மதச்சார்பின்மை என்றால் என்ன: ஒரு இலங்கையனின் புரிதல் (பகுதி II)
இந்திய-அமெரிக்க மாதிரி
மதச்சார்பின்மை என்பது இந்திய ஜனநாயகத்தின் “கண்காணிப்பான்” என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் உண்மைப் பதிப்பில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அரசியலமைப்பு உருவாக்குனர்களான டாக்டர் அம்பேத்கர், நேரு மற்றும் காந்தி ஆகியோரிடையே அரசு மதத்திலிருந்து பிரத்தியேகமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பரவலாக கலந்துரையாடப்பட்டது. ஒரு மைல்கல்லாக, 1976 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 42 ஆவது திருத்தம், இந்தியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்றியது.
மதச்சார்பின்மையை மதிக்கும் சில நாடுகளில் ஐக்கிய அமெரிக்க நாடும் ஒன்றாகும். அரசியலமைப்பின் முதன் முதலான திருத்தம் மதத்தை அரசிலிருந்து தூரமாக்கியது. எந்தவொரு மதத்தையும் தடைசெய்வதற்கு காங்கிரசுக்கு வழங்கப்பட்ட கடுமையான அதிகாரங்களையும் இந்தத் திருத்தம் மறுத்தது. லெரான் வி. குர்ட்ஸ்மானில், சட்டமாக மாறும் ஒரு வரைவு மசோதாவை நிறைவேற்றுவதற்கு மூன்று சோதனை முறைகளை அது பட்டியலிடப்பட்டிருந்தது. அந்த சோதனைகளாவன; முதலாவதாக, சட்டத்தின் மத இயல்பு பற்றிய விளக்கம் மற்றும் இரண்டாவதாக, இந்தச் சட்டம் மத சுதந்திரத்தை தடை செய்வதையோ அல்லது குறைப்பதையோ பாதிக்காது என்று உறுதியளித்தல். மூன்றாவதாக, சட்டத்தின் நோக்கம் அரசுக்கும் மதத்திற்கும் இடையிலான உறவை வளர்ப்பது அல்ல என்பனவாகும்.
இலங்கை மதச்சார்புடையதா? அல்லது மதச்சார்பற்றதா?
அரசியலமைப்பின் 9 வது பிரிவு மதச்சார்பின்மையின் முதன்மையான அர்த்தத்தை மீறுகிறது. இது பின்வருமாறு கூறுகிறது: “இலங்கை குடியரசு பௌத்த மதத்திற்கு முதன்மையான இடத்தைக் கொடுக்கும்”, “அதன்படி புத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்ப்பது அரசின் கடமையாகும்”. எந்த அளவிற்கு அரசுக்கும் பௌத்தத்திற்கும் இடையில் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கியுள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
இந்த சூழலில், அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, பௌத்தத்தைப் பாதுகாக்க அரசு தலையிட வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு சட்டத்தை உருவாக்கும் போது, சிங்கள பௌத்த பெரும்பான்மையின் பிரபலமான ஆணையான சிங்கள பௌத்த பெரும்பான்மைவாதத்தின் சோதனையை நிறைவேற்றுவது அவசியமாகும். இந்த சோதனையில் தேர்ச்சி பெற முடியாவிட்டால், அரசாங்கம் ஒரு படி பின்வாங்க வேண்டியிருக்கும். இந்தியா மற்றும் அமெரிக்காவைப் போலல்லாமல் பௌத்த மதத்தின் முன்னிலையில் வலுவான நடுநிலைமையை அல்லது பக்கச்சார்பற்ற தன்மையை பராமரிக்க அரசால் முடியவில்லை என்று இது கூறுகின்றது. அரசியலமைப்பின் 12 (2) வது பிரிவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி, ஒரு குடிமகன் இன, மத பின்பற்றுதல், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட முடியாது. இருப்பினும், ஒரு அரசாங்கத்தின் அரசியல் எதிர்காலத்தை உருவாக்குவதில் சிங்கள-பௌத்த கருத்து இன்னமும் ஒரு தீர்க்கமான காரணியாகும். அந்த காரணியைத் தவிர்ப்பதற்கு எந்த அரசாங்கத்திற்கும் அதிகாரம் இல்லை.