பறவை மாஸ்டரின் கிளிகளுடனான சமாதான பணி
கயான் யாதேஹிகே
“இலங்கை என்பது அனைத்து மத மக்களும் வாழும் ஒரு பல்தேசிய நாடாகும். அவர்கள் அனைவரும் தங்களுக்கான தனித்துவமான கலாச்சாரங்ளைக் கொண்டிருக்கின்றனர். அது நாட்டில் ஒரு தனித்துவமான பன்முகத்தன்மையை உருவாக்குகிறது. இன, மத பிளவுகள் இல்லாமல் அந்த பன்முகத்தன்மையை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள முடிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பன்முகத்தன்மையுடனான எமது பொறுமையின்மை நம்மை அடிக்கடி மூழ்கடிக்கும். அதனால்தான் இந்த சமூகத்தில் திடீரென இன மற்றும் மத மோதல்கள் உருவாகின்றன” என்கிறார் விஜய இலங்ககோன். மக்கள் அவரை ‘பறவை மாஸ்டர்’ என்று அறிவார்கள். அவர் கம்பளையின் கவுதுபிட்டியவின் டொன் சைமன் தோட்டத்திலுள்ள ஒரு வீட்டில் ஆறு கிளிகளுடன் தனியாக வசிக்கிறார். இப்போது 12 ஆண்டுகளாக அவர் இந்த கிளிகளுடன் பணம் ஈட்டி வாழ்ந்து வருகிறார்.
விவேகமும் கீழ்ப்படியகூடியதன்மையும் உள்ள இக்கிளிகள் சராசரி கிளிகள் செய்ய முடியாத அற்புதமான காரியங்களைச் செய்வதன் மூலம் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அலெக்ஸ் அவற்றில் விதிவிலக்கானது. நிறைவேற்று ஜனாதிபதிப் பதவி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அனைத்து ஜனாதிபதிகளையும் அவர்களின் பெயர்களில் இருந்து அடையாளம் காண அதனால் முடியும். பன்னிரண்டு இராசி சின்னங்ளையும் அடையாளம் காண முடியும். அலெக்ஸ் ஒன்றாக அடுக்கப்பட்ட அனைத்து படங்களிலிருந்து சரியான புகைப்படத்தை எடுக்கிறது.
“அலெக்ஸ் மிகவும் விசித்திரமான கிளி. இதனால் எதையும் ஒரே தடவையில் கற்றுக்கொள்ள முடியும். அது சிறியதாக இருந்தபோது பட்டர் குக்கிஸ் பிஸ்கட்களை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும். நான் அதை அதற்கு ஒருபோதும் கற்பிக்கவில்லை. அலெக்ஸ் இலங்கையில் மிகப்பெரியதான அலெக்ஸாண்ட்ரின் வகையைச் சேர்ந்தது. அலெக்ஸுடன் வேறு சில கிளிகளையும் நான் கண்டேன். இது சுட்டி மெனிகே. இது ஒரு லேயார்ட் வகை கிளிகளாகும். புஞ்சி பண்டா ஒரு ரோஸ் வளையம் கொண்ட கிளியாகும். சார்லியும் ஒரு அலெக்ஸாண்ட்ரின் கிளி வகைதான், ஆனால் அது குருடு. இந்த இரண்டும் ஆஸ்திரேலிய காக்டெய்ல். நான் பெண்ணை ருக்மணி என்றும் ஆணை ஜோதிபாலா என்றும் பெயரிட்டேன்.”
பறவை மாஸ்டர் தனது நல்ல நண்பர்களைக் காட்டும்போது, அவர்கள் “ஆம், அது நான்தான்” என்று பதிலளிப்பார்கள். “நான் சில நேரங்களில் அவர்களின் பெயர்களை மாற்றுவேன். நான் தமிழ் பாடசலைகளில் நிகழ்ச்சிகளைச் செய்யும்போது, அவர்களின் பெயர்களை லச்சுமி, பிச்சையப்பா போன்ற பெயர்களாக மாற்றுகிறேன், முஸ்லீம் பாடசாலைகளில் நிகழ்ச்சிகளைச் செய்யும்போது, அவர்களின் பெயர்கள் பாத்திமா, ஃபராஹ் போன்று மாறுகின்றன” என்று அவர் சிரிப்போடு கூறுகிறார்.
“எல்லோரும் தங்கள் கலாச்சாரம் பாராட்டப்படுவதை விரும்புகிறார்கள். நான் ஒரு சிங்கள பௌத்த பாடசாலைக்குச் செல்லும்போது, எனது கிளிகளை அவர்களுக்குத் தெரிந்த பெயர்களில் அழைக்கிறேன். அதனால் அந்த குழந்தைகளுடன் நெருங்கி பழகுவது எளிதாகும். அதற்கு பதிலாக, மற்றவர்களை எமது கலாசாரத்திற்கு மாறுமாறு நாம் கட்டாயப்படுத்தினால், எங்களிடையே உண்மையான பிணைப்பு எதுவும் உருவாவதில்லை. இந்த விடயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு கத்தோலிக்கன். சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவற்றை என்னால் நன்றாக பேச முடியும். நாம் ஒரு பல்தேசிய நாட்டில் வாழ்ந்தால், நாம் மற்றவர்கள் பேசும் மொழிகளை கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு தமிழர் தெற்கே வந்து சிங்கள மொழியில் பேசினால் நாம் எப்படி உணருவோம் என்று இப்போது சிந்தியுங்கள். அதே உணர்வு தெற்கில் இருந்து ஒரு சிங்களவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழில் பேசினால் அவர்களுக்கும் கிடைக்கும். மொழி இரண்டு இனங்களுக்கிடையில் பிணைப்புகளை உருவாக்கும் ஒரு பாலம் போன்றதாகும்” என பறவை மாஸ்டர் கூறுகின்றார்.
விகாரைகள், கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை அவற்றின் சின்னங்களிலிருந்து அடையாளம் காண்பது அலெக்ஸுக்கு ஒரு விடயமேயல்ல. பத்துக்கும் குறைவான எண்களைக் கண்டறிந்து அவற்றில் ஏதேனும் இரண்டை கூட்டுவது அதற்கு மிகவும் எளிதானது. பறவை மாஸ்டர் தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் இந்த திறமைகளை வெளிப்படுத்தி கிளி நிகழ்ச்சிகளை நடாத்தினார். ஆனால் இப்போது, இலங்கையில் கோவிட் -19 நோயின் தாக்கத்தால் அவரது வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
“30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் நாங்கள் பெருமூச்சு விட்டபோது, சஹாரனின் தாக்குதல் நம் நாட்டு மக்களிடையே சந்தேகம், பயம் மற்றும் வெறுப்பை மீண்டும் உருவாக்கியது. அன்றிலிருந்து எனக்கு குறைவான வேலை இருந்தது. இந்த தாக்குதல் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பதற்றத்தை உருவாக்கியது. பின்னர் கோவிட் -19 இன் பிரச்சினை வந்தது. வைரசின் முன்பாக நாம் அனைவரும் மனிதர்கள். நமது இனமும் மதமும் அதற்கு முக்கியமல்ல. கோவிட் -19 இறப்புகளிலிருந்து நாம் அதைக் காணலாம். இந்த யதார்த்தத்தை நாம் புரிந்து கொண்டால், யாரும் இனங்கள் மற்றும் மதங்களுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம் தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் அழிக்க முயற்சிக்க மாட்டார்கள்” என்று நேர்காணலை முடித்தபடி திரு இலங்கோன் கூறினார்.
ගිරව් කැටුව යන මාස්ටර්ගේ සාමදුත මෙහෙවර
Bird Master’s Peace Mission With Parrots