வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் போலி செய்திகளைக் கையாளுதல்

புனைவுச் செய்தி பற்றிப் பௌத்த போதனைகள்

புனைவுச் செய்தி பரப்புதல் பற்றி ஆழமான சுவடிக்காப்பகம் ஒன்றுள்ளது. “விதானே ஏழு காகங்களை வாந்தி எடுத்தான்” என்பதிலிருந்து “தீவிரவாதிகளினால் நீர் வழிகளில் நஞ்சு கலக்கப்பட்டது” வரையில் எதுவும் புனையப்பட்ட செய்தியாகும். செய்தி என்பது நம்பகரமான அறிக்கைகள், அறிவிப்புகள் மற்றும் பத்திரிகைப் பிரசுரங்கள் ஆகியவற்றின் ஒத்த கருத்தை உடையது. புனையப்பட்ட செய்திகளைக் கையாள்வதற்காக அரசாங்கம் ஆயிரக்கணக்கில் சட்டரீதியான வழிகாட்டல்களை அறிவித்துள்ளது.  இவ்வாறு செய்வது பாதுகாப்புச் சார்ந்த அவசியமான ஒரு அணுகுமுறையாகும். வலுவூட்டக்கூடிய அணுகுமுறை ஒன்றிற்கு நாங்கள் முயற்சி செய்தால் என்ன? (அடிமட்டத்திலிருந்து மேல் நோக்கிய அணுகுமுறை)  நாங்கள் அடிமட்ட மக்களை அணுகி அவர்களுக்குப் புனைவுச் செய்திகளை உருவாக்குதல், அவைகளை உற்றுக் கேட்டல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய  பின் விளைவுகள் பற்றிக் கற்றுக் கொடுக்க முடியும.;

இயற்கையில் மனிதர்கள் சண்டை சச்சரவுகளையும் எதையும் துருவி ஆராய்ந்து அறிதலையும் விரும்பும் தன்மையுடையவர்கள்.  மக்களுக்குத் தகவல் பற்றிச் சிரமம் நிறைந்த தேவையுள்ளது. அதற்கான தாகம் எங்களிடம் உள்ளது. பேய்த்தனமான சிந்தைனைகளையும் மனப்பான்மையையும் தூண்டும் ஆர்வமிக்க கதைகள் சூழலுக்குச் சவால் விடுகின்ற இ-கழிவுகளில் வரும் விளக்கமான கட்டுரைகள் மூலம் எவ்வளவு வேகமாக சுழல்கின்றன என்பதை அவதானிக்க வேண்டும். 

தெளிவாக ஆராயாது புனைவுச் செய்தியை உருவாக்குதற்கும் பரப்புதற்கும் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் உயிரியல் மற்றும் தூண்டுதல் ரீதியான நோக்கமும் பின்னணியில் இருக்கின்றன. இலாபம், கவன ஈர்ப்பு மற்றும் மறைமுகமான அனுகூலங்கள் காரணமாக புனைவுச் செய்தி வெளியிடும் முன்னெடுப்பில் ஈடுபட்டு அதன் தோற்றுவாயாகவும் இருப்பர்.  சில சமயங்களில் மக்களை அணுகி அறிவூட்டுதல்  முதன்மையானதும் முக்கியமானதும் என்ற வாதம் இதனாற் தேவையற்ற ஒன்றாகிவிடும்.  சில சமயங்களிற் தரவுகள் செல்லுபடியானவையாக இருப்பினும் மொழி காரணமாக அர்த்தமற்றதாகிவிடும். குறிப்பாக மொழிபெயர்ப்புச் செய்யப்படும் போது ஒரு புனைவு செய்யப்பட்ட தரவாக உருவாகக்கூடும்.

இலங்கை பெரும்பான்மையான பௌத்தர்களையும் பிறிதெல்லாவற்றிலும் மேலாகத் தங்கள் மதத்தை மதிக்கும் மக்களைக் கொண்டுள்ளது. புனைவுச் செய்தி பற்றி பௌத்தம் எதையாவது கூறியுள்ளதா? புனைவுச் செய்தி பற்றி ஏதாவது பொருள் விளக்கம் அல்லது போதனை பௌத்தத்தில் உள்ளதா?  கற்பனைச் செய்திகள் மிகையாக இருக்கும் இவ்வுலகில் என்றென்றும் நிலைத்திருக்கும் உண்மையைத் தேடுவதே இந்தத் தத்துவத்தின் முதல்மூலமாகவுள்ளது. போதி மரத்தின் கீழ் வீற்றிருந்த சித்தார்த்தர் வாழக்கையின் உண்மை பற்றிப் புரிந்துகொண்டு “ஞானோதயம்” பெற்ற பின்னர் கௌதம புத்தரானார்.

கௌதம புத்தர் இப் பொன்மொழிகளை 2500ற்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னர் போதித்தார்.  அத்துடன் அவைகள் இடையறாத வகையிற் பொருத்தமானவையாக இருக்கின்றன.  இவை சிக்கலானவையாகவோ புரியாத புதிர்களாகவோ இல்லை.

