“புண்படுத்தும் ஓவியங்களால் பிரயோசனம் இல்லை”
உபேக்ஷா உடுவரல்லா
மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தூண்டாத வகையிலான பொறுப்புணர்வுடனான சித்திரங்களை வரவேற்க வேண்டும். இசையைப் போன்றே சித்திரங்களும் சர்வதேச மொழியாக கருதப்படுகின்றது. கோடுகளும் வர்ணங்களும் சித்திரத்திற்கு அழகை தருவாதாக அமைவது போன்றே நுண்கலைக்கும் மதிப்பை கொடுப்பதாக அமைகின்றது. ஆனாலும்…
“மக்கள் மத்தியில் உடைந்துபோயுள்ள தேசிய ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் கட்டி எழுப்பி அவற்றை பலப்படுத்தும் வகையிலான சித்திரங்களும் ஓவியங்களும் வரையப்படுமானால் இலங்கை அதன் மூலம் நன்மையடையும்” என்று கிராகம நுண்கலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் சால்ஸ் தேவானந்த குறிப்பிடுகின்றார். நாடளாவிய ரீதியல் சுவர்களில் சித்திரம் வரையும் ஆர்வம் ஏற்பட்டு வருவதாகவும் இந்த ஆர்வத்தையும் உணர்வையும் கண்காணிக்கும் வகையில் சில ஒழுங்குவிதிகள் முன்வைக்கப்பட வேண்டும் என்பது அவரது கருத்தாகும்.“ இல்லாவிட்டால் சில சித்திரங்களும் ஓவியங்களும் இன நல்லுறவை பாதிப்பதாக அமைந்து விடலாம்”. மக்களை ஒற்றுமைப்படுத்துவதை விட பிரித்து தூரமாக்குவது மிகவும் இலகுவானதாக இருந்த வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார். கட்டு மரத்திற்காக அவருடன் நடத்திய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கட்டுமரம் : கிராமங்கள், நகரங்கள், சன நெரிசல் மிக்க இடங்கள் என்று அனைத்து இடங்களுக்கும் வேறுபாடு இன்றி சித்திரம் வரையும் ஆர்வம் பரந்து விரிந்து சென்றுள்ளன. இந்த சித்திரம் வரையும் ஆர்வம் குறித்த உங்களது கருத்து என்ன?
மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைத் தூண்டாத வகையிலான பொறுப்புணர்வுடனான சித்திரங்களை வரவேற்க வேண்டும். இசையைப் போன்றே சித்திரங்களும் சர்வதேச மொழியாக கருதப்படுகின்றது. கோடுகளும் வர்ணங்களும் சித்திரத்திற்கு அழகை தருவாதாக அமைவது போன்றே நுண்கலைக்கும் மதிப்பை கொடுப்பதாக அமைகின்றது. ஆனாலும் ஏற்பட்டுள்ள ஆர்வத்தில் நன்மை தீமை ஆகிய இரண்டு பக்கங்கள் உள்ளன. தற்போது இதனால் ஏற்பட்டுள்ள சமூக ரீதியான அதிர்வலைகள் காரணமாக எமது இளம் ஓவியர்கள் சித்திர களைஞர்கள் ஆகியோர் சரியான முறையில் வழிநடத்தப்பட வேண்டும். சமூகங்களை ஒன்றிணைப்பதற்காக கலைஞர்கள் குறிப்பாக ஓவியர்கள் ஒன்றுபட வேண்டும். மதங்கள் அல்லது இனங்களுக்கிடையில் முரண்பாடுகளையும் புண்படுத்தல்களையும் ஏற்படுத்தும் விதமான சித்திரங்களால் எந்தவிதமான பலனும் கிடைப்பதில்லை. சிங்களம், தமிழ் முஸ்லிம் என்ற உணர்வுகளை இந்த சித்திரங்கள் பிரதிபலிக்க வேண்டும். இன,மத அடிப்படையிலான முரண்பாடுகளை தோற்றிவிக்காத வகையிலான பொதுப்படையாக சித்திர வெளிப்பாடுகளை நாம் வரவேற்க வேண்டும்.
கட்டுமரம் : – சித்திரங்களால் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடியதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?
சிங்கள பௌத்த கலாச்சார பாரம்பரிய மரபுகளை வெளிப்படுத்தும் வகையிலான சித்திர வேலைப்பாடுகளை வரைவதில் பௌத்த பிக்குமாரே முன்னின்று செயல்பட்டுள்ளனர். இது ஒரு நல்ல போக்காக தென்படவில்லை. கௌதம புத்தர் சிங்கள பௌத்தத்தை போதிக்கவில்லை. அனைத்து மதங்களுக்கிடையிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் சகிப்புத்தன்மையை அவர் போதித்தார். புத்தருடைய போதைனகளை பின்பற்றி நடக்காதவர்களை நாம் பௌத்தர்களாக கருத முடியாது. புத்தரது போதனைகளை செவிமடுத்த பின்னரே அவர்கள் பௌத்தர்களாக மாற வேண்டும். சாதிகள் யாராக இருப்பார்கள் என்று வசெத்த பிரஹ்மன புத்தரிடம் வினவிய போது சாதி என்பது ஒரு சமூகமாக வாழக்கூடிய அனைவரும் ஒரே சாதியினர் என்று புத்தர் பதிலளித்தார். உண்மையான பௌத்தமானது சிங்கள பௌத்தம் என்ற அடிப்படையில் வரையறுக்கப்பட்டதல்ல. பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் சமூகத்திற்கு பிரகாசத்தை ஏற்படுத்தவதே சிறந்த பௌத்த செயற்பாடாகும். எல்லா இனங்களுக்கும் இடையில் சிறந்த சமூக நோக்கத்தை வெளிப்படுத்தக்கூடியதே பௌத்த மத கோட்பாடுகளாகும். கார்ல் மர்க்சின் கோட்பாடுகளுக்கு மிகவும் நெருக்கமானதாக பௌத்த சிந்தனைகள் உள்ளன. ஆனாலும் புத்தர் மிகவும் விஞ்ஞான அடிப்படையிலான சிந்தனைகளை முன்வைத்துள்ளார். சார்ல்ஸ் டாவின்சிக்கு முன்னரே புத்தர் சமூக மாற்ற சிந்தனையை முன்வைத்துள்ளார். சமூக உடமைவாதத்தை கார்ர்ல் மார்க்சிற்கு முன்னர் முன்வைத்தவரும் புத்தராவார்.
எவ்வாறாயினும் இந்த விஞ்ஞான தத்துவ கோட்பாடு இன்று தவறானதாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. புத்தரின் உண்மையான போதனைகளை சமூகத்தின் முன்னிலையில் கொண்டுவருவதென்பது மிகவும் நெருக்கடியானதாக இருந்து வருகின்றது. நாம் தெகொல்தொருவ என்ற இடத்தில் வரையப்பட்டுள்ள சித்திரத்தின் மீது அவதானத்தை செலுத்தினால் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள முடியும். அந்த சித்திரம் “மாரபராஜய” என்று பெயரிடப்பட்டிருக்கின்றது. புத்தரை மிக மோசமான படையயொன்று தாக்கிய சம்பவத்தை நினைவு கூறுவதாக இருக்கின்றது. நாம் காணும் ஒரு விடயம்தான் புத்தரை யாரையும் பழி வாங்கும் எண்ணத்துடன் பார்ப்பதை விட்டு விட்டு அன்புடனேயே நேசித்திருக்கின்றார். இந்த வழியில் சிந்தித்தால் தோற்கடிக்கப்பட்ட மரணங்களானது ஒரு யுத்தமாக இல்லாது முரண்பாட்டை தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகும். யுத்தமானது அன்பு, காருண்யம், விட்டுக் கொடுப்புடன் வெற்றிகொள்ளத்தக்கதாகும். இந்த அடிப்படையில் சுவரோவியங்கள், சித்திரங்கள் மனித வாழ்க்கைக்கான நல்ல பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும். சித்திரங்களில் ஒரு போதும் மத தீவிவரவாதம், இனவாதம், ஏனைய இனங்களை பரிகாசிக்கும் விதம் போன்ற உணர்வுகள் வெளிப்படுத்தக் கூடாது.
கட்டுமரம் : – இந்த பார்வையில் யுத்த வரலாறுகளை சித்திரங்களில் எவ்வாறான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
துட்டகைமுனுவுக்கும் எல்லாள மன்னனுக்கும் இடையிலான யுத்தமானது இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் அர்த்தம் கற்பிக்கப்படும் யுத்தமாக திரிபுபடுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறாக சமூக அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தாமல் நாம் மிகவும் அதானமாக செயற்பட வேண்டும். வரலாற்று ரீதியாக நடைபெற்றுள்ள யுத்தங்கள் பற்றிய கருத்தோட்டங்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதை சித்திரங்கள் கருப்பொருளாக கொண்டதாக அமைவதாக இருந்ததால் ஏனைய யுத்தங்களான தந்துரை அல்லது கன்னொருவை யுத்தங்களாக ஏகாதிபத்திய வாதிகளை தோற்கடிப்பதற்காக நடத்தப்பட்ட யுத்தங்களை வரைந்து மக்கள் மத்தியில் தேசிய உணர்வை ஏற்படுத்த முடியும்.
கட்டுமரம் : – நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு சிற்நத சந்தர்ப்பமாக இந்த வீதியோர சித்திரங்களை நாம் எவ்வாறு பயன்படுத்த முடியும்.?
இப்படியாக சித்திரங்கள் ஊடாக சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலான சாதகமான போக்கை கொண்ட செய்தியை இதன் ஊடாக மக்களுக்கு வழங்க முடியும். கிராமிய மற்றும் நகர மத்திய இடங்களில் சித்திர களைஞர்;கள் குழுக்கள் இணைந்து ஒரு சங்கத்தை ஏற்படுத்த முடியும். சித்திரம் வரையக்கூடிய ஒரு குழுவுடன் இளம் முஸ்லிம் யுவதியொருவர் இணைந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவரும் பொளத் பிக்குவும் ஒன்றாக இருந்து சித்திரம் வரைவதை அவதானிக்க முடிந்தது. இது நல்லிணக்கமாகும். நாம் அதனை திட்டமிடுவதாக இருந்தால் அது செயற்கையானதாக மாறுகின்றது. உடன்பாடானது சில நிகழ்ச்சிகளின் ஊடாக கட்டியெழுப்பப்படுவதாக இருந்தால் அது உண்மையானதாக அமைவதில்லை. நாம் நிறம், இனம் என்ற அடிப்படையில் எங்களுக்கிடையில் வேறுபாடுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளோம். சிங்களவர்கள் சிவப்பு நிறத்தையும் தமிழர்கள் ஓரஞ்சு நிரத்தையும் முஸ்லிம்கள் பச்சை நிறத்தையும் அவர்களது இனங்களுக்கான நிறமாக கருதுகின்றனர். அவை தனிப்பட்ட அடிப்படையில் விருப்பத்திற்குரிய நிறங்களாகும். நாம் வர்ணங்களை ஒன்றாக கலந்து சித்திரம் வரைந்து அழகை ஏற்படுத்துவது போன்று இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் கலந்தவர்களாக செயற்பட ஆரம்பிக்க வேண்டும். இதனை நாம் சரியாக புரிந்துகொள்ளாத வரையில் எத்தனை செயலமர்வுகளை நடத்தினாலும் அதனால் இன நல்லிணக்கம், ஒற்றுமை, சக வாழ்வை கட்டியெழுப்புவதில் உரிய பிரதிபலன் கிடைப்பதில்லை.
The article was originally published on the catamaran.com.
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.