச்ச அளவில் ஊடக ஒழுக்கவிதிகளை கடைபிடித்து ஊடக செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு பிரதம ஆசிரியர் என்ற வகையில் நான் மேற்கொண்ட முயற்சி பற்றி, ஆரோக்கியமான ஊடக செயற்பாட்டின் அவசியம் தொடர்பில் கவனம் செலுத்திய வாசகர்கள், ஊடக கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தல் நிறுவனங்கள், ஊடக மற்றும் கல்விசார் புத்திஜீவிகளிடம் ஒரு புரிதலும், மதிப்பீடும் இருக்கும் என்று கருதுகிறேன்.
A Journalist’s Long Quest For Peace During The War And After
යුද්ධය අස්සේ සාමය සොයා ගිය විසි අට වසරක්