“கலாமர்களே, நீங்கள் ஐயுறவு கொள்வது, அவநம்பிக்கை உற்றிருப்பது முறைப்படி சரியாகும்.  ஐயுறவு கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று உங்களிடம உள்ளமையினாற் தான்   உங்கள் மத்தியில் அவநம்பிக்கை தோன்றியுள்ளது. வாருங்கள் கலாமர்களே, மீண்டும் மீண்டும் கேள்விப்படுவதன் மூலம் நீங்கள் அறிந்து கொண்டதைக் கொண்டோ  பாரம்பரியங்களிலிருந்தோ அல்லது வதந்தியிலிருந்தோ அல்லது மறை நூல்களிற் காணப்படுபவையிலிருந்தோ அல்லது ஊகத்திலிருந்தோ அல்லது வழக்கத்திலிருக்கும் மூதுரைகளிலிருந்தோ அல்லது பகட்டுத்தனமான நியாயப்படுத்தலில் இருந்தோ அல்லது தீவிரமான சிந்தனையின் ஒரு பக்கச் சார்பான கருத்திலிருந்தோ அல்லது பிறிதொருவரிடம் இருக்கக்கூடிய ஆற்றலில் இருந்தோ அல்லது கிடைக்கக் கூடிய சலுகையிலிருந்தோ நீங்கள் செயற்பட வேண்டாம்.  மதத் துறவி எங்கள் குரு.  கலாமர்களே, நீங்கள் இவை தீயவை, இவை குற்றங் கூறத்தக்கவை, இவை அறிஞர்களினாற் கண்டிக்கப்படுபவை, இவற்றை ஏற்றுப் பின்பற்றினால் அவை கேட்டுக்கும் துன்பத்திற்கும் இட்டுச் செல்லும் என நீங்களாகவே தெரிந்து கொண்டால் அவற்றைக் கைவிடுங்கள்.

இந்த விளக்கங்களை “மதிப்பிற்குரிய மதத் துறவிகளிலும் பிராமணர்களிலும் யார் உண்மையைப் பேசினார்கள் அத்துடன் எது பொய்” என்று கேசபுற்ற வாசிகளான கலாமர்கள் கேட்டதற்குப் பதிலாகப் புத்தபிரான் போதித்தவையாகும். கேசபுற்ற விற்கு வருகை தந்த பல்வேறு மதத் துறவிகள் சமய சித்தாதந்தங்கள் பற்றி விளக்கங்கள் கூறிய போது அவர்களுக்கு ஐயுறவுகளும் அவநம்பிக்கைகளும் ஏற்பட்டன.

இதனை நாங்கள் ஒரு அடிப்படை வரைவிலக்கணமாக செதுக்கினால் புனைவுச் செய்தியை உருவாக்குதல் பொய் கூறுவதாகும். நீங்கள் உங்களுக்கும் உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பொய் சொல்ல முடியும். நடப்புக் காலத்தில் சமூக ஊடகத்தை விரைவாக அணுகக் கூடியதாய் இருப்பதனால் ஒருவரைச் சூழ உள்ளவர்களின் தொகை 1000 திற்கும் அதிகமாக இருக்கிறது.  இதன் கருத்து யாதெனில் நீங்கள் முழுச் சமூகத்தையும் தவறாக வழிநடத்துகிறீர்கள். உண்மை தொடர்பில் கௌதம புத்தர் மிகவும் கண்டிப்பாக இருந்தார். அது வண.றாகுல (சித்தார்த மறுபெயர் கௌதம புத்தரின் மகன்) விற்குக் கூறப்பட்ட அம்பலத்திக்க-றாகுலோவாத சுற்றவில் உள்ள உரையாடலில் அழுத்தி உரைக்கப்படுகிறது.

இலங்கையிலுள்ள பௌத்தர்கள் பாலர் வகுப்புகளில் “பொய் சொல்லாதே” அல்லது “பொய் சொல்வது தவறு” போன்ற கதைகளைக் கவனத்திற் கொண்டிருப்பதால்  பொய்யானவற்றை இட்டுக்கட்தலின் பின் விளைவுகளைப் பற்றிக் கற்றுக்கொண்டிருப்பர்.

சமயத் தலைவர்கள் மற்றும் சமயரீதியான நிறுவனங்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்தினால் நாங்கள் இந்தப் பாடங்களை ஒரு விரிந்த அளவிற் கொண்டு செல்ல முடியும். புனைவுச் செய்தி பற்றிய சட்டரீதியான வழிமுறைகளின் மீது மட்டும் பயிற்சிப் பட்டறைகள் கவனஞ் செலுத்துமானால் புனைவுச் செய்தியை கையாள்வதற்கு இவை போதுமானவையாக இருக்கமுடியாது. கொரோனா வைரஸ் காரணமாகப் பலர் இலங்கைத் தெருக்களில் இறந்து கிடந்தனர் எனக் கூறும் புனைவுச் செய்தி ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக 28 வயதுடைய ஒருவர் 2020 நவம்பர் 15ல் கைது செய்யப்பட்டார்.  இப் பிரச்சனையைக் கையாளக்கூடிய தெளிவான அணுகுமுறையொன்றை முயற்சித்தால் என்ன?  குற்றச் செயல்களால் ஏற்படும் எதிர்த் தாக்கங்களை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும்போது மனோரீதியாக அவர்கள் உறைந்து விடுவார்கள். இதன் காரணமாகத்தான் எங்கள் சமுதாயத்தில் ஒழுக்கம் இந்த மட்டத்தில் உள்ளது.  மக்களின் விருப்பத்திற்கு உரியதும் அவர்களுக்கு அண்மையில் இருப்பவையுமான மதபோதனைகள் புனைவுச் செய்திகளுக்கு எதிராகப் போராடக்கூடியவையாக இருக்க முடியாதா?

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts