Uncategorized

பத்தேகமவின் நவீனசிறார்கள், குழந்தைகளைதேடிச்சென்றோம்.

ஹேரத் முதியன்செலாகே  ஆசிரி

இலங்கையில் சமூக முறைமை மற்றும் கிராமிய வாழ்க்கை முறைமை தொடர்பில் குறிப்பிடத்தக்க அந்தஸ்த்து இலக்கியவாதிகள், உளவியலாளர்கள் மற்றும் சினிமாத்துறைக்கும் ‘பத்தேகம’ என்ற பெயரால் உரித்தாக்கப்பட்டது. பத்தேகம என்ற பெயர் பெற்ற சிறு கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட நூலில் மற்றும் சினிமா படைப்புக்களில் கிராமிய வாழ்க்கையில் காணப்பட்ட கடுமையான வடிவம், மனித நடத்தைகள் மற்றும் தொடர்புகளின் வடிவம். மேலும் அது மனிதர்களின் இயல்பானது. இது ஒரு சமூக உரையாடலை சித்தரித்தது. இதனூடாக மக்களின் எளிமையை வெளிப்படுத்த முடிந்தது மற்றும் வாழ்க்கை நிலையின் சிக்கலான தன்மை, அமைதியான பிரதேச சமூக நிலைமைகள் மற்றும் நாட்டுப்புற கலாசாரம் ஆகியவற்றின் வெளிப்படையான எடுத்துக்காட்டாக அமைந்தது.

இருப்பினும் தற்போது பத்தேகம பகுதிக்கு பயணம் செய்யும் போது முழுமையான மாறுப்பட்ட பின்னணியை எதிர்கொண்டோம். நவீன முறைமை,பொருளாதாரம் மற்றும் சமூக புரட்சி நிலையை அடிப்படையாகக் கொண்டு பத்தேகம மக்களின் வாழ்க்கை நிலைமை பெரும்பாலும் மாற்றமடைந்துள்ளது.அந்த வாழ்க்கை முறைமையின் மாற்றம் மற்றும் சவால்களை ஆராய்வோம்.

 ‘பத்தேகம’ என்பது இலங்கை சமூகத்தில் ஆரம்ப சமூக வாழ்க்கை முறைமையை குறிப்பிட பயன்படுத்திய பெயர் மாத்திரமல்ல, அது 20 ஆம் நூற்றாண்டின் முதற்காலப்பகுதியில் இருந்து இலங்கை சமூகத்தின் கலாச்சாரம் தொடர்பில் நீண்ட பிணைப்பினைக் கொண்டுள்ளது. இதற்கு முன்னர் பத்தேகம மக்கள் விவசாயத்தை தமது ஜீவனோபாயமாக கொண்ட எளிமையான வாழ்க்கை முறைமையினைக் கொண்டிருந்தார்கள். நீர்நிலை கட்டமைப்பு, தோட்டப் பயிர்ச்செய்கை மற்றும் வனத்துடன் இயைவான வகையில் அவர்களின் வாழ்க்கை முறைமை காணப்பட்டது.

இன்று பத்தேகமவுக்கு செல்லும் போது இன்றை நிலைக்கு மாறாக  சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு உரிமை கோர்பவர்களாக பெண்களும் , மனிதர்களும் இருந்தார்கள். இதற்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தின.

பொருளாதார மாற்றம் மற்றுத் புதிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவதற்கமைய பத்தேகம கிராம மக்களின் வாழ்வியல் அவர்களின் பரந்துப்பட்ட வாழ்க்கை முறைமையுடன் தொடர்புப்பட்டுள்ளது.புதிய வர்த்தகம், கிராமிய நடவடிக்கைகள் மற்றும்  சிறு வர்த்தகங்கள் அபிவிருத்தியடைந்தன. கமத்தொழிலுக்கு மேலதிகமாக கிராமிய வர்த்தகங்கள் மற்றும் சேவை துறைகள் ஊடாக தொழில் வாய்ப்புக்கள் தோற்றம் பெற்றன.

கற்ற சமூகம் மற்றும் கல்வி முறைமை அபிவிருத்தியடைந்ததுள்ளது. கல்வித்துறையின் முன்னேற்றத்துடன் அன்று கீழ்நிலையில் இருந்த பத்தேகம  மக்களை இன்று காண முடியவில்லை. தேசிய கல்வி திட்டத்தின் கீழ் கல்வி கற்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.இதனூடாக புதிய  திறன் மற்றும் அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள பத்தேக பகுதி மக்களுக்கு முடிந்துள்ளது. பிறிதொரு கதைக்கு அடித்தளமிட்ட கிராமத்தில் காணப்பட்ட காலணித்துவ ஆட்சிமுறைமை,  மனிதர்கள் மத்தியில் காணப்பட்ட சமூக புரிந்துணர்வுகளுக்கிடையில் பாரிய மாற்றத்தை கண்டுக்கொள்ள முடிந்தது.

தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் கிராமத்துக்குள் சாதாரண மட்டத்தில் காணப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு கிராமத்துக்குள் மக்களின் வாழ்க்கை நிலைமை முழுமையாக மாற்றமடைந்தது.

தகவல் மற்றும் தொடர்பாடல்  தொழில்நுட்பத்தின்  முன்னேற்றத்தினால் பத்தேகம மக்களுக்கு உலக நடப்புடன் தொடர்புபட முடிந்தது. நவீன இளம் தலைமுறையினரின் சிறு பிள்ளைகள் கூட முகப்பு புத்தகம், வீடியோ விளையாட்டுக்கள் மற்றும்  இணையத்தளத்தை அன்றாட செயற்பாடுகளில் ஒரு அங்கமாக கொண்டுள்ளனர். புதுக்கதைகளுக்குள் உள்ள லெனாடர் உல்ப் முறைமையில் காணப்பட்ட குறைவளவான  வசதிகளை காட்டிலும்  இன்று கிராமத்துக்குள் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியடைந்துள்ளன.

தொடர்புகள் மற்றும் சமூக குழுக்களுக்கிடையிலான தொடர்பு நிலைமை தொடர்பில் ஆராய்கையில் கடந்த காலங்களில் கிராமத்தில்  ஆழமான தொடர்புகள் காணப்பட்டன. இருப்பினும் புதிய  தொழில்நுட்ப விருத்தியுடன் இணக்கமான தொடர்புகள்  வரையறுக்கப்பட்டன. சுற்றுச்சூழலுக்கு இணக்கமான வாழ்க்கை முறைமைக்கு பதிலாக  வர்த்தக தொடர்பு நிலைமை அதிகரிகமாயின. குலத்தை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்ட இந்த சமூக நிலைமை  இன்றளவில் சமூக நிலைமை மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட முடியும்.

இளம் தலைமுறையின் புதிய விமர்சகர்களின் செல்வாக்கு, புதிய தலைமுறையினரை தொழில்நுட்ப உலகுக்கு இலகுவாக கொண்டு செல்லும்.சமூக ஊடகங்கள் அவர்களின் வாழ்க்கையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். பாரம்பரிய குணங்கள் மாத்திரமல்ல, புதிய விமர்சகர்களும் தோற்றம் பெற்றுள்ளனர். குறிப்பாக இடப்பெயர்வின் காரணமாக இளம் சமூகம் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளது.

அனைத்து மாற்றங்களும் சிறந்த பிரதிபலனை அளிக்கும் வகையில் மாற்றமடைந்துள்ளன. எந்த சமூகமும்  பூரணமான நிலையில் வெற்றிப்பெறாத நிலையில்  பத்தேகம கிராம மக்கள் பொருளதார மற்றும் சமூக சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சமனிலையற்ற வருமான பகிர்வு

புதிய பொருளாதார துறையில்  அதிகளவிலான வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் நிலைமை காணப்படுகின்ற நிலையிலும் ஒருசில சமூக குழுக்களுக்கு மத்தியில் மிகவும் மோசமான ஏழ்மைநிலை இருப்பதை காணமுடிகிறது.

சுற்றுச்சூழல் அழிவு

புதிய செயற்திட்டங்கள் மற்றும் தொழிற்றுறை முதலீட்டின் அடிப்படையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. காடழிப்பு மற்றும் நீர்நிலைகள் அழிப்பு பிரதான சிக்கல்களாகும்.

காட்டு விலங்குகளினால் ஏற்படும் பாதிப்பு

கிராமத்துக்கும், விளைநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் காட்டு விலங்குகள் தொடர்பில்  விவசாயிகள், பெருந்தோட்ட பயிர்ச்செய்கையாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். காட்டு யானைகள், மயில்கள் மற்றும் குரங்குகளால் பயிர்ச்செய்கைகளுக்கும், சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து அரச நிறுவனங்கள் மற்றும் அரச உத்தியோகஸ்த்தர்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்பது  கிராமத்தவர்களின் வலியுறுத்தலாகும்.

பத்தேகம என்று பெயரிடப்பட்ட பகுதி சமூகப் பரிமாணத்தின் திசையை காட்டுகிறது. தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவது மற்றும் புதிய தலைமுறைக்கு தொழில்பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்துவது முக்கியமானதாகும். அத்துடன் தலைமுறை தொடர்புகள், சமூக விழுமியங்களை மீண்டும் உருவாக்குவதற்கான முயற்சிகள் அவசியமானதாகும்.

பத்தேகம குறிப்பாக ஆராய்ச்சி மற்றும் மானுடவியல் ஆய்வுகளுக்கு ஒரு தனித்துவமான இடமாகவும், சூழலாகவும் காணப்படுகிறது. மேலும் இதனை பாதுகாத்து சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலுக்கு பயனுடையதாக பயன்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

வாழ்க்கையின் ஸ்தீரத்தன்மைக்கும்,நிலைபேறான தன்மைக்கும் இடையிலான அமைதியான உறவினை பத்தேகமவுக்கான இரண்டாவது பயணம் ஒரு படிப்பினையாக குறிப்பிட்டது. சமூக பரிணாம வளர்ச்சிக்கு கடினமான சவால்கள் காணப்பட்டாலும் அது சமூக வாழ்க்கையில் புதிய பரிமாணத்துக்கு வழிகாட்டியாக அமையும். சமூக போக்குகள் புதிய வடிவங்களில் காணப்பட்டாலும், அது மக்களின் வாழ்க்கையின் புதிய நிலைக்கு கொண்டு செல்லும் செயலாக அமையும். அது மிகவும் பயனுடையதாகவும் அமையும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts