Uncategorized

பெண்கள் மற்றும் சிறுவர்கள் முகங்கொடுக்கும் நவீன சவால்கள்

சதீஷ்னா கவிஷ்மி

சமூக நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை இலங்கையின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சிறந்த ஒத்துழைப்பை வழங்கும் அமைப்பாகும். இருப்பினும் இந்த துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் சமூக சிக்கல்களை அடையாளம் கண்டு ,  நடைமுறைக்கு சாத்தியமான கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தாவிடின் நாட்டின் சமூக அபிவிருத்திக்கும் , பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கும் பாரியதொரு அழுத்தம் தோற்றம் பெற கூடும்.

சிறுவர்கள் மற்றும் பெண்கள் நடைமுறையில் முகங்கொடுக்கும் பல்வேறு சிக்கல்கள் சமூகத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றன. சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் முழுமையான பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. பொறுப்பானவர்கள் சிறுவர்களை மிலேட்சத்தனமான முறையில் நடத்துதல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சித்திரவதைகள் தொடர்பில் ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகுவதை அவதானிக்க முடிகிறது. இதன்போது பிள்ளைகளின் பொறுப்பு மற்றும் பொறுப்பானவர் தொடர்பில் சிக்கல் எழும் நிலையில் அரச இயந்திரத்தின் தலையீடு தேவைப்படுவதுடன்  அது தொடர்பில்  பெற்றோருக்கு தெரியப்படுத்துவதுடன், நடைமுறையில் உள்ள சட்ட கட்டமைப்பு  தொடர்பில் புரிதல்களை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும்.

பெண்களின் நலன்புரி தொடர்பில் பரிசீலிக்கையில் , அவர்கள் சமூகத்துக்குள் பாதுகாப்பான சூழலில் இலகுவாக செயற்;படுவதற்கு உரிய சூழலை சமூகத்தின் அனைத்து குழுவினரும் உருவாக்க வேண்டும்.

நவீன பூகோள மயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் மேலும் தீவிரமடைவதுடன் , சைபர் முறைமை ஊடாக பெண்கள் மீதான அழுத்தம் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள்  பிரதான சவாலாக காணப்படுகின்றன. இது அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்துக்கு  சிக்கலானதாக அமையும். அதேபோல் பிள்ளைகளுக்கு சமூக வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக கிடைக்கப் பெறும் தவறான புரிதல்கள் மற்றும் போலியான தகவல்கள் பிள்ளைகளின் அறிவாற்றலை மதிப்பிடுவதில் தாக்கம் செலுத்தும்.

குடும்பத்தின் உள்ளக முரண்பாடுகள், வீட்டு சித்திரவதை மற்றும் பெற்றோரின் முரண்பாடுகள் ஆகியவற்றால் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பெண்களும் , சிறுவர்களும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. பிள்ளைகளின் உளவியலுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் செயற்பாடுகளுக்கு ஒத்தாசை வழங்கல், அணுசரனை வழங்குதல் பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு சிக்கலானதாக அமையும். பாதுகாப்பான சூழலை உருவாக்குதல்  மற்றும்  சமூகத்துக்குள் காணப்படும் பாதுகாப்பற்ற சூழலை இல்லாதொழிப்பதற்கு கல்வி மற்றும் சட்ட நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானதாக அமையும். குறிப்பாக  பிள்ளைகளின் உளவியல்,சிந்தனை மற்றும் வளர்ச்சிக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது பிரதான பொறுப்பாக கருதப்பட வேண்டும்.

சமூக நலன்புரி மற்றும் நன்னடத்தை சேவை , இலங்கை சமூக அபிவிருத்தி துறை சிறந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாகும். பாதிக்கப்பட்ட பெண்கள்  ,பிள்ளைகள் மற்றும் நலிவுற்ற நிலையில் உள்ள குடும்பங்களுக்கு பாதுகாப்பையும் , அரவணைப்பையும் வழங்கி அவர்களின் சுகாதாரம் , கல்வி மற்றும் சமூக வலுவூட்டல் மேம்பாடு ஆகியன  இந்த துறைகளின் பிரதான இலக்காகும். இலங்கை அரச சமூக நலன்புரி சேவை மற்றும் நன்னடத்தை சேவை ஊடாக இந்த பணிகள்  முன்னெடுக்கப்படுகின்றன.

சமூக நலன்புரி சேவை என்பது , மக்களின் நலிவுற்ற நிலைமை மற்றும் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்க மற்றும் பிரதேச மட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தும் கருத்திட்டம் மற்றும் கொள்கைகள் என்று பொருட்படும். இலங்கையில் இந்த சேவை  அரசின் ஊடாக நேரடியாகவும் , பிரதேச சபை ஊடாகவும் முன்னெடுக்கப்படுகிறது.

நன்னடத்தை சேவை என்பது , நீதிமன்றத்தின் ஊடாக சட்டவிரோத அல்லது சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய பிள்ளைகள் மற்றும் இளைஞர்களுக்காக  சமூக நலன்களை வழங்குதல் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் வகையில் சேவை வழங்கும் நிறுவனமாகும். நன்னடத்தை சேவை ஊடாக இலங்கையில் பிள்ளைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுவதுடன், அது சுகாதாரம் ,பாதுகாப்பு  , கல்வி மற்றும் சட்ட செயற்பாடுகளுடன் தொடர்புடையது. குறிப்பாக குடும்ப நிலை நலிவுற்ற நிலையில் உள்ள  பிள்ளைகளுக்கு  பாதுகாப்பளிக்கும் திட்ட சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டு நன்னடத்தை சேவை ஊடாக செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் ஊடாக 15,000 பிள்ளைகள் பயனடைந்துள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு சேவை

சிறுவர் பாதுகாப்பு சேவை என்பது , பாதுகாப்பான சிறந்த சூழலை உருவாக்குவதற்கு , பிள்ளைகளின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான செயற்திட்டங்களை அமுல்படுத்துவதாகும். சுகாதாரம் , கல்வி , பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகிய மனித அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகளுடன் இது தொடர்புடையது. 

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். பெற்றோரின் முறையற்ற செயற்பாடுகளால் பாதிக்கப்படும் பிள்ளைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகள்  ஆகியோரின் நலனை கருத்திற் கொண்டு சமூக நலன்புரி மற்றும் நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல் , பிள்ளைகள் தனிப்பட்ட முறையில் முரண்பாடான நிலைக்கு ஆளாகும் போது அவர்களின் உpமைகளை பாதுகாக்கும் பொறுப்பு நன்னடத்தை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சட்ட பாதுகாப்பு

இலங்கையின் சட்ட கட்டமைப்பு ஊடாக, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க பல சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க பிள்ளைகளை பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் கொள்கையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் ஊடாக முரண்பாடான சமூக நிலைக்கு உள்ளான பிள்ளைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நன்னடத்தை அதிகாரிகளுக்கு அல்லது சமூக சேவையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன.

குடும்ப மறுசீரமைப்பு மற்றும் மகளிர் பாதுகாப்பு

நன்னடத்தை சேவை ஊடாக சிறுவர்களுக்கு மாத்திரமல்ல, குடும்ப மறுசீமைப்பு மற்றும் காப்புறுதி சேவைகள் வழங்கப்படுகின்றன. குடும்ப மறுசீரமைப்பு ஊடாக குடும்ப பாதுகாப்பு, குடும்பத்தை ஒருமுகப்படுத்தல், முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளுதல், ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கிடையில் ஒத்துழைப்பு கட்டமைப்பை தயாரித்தல் உள்ளிட்ட பல சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த செயற்திட்டத்தின் ஊடாக பெண்களுக்கு புதிய வாழ்க்கைக்கு வழி காண்பிக்கும் இலக்கு  நிறைவேற்றப்படும்.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான பிரதிபலன்களை வழங்கும் போது கீழ் குறிப்பிடப்படும் சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதை சுட்டிக்காட்ட முடிகிறது.

1 –வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் மற்றும்      முரண்பாடுகள்

பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக சமூக நலன்புரி மற்றும் சிறுவர் காப்புறுதி சேவைகள் வெற்றிப் பெற்றிருந்தாலும் இந்த துறைகளுக்கான நிதியம் குறைதல் மற்றும் நிர்வாக கட்டமைப்பு முறையாக செயற்படாமை ஆகியன சவால்களை தோற்றுவித்துள்ளன.

2-சட்ட நடவடிக்கை மற்றும் தொடர்பாடல் நெருக்கடி

தொழிற்றுறையினரிடம் குறிப்பிட முடியாத சிறுவர்களின் சிக்கல்கள் மற்றும் நன்னடத்தை தொழிற்றுறையினரின் சமூக செயற்பாடுகள் தோல்வியடைந்தமை பிரதான சிக்கலாகும்.

3-மகளிர் மற்றும் சிறுவர் அதிகார சபை சிறுவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அமைதியான வாழ்க்கை நிலையை வழங்குவதற்காக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அதன் வெற்றிக்கு பல சவால்களும்,சிக்கல்களும் தோற்றம் பெற்றன.

பின்வரும் நடவடிக்கைள் ஊடாக இவ்வாறான சவால்களை வெற்றிகரமாக எதிர்க்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1-நியதியான கொள்கை மற்றும் சட்டம்

சிறுவர் பாதுகாப்பு மற்றும் நன்னடத்தை சேவை துறைகளுக்கு புதிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் சிறுவர் காப்புறுதிகளுக்கு அதிகளவில் கவனம் செலுத்தல் தேசிய மட்டத்தில் இந்த சிக்கல்களுக்கு  முறையான தொழிற்றுறை நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.,

2-பிரதேச மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு வழங்கல்

பிரதேச மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் மேம்படுத்தப்பட்ட சிறந்த ஒத்துழைப்புக்களை கட்டியெழுப்புதல் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி தொடர்பில் முன்னேற்றகரமான  செயற்திட்டங்களை முன்னெடுத்தல்.

3-சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காக சமூக மற்றும் சட்ட கட்டமைப்பை வினைத்திறனாக்குவது கட்டாயமானது. நன்னடத்தை சேவை பாதுகாப்பு வழங்கல் ஊடாப சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு சாதகமாக அமையும்.

சமூக நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த முக்கிய பங்காற்றுகிறது. இருப்பினும் இந்த துறைகளுகளில் உள்ள சவால்கள் மற்றும் சமூக சிக்கல்களை அடையாளப்படுத்தல், நடைமுறைக்கு சாத்தியமான கொள்கை மற்றும் செயற்பாடுகள் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் நாட்டின் சமூக அபிவிருத்தி சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு பாரிய தாக்கங்கள் ஏற்படும்.

உசாத்துணை நூல்கள்

1-இலங்கை சமூக நலன்புரி மற்றும் சிறுவர் காப்புறுதி பணியகம் (2023)> சிறுவர் பாதுகாப்பு அறிக்கை

2-தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை  (2022)> இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் சட்டம்’ தேசிய சிறுவர் பாதுகாப்பு 

3-நன்னடத்தை அல்லது சிறுவர் பராமரிப்பு சேவை திணைக்களம் -2022 வருடாந்த அறிக்கை. இலங்கை

4- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ( 2021). இலங்கை மகளிர் மற்றும் சிறுவர் நலன்புரி செயற்திட்டம் .இலங்கை

5-விஜேசிங்க. ஜி.(2023) இலங்கை சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு தொடர்பான நன்னடத்தை சேவையின் சவால்கள்

சதீஷ்னா கவிஷ்மி

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts