சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

பனைமர எச்சங்களினூடாக நந்திக்கடல்!

கபில குமார காளிங்க

ஷாஹ்நமே(Shahnameh) என்பது கி.மு 10 ஆம் நூற்றாண்டில் பாரசீக கவிஞரான ஃபெர்டோவ்ஸி எழுதிய காவியக் கவிதையாகும். இது பெரிய ஈரானின் தேசிய காவியமாக கருதப்படுகிறது. 1,500 பக்கங்களைக் கொண்ட இது, ஒரு தனிநபரால் தொகுக்கப்பட்ட மிக நீண்ட கவிதைப் படைப்பு என்று நம்பப்படுகிறது. 

ஷாஹ்நமே என்பது மன்னர்களைப் பற்றிய நூல் என்பதுடன், பொதுவாக, உலகில் எல்லா இடங்களிலும் மன்னர்களைப் பற்றிய கதைகள் நிச்சயமாக போர்கள், கொலைகள் மற்றும் எதிரிகளின் தோல்விகள் நிறைந்தவையாகும்.

இந்த கவிதையில் இரண்டு நாயகர்கள் உள்ளனர், அவர்கள், ஷோரப் மற்றும் ருஸ்டம்,  இவர்கள் தந்தையும் மகனுமாவார்கள். அவர்கள் ஒருவருக்கொருவரை அடையாளம் காணவில்லை, தந்தை ஒரு போரில் மகனைக் கொல்கிறார். இந்த அழகான கதை பாரசீக புராணங்களை அடிப்படையாகக் கொண்டது.

உலகப் புகழ்பெற்ற சோஃபோக்லீஸின் ஓடிபஸ் என்ற கிரேக்க சோக கதையில், யாரைக் கொலை செய்கிறோம் என்று தெரியாமல் மகன் தன் தந்தையை கொல்கின்றான். சிங்காபாகு மற்றும் காசியப்ப மன்னனின் கதைகள் போன்ற மகன் தந்தையை கொல்கின்ற பல சம்பவங்கள் வரலாற்றில் உள்ளன.

வரலாற்றாசிரியர்களும் வரலாற்று புனைகதை எழுத்தாளர்களும் போரை இரண்டு வெவ்வேறு கண்ணோட்டங்களிலிருந்து பார்த்தார்கள். புனைகதை எழுத்தாளர், கவிஞர் அல்லது நாடக ஆசிரியர் தனது கற்பனையை வரலாற்றாசிரியர் தவறவிட்ட இருண்ட மூலைகளில் மையப்படுத்தினார். எனவே, யுத்த காலத்தின் கலை மற்றும் இலக்கியம் மக்களின் மனசாட்சியை சித்தரிக்கிறது.

சில நேரங்களில் கவிஞரின் எண்ணங்கள் பொதுவானதாக இருப்பதுடன், மற்ற நேரங்களில் அவை தனித்துவமானதாக இருக்கும். ஒரு சம்பவம் காலம் கடந்து செல்வதற்கு முன்பாக ஒரு கவிதையில் வடிக்கப்படுகின்றது. எழுத்தாளர் அதை அறிக்கையாக அல்லாமல் ஒரு கலைநயமான விளக்கக்காட்சியாக முன்வைக்கிறார்.

வரலாற்றில் கவிதை போரை அடிப்படையாகக் கொண்டது. கவிஞர்களிடையே கருத்தியல் வேறுபாடுகள் உள்ளதுடன், அவர்களில் சிலர் போரை ஆதரிக்கின்றனர். இருப்பினும், பெரும்பான்மையான கவிஞர்கள் போருக்கு எதிரானவர்கள் என்பதுடன், அதன் இருண்ட பக்கத்தைப் பற்றி எழுதுகிறார்கள்.

ஏறக்குறைய அனைத்து கவிஞர்களும் இலங்கையில் முப்பது ஆண்டுகால யுத்தம் பற்றி எழுதியிருக்கின்றனர். அவற்றில் சில போரின் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதுடன், ஏனைய கவிதைகள் போருக்குப் பின்னரான படைப்புகளாகும்.

‘போர் கவிதை’ எழுதும் போது இளம் கவிஞர்கள் முன்நிலையில் இருந்தனர். அவர்கள் இனவாதிகளல்ல என்பதுடன் பரந்த எண்ணம் கொண்டவர்கள் என்பதே இதற்கு காரணமாகும். இந்த கட்டுரையில், நான் இளம் எழுத்தாளர்களின் பல கவிதைகளில் கவனம் செலுத்துகிறேன்.

மலிந்து கவிந்த குமாரசிங்கே தனது கிஹின் என்னங் நமாலி (நமாலிக்கு பிரியாவிடை) கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையின் கருப்பொருளை விவரித்தார்.

தமிழினி ஜெயகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்களின் அரசியல் பிரிவின் (LTTE) தலைவராக இருந்தார். அவர் தனது சுயசரிதையை எழுதியதுடன், சாமிநாதன் விமல் அதனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்தார். 2016 ஆம் ஆண்டில், தமிழினி புற்றுநோயால் இறந்தார். இந்த புத்தகம் அவருடைய மரணத்திற்குப் பின் 2019 இல் வெளியிடப்பட்டது.

தமிழினி சிங்களவர்களால் வெறுக்கப்பட்ட ஒரு நபர் என்றாலும், கவிஞர் மலிந்து கவிந்த குமாரசிங்கே அவரை மிகவும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் பார்த்தார்.

அவரது கவிதையின் பொருள் பின்வருமாறு.

தமிழினி, நீங்கள் சிங்களவர்களைப் போல அதே நிறமுள்ளவர்

ஒரு குண்டு உங்கள் மார்பை துளைத்து பாலை சிதறடித்தது

வாழ்க்கையின் இளமையான காலங்களில் பனி படர்ந்தது

தமிழினி, உங்கள் காலடியில் ஒரு காட்டுமலரை சமர்ப்பிக்கிறேன்

கபிலா எம்.கமகேவின் தெரியும் கோகிலா என்ற போருக்கு பிந்திய கவிதைத் தொகுப்பு பின்வருமாறு.

“மூன்று தசாப்தங்களாக, இலங்கை சமூகம் ஒரு துரதிர்ஷ்டவசமான மனித துயரத்தை எதிர்கொண்டுள்ளது. நாங்களும் கூட போரின் பணயக் கைதிகளாக இருந்தோம். சமூகத்தில் பொதுவான நம்பிக்கை என்னவென்றால், போர் முடிந்துவிட்டது. இருப்பினும், போரினால் ஏற்பட்ட அழிவு சமூகத்தின் மத்தியில் நீடிக்கிறது. இது போரைப் போலவே பரிதாபகரமானது. யுத்தம் நமக்காக எதனை விட்டுச்சென்றது?” இவ்வாறு  ‘தெரியும் கோகிலா’ என்பது இலாப நட்ட கணக்கு பற்றிய கவிஞரின் மீள் உருவாக்கம்.

ஒரு வயதான தம்பதியினர் போர் முடிந்தபின் யாழ்ப்பாணத்தில் உள்ள தங்கள் வீட்டிற்கு வருகின்ற ‘பரமேஸ்வரன் யாழ்ப்பாணத்திற்கு புறப்படுகிறார்’ என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு.

திருமதி பரமேஸ்வரன் அழுதார்

தப்பியிருந்த சுவர்களைத் தொட்டார்

ஒருபோதும் அழாத பரா

உள்ளங்கைகளால் கண்களைத் துடைத்தார்

அவர்கள் பூமி யாருக்கும் சொந்தமில்லை 

என்று சொன்னாலும்; அது அவ்வாறு இல்லை

உங்கள் நிலத்துடனான பிணைப்பு

வார்த்தைகளால் விவரிக்க முடியாது

நினைவுகள் நறுமணமானவை மற்றும் கனமானவை

ஆனால் நீங்கள் அவற்றைப் பிடிக்க முடியாது

விரல்களால் கசிந்தது

ரத்தம் மட்டுமல்ல

‘இளவரசனின் தேடல்’ என்ற கவிதையில், ஒரு மூத்த சகோதரி போரில் தொலைத்த தனது தம்பியைப் பற்றி புலம்புகிறார்.

ஒரு காலத்தில் எண்ணெய் தடை செய்யப்பட்டிருந்தது

ஒரு விளக்கு ஏற்றுவதற்கு கூட

நாமே இறந்துவிட்டோம்

மங்கலான எழுத்துக்களுடன் ஒரு குறிப்பில்

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது

நீ எங்களுக்கு கற்பித்த பாடம்

எங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்தது

சைக்கிள் சக்கரத்தால் இயக்கப்படும் டைனமோவுடன்

அக்கா, நீ கடினமாகப் படி

எங்கள் பெற்றோரை காப்பாற்று

இந்த மரண நேரத்தில்

எப்போதும் உன் வாழ்க்கையை நேசி

நீ அதிகாலை சூரியனை எழுப்பினாய்

வெடிமருந்தின் துர்நாற்றத்தின் கீழ்

ஆழமான கிணறுகளிலிருந்து தண்ணீரை இறைத்தாய்

மிளகாய் செடிகள் பூக்கும் வரை

இது போன்ற அழுகை தொனியுடன் கவிதை முடிகிறது:

தம்பி, நீ எங்கே போயிருக்கிறாய்?

நான் இன்னும் உன்னைத் தேடுகிறேன்

நான் வெற்றிகரமான வாழ்க்கையின் ராணி

இளவரசனை இழந்த ராணி

 இதே போன்ற அனுபவங்கள் 1980 களின் பிற்பகுதியில் நடந்த பயங்கரவாதத்தின்போது தென்பகுதி இளைஞர்களுக்கும் இருந்தன. அங்கேயும் மழை பெய்திருக்கலாம் (எஹேட்டத் வஹின்அதி) என்ற கவிதைத் தொகுப்பில், கவிஞர் சந்துன் பிரியங்கர விதானகே ‘தமிழனின் கவலை’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். அந்தக் கவிதையில், அவர் தனது சமகாலத்தவர்களைப் பார்த்து சிரிக்கின்றதுடன், வழியனுப்புதல்கள் எழுதுவதை நிராகரிக்கிறார்.

மக்களின் தலையில்

குண்டுகள் விழுந்தபோது

அமைதியாக இருந்தவர்கள்

இப்போது எழுதுகிறார்கள் சோகமான கவிதைகளை 

நான் அப்போது கவிதைகள் எழுதவில்லை

இப்போதும் கூட 

தமிழனின் துயரம் விற்பனைக்கு அல்ல

போரைப் புகழ்ந்த கவிஞர்களிடையே

நான் ஒரு மகிழ்ச்சியான கவிஞன்

நீடிக்கும் அமைதியுடன்

இருப்பினும், தான் சத்தமிட்டு ஒப்பாரி வைக்கும்  ஒரு நாள் இருக்கும் என்று கவிஞர் கூறுகிறார்.

போரின் போது, ​​பல இளம் போர்வீரர்களின் சடலங்கள் மூடப்பட்ட சவப்பெட்டிகளில் வீடுகளுக்கு கொண்டுவரப்பட்டன. சந்துன் பிரியங்கர விதானகேயின் கவிதையான யுதா செலுவாவின் கருப்பொருள் அந்த நிகழ்வுதான். ஆனாலும், அவர் கவிதையில் சில முரண்பாடுகளைச் சேர்க்கிறார்.

சவப்பெட்டியில்

மூடப்பட்டிருந்தது நீங்கள் பார்ப்பதைப் போல் 

இறந்த மனிதனின் முகம் மட்டுமே

நான் காண்பது அசிங்கமான நிர்வாணத்தை

மறைக்க முடியாத போரினை

பல போர்க்கால கவிதைகள் உணர்ச்சிவசமானவை என்பதுடன் பொறுமையற்றவை. நண்பர்களால் தலையில் வைக்கப்பட்ட சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் கிரீடத்தை அணிந்த கவிஞர் மஞ்சுள வெதிவர்தன, ‘மாமா லிங்கும​ல நம் வேமி’ (நான் பிறப்புறுப்புகளால் செய்யப்பட்ட நெக்லஸை அணிந்தவன்) என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினார். அவரது கருப்பொருள் பத்து பொலிசாரைகொண்ட குழு  மூன்று குழந்தைகளின் தாயாரை கொடூரமான கும்பலாக பாலியல் வன்புணர்வு செய்து கொன்றமையாகும். அதிர்ச்சியடைந்த கவிஞர், அவனதும் மற்றும் ஏனைய சிங்களவர்களின் ஆண்குறியை வெட்டி, புத்தரின் கால்தடம் இருப்பதாக பௌத்தர்கள் நம்புகின்ற புனிதமான ஸ்ரீபாதாவை அலங்கரிக்க அவற்றினால் ஒரு நெக்லஸ் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அவர் பின்வருமாறு தொடங்குகிறார்:

முன் நெற்றியில் அடிக்கின்ற

மே மாத பௌர்ணமி கண்ணீரை சொரிகின்றது

ஒரு சாளரத்திலிருந்து நீர்த்துளிகள் விழுகின்றன

ஏழு தாமரை-மலர் விளக்குகள்

அருகிலுள்ள வீட்டில் வெசக்கிற்காக தயாரிக்கப்பட்டது

இன்னமும்  ஒளிரவைக்கப்படவில்லை

பின்னராக, அவர் ஒரு முரட்டு ரவுடியைப் போல கத்த ஆரம்பிப்பதுடன் வன்முறைக்கு எதிராக வன்முறையை தனது கவிதை மூலம் பரிந்துரைக்கிறார்.

இந்த கட்டுரையின் நோக்கம் மஞ்சுள வெதிவர்தனவின் கவிதைகளை மீளாய்வு செய்வதல்ல. இருப்பினும், வெதிவர்தனவின் கவிதைத் தொகுப்பில், இந்த குறிப்பிட்ட கவிதையான, ‘தலைப்பு இல்லாத தாய்நாடு’, ஒரு போர் பின்னணியில் இருந்து வரும் பல்வகைத்தன்மையான எதிர்வினைகளின் அடையாளமாகும்.

யுத்தம் முடிவடைந்த பின்னர், தெற்கின் மக்கள் ‘தோற்கடிக்கப்பட்ட நிலத்தை’ பார்வையிட்டதுடன் சுனங்க கௌனரத்னவின் ‘கன்யா தியாவரட எலம்பா’ கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதையான ‘வெள்ளமுள்ளிவாய்க்கால்’ இதுபோன்ற ஒரு வருகையைப் பற்றியதாகும்.

தனது சொற்சித்திரத்தில், சுனந்த தனது பனைமர எச்சம் என்ற வார்த்தையின் மூலம் போரின் அடையாளத்தை உருவாக்குகிறார்.

ஆயிரம் விண்கற்கள் அந்த நிலத்தைத் தாக்கியது போல

சிதறிய எச்சங்கள் சுனாமியை நினைவூட்டுகின்றன

அவை அனைத்தும் உடைந்த சுவர்கள்

அது கடந்த காலங்களில் கூரைகளை தாங்கியிருந்தது

இருப்பினும், வாழ்க்கை உச்சியற்ற பனைமரங்களின் கீழாக தனது தலையை உயர்த்த ஆரம்பித்தது. கடினமான வறண்ட மண்ணை  மண்வெட்டியால் கொத்துவதற்கு முயற்சிக்கும் கரிய நிறமுள்ள மெல்லிய சிறுவனை பற்றி கவிஞர் விவரிக்கிறார்.

அமைதி என்பது எரிந்த நிலத்தை குளிர்விக்கும் மழையாகும். இருப்பினும், கவிஞர் சுனந்த காண்கின்ற பனைமர எச்சங்களுக்கு எதனாலும் உயிர் கொடுக்க முடியாது. பனைமரம் மீண்டும் நாட்டப்பட வேண்டும். அந்தச் சிறுவன் அதற்காக மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்கலாம். அழிவு ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்தப்படக் கூடாது.

கவிஞர் அனுராதா நில்மினி தனது ‘நந்திகடலுக்குப் பிறகு’ கவிதைத் தொகுப்பில் ‘ரிதும் பிரிம்தெதும் (தாக்கப்பட்ட உடல்களை தடவிக் கொடுப்பது)’ என்ற கவிதையில் வடக்கிற்கு விஜயம் செய்தபின் ஒரு மனிதனால் மற்றொரு நண்பருக்கு வழங்கப்படும் விளக்கத்தை பின்வருமாறு சித்தரிக்கின்றார்.

இது, மச்சன், திராட்சை தோட்டமாகும்

பிரபாவின் சிறந்த பண்ணை

கவிதை அவ்வாறு ஆரம்பித்து பின்வரும் வரிகளுடன் முடிகிறது.

மச்சன், இது தான் இறுதியானது

நந்திகடல்நீரேரி

ஊடகங்களில் இளைஞர்களை

இடுப்பு வரை மூழ்கடித்து

எங்களுக்கு சுதந்திரத்தை பெற்றுத்தந்தது

அதன் பிறகு பஸ்

வேறு பல இடங்களில் பயணம் செய்தது

எனக்கு இப்போது நினைவில் இல்லை

எவ்வாறாயினும் உண்மையில்

அந்த பயணத்தை நீ தவறவிட்டுவிட்டாய்.

கவிஞர் சொல்வது போல், பஸ் அதன் பின் எங்கோ சென்றது. கவிதையின் கடைசி வரி முரண்பாடானதுடன் அது கூறுகிறது;

“பஸ்ஸை தவறவிட்டிருக்கக்கூடாது

வடக்கு மற்றும் தெற்கின் நண்பர்கள் ஒன்றாக

அந்த பஸ்ஸை நிச்சயமாக திருப்ப வேண்டும்

மனிதாபிமானத்தின் பாதைக்கு

තල් කවන්ධ අතරින් නැවත දකින නන්දිකඩාල්

Nandikadal As Seen Through Palmyrah Torsos

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts