Uncategorized

பத்தேகமஅழகுமிக்கசந்திரிவல : பாதுகாப்பதன்முக்கியத்துவம்

தீபா குமுது பிரியதர்ஷனி

இலங்கையின் தென் மாகாணத்தில் ,காலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்தேகம பிரதேசத்தின்  சந்திரவல  அழகு மற்றும் அதன் சிறப்பு, புராதான முக்கியத்தும் ஆகியவற்றால் பிரபல்யமடைந்துள்ளது. அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பொதுவான சூழலில் இது அமைந்துள்ளமை அதன் தனித்துவமாகும். இந்த பகுதியில் வாழும் மக்கள் இந்த இடத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். 

சந்திரிவல என்று அழைக்கப்பட்ட புராதான நீர்நிலைகளை சூழ்ந்த இந்த இடம் வரலாற்று  சிறப்புமிக்கதுடன், மன்னராட்சி காலத்துடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது. இது 1480- 1500 வரையான காலப்பகுதியில் கட்டியெழுப்பப்பட்டது. எதிர்கால சந்ததியினருக்காக  சிறப்பு மற்றும் அபிமானத்தை அடையாளப்படுத்தி தொல்பொருளாக காணப்படுகிறது. இதன் தோற்றம் மற்றும் வெளிப்பாடு குறித்து பல்வேறு மாறுப்பட்ட நிலைப்பாடுகளும், நம்பிக்கைகளும் காணப்படுகின்றன.

சந்திரிவலவின் வரலாறு மற்றும் பிரபல்யம்


சிங்கள மற்றும் தமிழ் திராவிட கருத்து வடிவங்களை முன்னிலைப்படுத்தி சந்திரிவல என்ற பெயர் நீர்நிலைக்கு வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று கூற்றுக்களின் பிரகாரம் இது அரச வாவியாக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் அரச வளங்கள் நிலத்தடியில் மறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த வளங்களை பாதுகாப்பதற்காக ‘கடுக்கன் அணிந்த உயிரினம்’ இருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.


பிறிதொரு சிறப்புமிக்க புராண கதை யாதெனில், காலிங்களின் ஆக்கிரமிப்பின் போது (கி.பி.1215) திராவிட தளபதி சந்திர அங்கிருந்ததாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. சந்திரிவல நீர்நிலை, சந்தரவின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. அவரது சொத்துக்கள் நீர்நிலையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ‘ ஹாடி தமிழ் மலை’ என்ற பெயரிலான மலை சந்திரவினால் பயன்படுத்தப்பட்ட இடமாக கருதப்படுகிறது.
திராவிட தலைவரான சந்திர அந்த புராதன யுகத்தில் பத்தேகம பிரதேசத்தின் சந்திரலவுக்கு மேலான கட்டமைப்பில் ‘ ஹாடி தமிழ் மலை’ என்ற இடத்தில் வாழ்ந்ததுடன் அவரது சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அல்லது திருடப்படும் என்ற அச்சத்தில் அவை இந்த சந்திரவலவுக்குள் மறைத்து வைக்கப்பட்டதுடன், ஆக்கிரமிப்புக்களின் பின்னர் சந்திர என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்படுகிறார். இருப்பினும் இவர் கடுக்கன் என்ற உயிரினத்துக்குள் புகுந்த அந்த புதையலை பாதுகாப்பதாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.


சந்திரவல மற்றும் வகிபாகம்


பத்தேகமவுக்கு அருகில் ஓடும் ஜின் கங்கை இந்த சந்திரவலவின் சிறப்பாகும். ஆண்டுதோரும் வெள்ளப் பெருக்கெடுக்கும் பிரதேசமாக இந்த பகுதி அறியப்படுகிறது. சந்திரவலவின் நீர்நிலையின் நீர்மட்டம், உயர்வாக காணப்படுவதுடன், அந்த பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு அனரத்தத்துக்கான சாத்தியம் கிடையாது. அதேபோல் கடுமையான வறட்சி காலப்பகுதியிலும் இந்த நீர்நிலை வற்றாது. சமூகத்தில் காணப்படும் இவ்வாறான நம்பிக்கையால் மக்கள் சந்திரவல மீது கொண்டுள்ள நம்பிக்கை உயர்வாக காணப்படுகிறது.


இரட்டை நம்பிக்கை மற்றும் அறிவியல் ரீதியிலான பகுப்பாய்வு


சந்திரயலவின் பிரபல்யம் மற்றும் நிலைப்பாடு மற்றும் சமூகத்தில் உள்ள கருத்தியல் ஆகியன அறிவியல் ரீதியிலான ஆராய்ச்சிகளுக்கு முக்கியமானதாக காணப்படுகிறது. இந்த பகுதியில் பாரம்பரியமான பிரபல்யத்துடன் சரியான புராண ஆதாரங்களை சேகரித்தல், அறிவியல் ரீதியிலான பகுப்பாய்வுகளை சான்றுப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானது என்று குறிப்பிடலாம்.


பத்தேகம பகுதியில் அமைந்துள்ள சந்திரிவல வரலாற்று சிறப்பு மிக்கதொரு இடமாகும்.  புழைய நீர்நிலை ஹாடி தமிழ் மலை என்று அழைக்கப்படும்.  மலை இந்த இடத்தின் சிறப்புக்கு பிரதான காரணியாகும். துட்டகைமுனு மன்னன் காலத்தில் சிறப்பாக சேவையாற்றிய பிரதேசமாக இந்த இடம் கருதப்படுகிறது. பழமையான பெறுமதியுடனான இந்த பிரதேசத்தின் அழகையும், தனித்துவத்தையும் பாதுகாப்பது எதிர்கால தலைமுறைக்கு வரலாற்றின் தனித்துவத்தை நிரூபிப்பதற்கு சான்றாக அமையும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts