கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

பலவந்த சடலம் எரிப்பு : நாம் மோதும் இடம் எது?

மதிப்பும் மரியாதையும் எங்களது வாழ்க்கையை மேம்படுத்துகின்றது. மிருகங்களில் இருந்து இந்த பண்பு வேறுபடுகின்றது. இந்த பண்பானது மனிதனுக்கு மனிதன், மதத்திற்கு மதம் வேறுபடுவதாக அமைகின்றது. மனித நேய பண்புகளானது எங்களை ஒருவரோடு ஒருவர் ஒன்றிணைப்பதாக அமைவதோடு மற்றவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பதாக அமைகின்றது. கொவிட் 19 வைரஸ் தொற்று எங்களது வாழ்க்கையை தலைகீழாக மாற்றி இருக்கின்றது. பல உயிர்களை பலியெடுத்திருக்கின்றது. மக்களது வாழ்க்கையையும் அழித்துவிட்டது. எங்களது இருப்பை பாதுகாப்பதற்காக பின்பற்றி வந்த பலவிதமான மனித நடத்தை பண்புகள், ஒழுக்கத்தையும் இந்த செயற்பாடானது முழுமையாக மாற்றியமைத்து விட்டது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பின் பிரிவு 14 (1)(F) ஆனது மற்றவர்களது கலாசாரத்தை ஊக்குவித்து மக்கள் சுதந்திரமாக வாழ்வதையும் உறுதி செய்கின்றது. இனம், மதம், என்ற வேறுபாடு இன்றி இந்த சுதந்திரமானது அனைத்து பிரஜைகளுக்கும் உரித்தானது என்று அரசியல் அமைப்பு குறிப்பிடுகின்றது.

இலங்கை அரசாங்கமானது அதன் நம்பிக்கையின் அடிப்படையில் கொரொனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் அனைவரது உடல்களையும் தகனம் செய்யுமாறு அறிவித்திருக்கின்றது. இந்த நாட்டின் மொத்த சனத்தொகையில் 9.75% வீதமானவர்கள் முஸ்லிம்களாவர். அவர்களது நம்பிக்கைக்கு மாற்றமான முறையில் கொரொனாவால் மரணமடையும் முஸ்லிம்களது சடலங்கலையும் எரிப்பதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நம்பிக்கையின் படி மரணித்தவர்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதோடு அவர்கள் இறுதித் தீர்ப்பு நாளில் கேள்வி கணக்கு விசாரணைக்காக இந்த மண்ணில் மீண்டும் எழுப்பப்படுவதாக நம்புகின்றனர். கத்தோலிக்கர்களும் இந்த விடயம் தொடர்பாக அவர்களது எதிர்ப்பை வெளியிட்டு இருக்கின்றனர். அண்மையில் சிலாபம் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பாக அந்த நபரின் தாய் வீதிக்கு இறங்கி எதிர்ப்பை வெளியிட்டமையையும் நாம் கண்டோம். கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இவ்வாறு கொரோனாவை காரணமாக வைத்து அரசியல் ரீதியாக தண்டிப்பதாக அல்லது பழிவாங்கப்படுவதாக கருதுகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க இறந்த சடலங்களை எரிப்பதற்காக இந்த சமூகங்களிடம் இருந்தும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை சவப் பெட்டிக்காக அறவிட்டு வருவதாலும் மக்கள் கவலை அடைந்திருக்கின்றனர். ஒருவரின் அன்புக்கும் கருணைக்கும் பாத்திரமான ஒருவர் மரணமடைந்துவிட்டால் அவரது சடலத்தை நெருப்பில் எரிப்பதானது எத்தகைய மன வேதனையை ஏற்படுத்துகின்றது என்பதை அவர்களால் தான் உணர முடிகின்றது. அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு நெருக்கடியில் வாழும் மக்களிடம் அரசாங்கம் சவப் பெட்டிக்காக ஆயிரக்கணக்கில் பணம் கேட்டால் அவர்களால் எவ்வாறு பணம் செலுத்த முடியும்.

சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாதது ஏன்?

தோற்று நோய்களால் பீடிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை புதைப்பதால் அந்த சடலங்களில் இருந்து வைரஸ் கிருமிகள் வெளியில் பரவலாம் என்பதால் அதனை தடுக்கும் வகையில் சடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்பது விஞ்ஞான ரீதியான காரணமாக சொல்லப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் (WHO) 2020 செப்டம்பர் 04 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையின் படி கலாசார ரீதியான தெரிவு சுதந்திரத்தின் அடிப்படையில் அடக்கமா அல்லது தகனமா என்பதை தீர்மானிக்கும் சுதந்திரம் இருக்கின்றது என்று அறிவித்திருக்கின்றது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சுகாதார பணிப்பாளருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டல்களை பின்பற்றி அடக்கமா தகனமா என்பதை தீர்மானிக்கும் படி கோரி இருக்கின்றது.

கொவிட் 19 தொற்றினால் மரணமடைபவர்களின் சடலங்களை எரிக்க வேண்டும் என்று 06 மாதங்களுக்கு முன்னர் அரசாங்கம் எடுத்த முடிவை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் வழங்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதி தாமதம் அடைவதானது நீதியை மறுப்பதற்கு சமமானதாகும். மறுக்கப்பட்ட நீதிக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா அல்லது சிறுபான்மை இனத்தவர்களின் இறந்த உடல்களை எரித்த சாம்பலின் மேல் தொடர்ந்தும் அரசாங்கம் தங்கி இருக்குமா?

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts