முகநூல் என்பது இது மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனையை விதைக்கும் ஒரு சமூக வலைப்பின்னலாகும்
உதேனி பெரேரா
பிற கலாசாரங்கள் மற்றும் இனக்குழுக்களை இகழ்ந்து, அவர்களின் கலாசாரம் அல்லது இனம் மட்டுமே உயர்ந்தது என்று கூறும் ஏராளமான மனித நடத்தை முறைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இதை நாம் மனிதனை மையமாகக் கொண்ட சிந்தனை என்று அடையாளம் காண்கிறோம். ஒரு நபரின் வாழ்க்கை முறை இயற்கையானதா அல்லது சரியானதா என்பதை தீர்மானிக்க மானுடவியலாளர்களால் மனித மையவாதம் என்ற சொல் முதலில் பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், காலப்போக்கில், பல்வேறு அறிஞர்கள் இந்த வார்த்தையை கலாசார ரீதியாக எதிர்மறையான சொல் என்று அழைக்கிறார்கள். இதன் மூலம், ஒரு நபர் தனது சொந்த கலாசாரத்தை விட ஏனைய கலாசாரங்கள் தாழ்ந்தவை என்ற கருத்துடன் ஒரு நபர் தனது கலாசாரம் சரியானது என்றும், அது மற்ற கலாசாரங்களை விமர்சிப்பதன் மூலம் மறுத்தால், அது மனித மைய சிந்தனை என்று அழைக்கப்படுகிறது. போஸிய பாரம்பரியத்தில் மானுடவியலாளர்களின் கூற்றுப்படி, ‘மனித மையவாதம்’ என்பது ஒரு மானுடவியல் முரண்பாடாகும். மானுடவியல் மனித மைய வாதத்தை நிராகரிக்கிறது.
இன்றைய சமூக ஊடகங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஊடுருவியுள்ளன. உங்கள் எண்ணங்கள், அணுகுமுறைகள், யோசனைகள், தகவல், வதந்திகள் போன்றவற்றை அறிந்து கொள்ளவும் சமூகமயமாக்கவும் நீங்கள் முகநூல் சமூக ஊடக தளத்தைப் பயன்படுத்தலாம். இதற்கிடையில், மனித மையவாதத்தைக் கொண்ட சிந்தனையின் விரைவான பரவலை இங்கே காணக்கூடிய ஒரு நெருக்கடி சூழ்நிலையாகக் காணலாம்.
நாட்டின் தேசிய ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் சிறு வெளியீடுகள், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை இழிவுபடுத்தும் வெளியீடுகள், ஒரு குறிப்பிட்ட பகுதியை இழிவுபடுத்தும் அல்லது உயர்த்தும் வெளியீடுகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் பதிவுகள் இங்கே காணலாம். அதே நேரத்தில், நாடு முழுவதும் அவ்வப்போது தீவிரமடைந்து வரும் தென் மாகாணம் குறித்த மனித மையவாதம் கொண்ட எண்ணங்கள் கொண்ட வெளியீடுகள் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தன அந்த பகுதியில் உள்ளவர்கள் தங்கள் பகுதி உயர்ந்ததாக நினைக்கிறார்கள், அதே போல் மற்ற பகுதிகளில் வாழும் மக்கள் தெற்கில் உள்ள மக்களை தாழ்வாக நினைக்கிறர்கள். இவ்வாறு இரு விதத்திலும் நடக்கும் மனித மையவாத சிந்தனையை இங்கே காணலாம்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் அண்மையில் முஸ்லிம் சடலங்களின் தகனம் ஆகியவற்றின் போது மனித மையவாத சிந்தனைகள் முகநூலில் பகிரப்பட்டன.
அதற்கு மேலதிகமாக, தங்களை விட உயர்ந்தவர்கள் என்று கூறும் ஒரு பகுதியினரின் மனதில் வெறுக்கத்தக்க உணர்வுகளைத் தூண்டும் வகையில் பல இடங்கள், பதிவுகள் மற்றும் இடுகைகளை முகநூலில் காணலாம். இதுபோன்ற விஷயங்களை வெளியிடுவது குறுகிய அல்லது நீண்ட காலத்திற்கு மக்களின் மனதை பாதிக்கிறது, இதன் மூலம் இனவெறி சிந்தனையை வளர்த்து, தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வரை அதை மேம்படுத்துகிறது. இத்தகைய மனித மையவாதம் கொண்ட எண்ணங்களும் ஒரே நேரத்தில் மோதல்களுக்கு காரணமாக இருப்பதைக் காணலாம். 2019 ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடருக்குப் பிறகு இந்நாட்டின் சில பகுதிகளில் இனங்களுக்கிடையே எழுந்த சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து இதைப் புரிந்து கொள்ள முடியும்.
இத்தகைய மனித மையவாதச் சித்தாந்தங்கள் முகநூலின் தடையற்ற கருத்துச் சுதந்திரத்திலிருந்து பிறந்து, கருத்துச் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றன, மேலும் ஒரு நாட்டில், ஒரு சட்டத்தில், ஒரு கொடியின் நிழலில் வாழும் குடிமக்கள் என்ற ரீதியில் மனித மையவாதச் சிந்தனைகளை அப்புறப்படுத்துவது எமது பொறுப்பாகும்.