கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

நகரின் அமைதி கட்டமைப்பு கற்பனை சுவர்களை உடைப்பதற்கான முதல் படியாகிறது

இலங்கையில் ‘நீடித்த அமைதி’ எங்கிருந்து தொடங்குகிறது? இது நமது வரலாற்றின் போது இலங்கையர் என்ற அடையாளத்தை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் நிஜமானதும் மற்றும் கற்பனையானதுமான மதிலை தகர்ப்பதில் இருந்து தொடங்குகிறது. பண்டைய இலங்கையில் பெரும்பாலும் அதிகாரம் சார்ந்த, பிராந்திய பதற்றங்கள் மற்றும் உள் அதிகாரப் போராட்டங்கள் ஒழுக்கக்கேடான ‘பிறருக்கு’ எதிரான நீதி தேடல்கள் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன, கற்பனையான சுவர்களுக்கு அடித்தளத்தை அமைத்தன, அவை ஒருவருக்கொருவர் எதிராக இனங்களைத் தூண்டியது மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான விரோதங்களை வடிவமைத்தன. ஏற்கனவே பிளவுபட்ட தேசத்தை பின்னர் ஆக்கிரமித்த மேற்கத்திய காலனித்துவவாதிகள் இன வேறுபாடுகளை அரசியலாக்குவதன் மூலம் இந்த பிரிவு சுவர்களை பலப்படுத்தினர். ‘பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் கொள்கை’ பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு அதிசய வெற்றிகளை வழங்கிய போதிலும், முப்பது ஆண்டுகால உள் இரத்தப்போக்கிலிருந்து இலங்கை இன்னும் குணமடையவில்லை, முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அதன் வடுக்கள் தொடர்ந்து ரணமாக மாறும்.

சமாதானத்தை நிலைநிறுத்துவது போரின் முடிவில் தொடங்குவதில்லை, மாறாக அது போர் தொடங்கிய இடத்திலிருந்தே தொடங்க வேண்டும். ‘போரின் ஆரம்பம் என்ன’ என்று கேட்கப்படும்போது, ஒரு குழு மக்கள் தங்கள் நலன்களை நிறைவேற்றுவதற்கான ஒரு வடிவமாக வன்முறையை நாடும்போது, அதற்கு பதிலடி கொடுக்கும் போது ஏற்படுவதே போர் என்று ஒருவர் வசதியாக பதிலளிக்க முடியும். கூறப்பட்ட பதில் மோதல் காரணத்தின் பெரிய படத்தின் பின்னால் உள்ள அடிப்படை உண்மையைப் கவனிக்கத் தவறிவிட்டது, அங்கு ஒரு மோதலின் ஆரம்பம் உடல் ரீதியான வன்முறையின் தவறான வெடிப்பு ஆகும், இது பெரும் பனிப்பாறையின் ஒரு முனை மட்டுமே. இலங்கையைப் போன்ற அடையாள அடிப்படையிலான மோதலின் பின்னணியில் இன சமூகங்கள் எதிர்கொள்ளும் பகிரப்பட்ட குறைகள், விரோத மனப்பான்மைகள், நடத்தைகள் மற்றும் அவநம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படை நீரோட்டங்களை பலர் காணத் தவறிவிடுகின்றனர்.

அதில், போருக்குப் பிந்தைய சூழலில் இருந்து அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி சுமூகமாக மாறுவதற்கான செயல்பாட்டில் நகர்ப்புறத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசும் ‘நகர அமைதி கட்டமைத்தல்’ ஒரு சுவாரஸ்யமான அணுகுமுறையாகத் தெரிகிறது. நகர்ப்புற ஆய்வுகள் மற்றும் அமைதிக்கான இலக்கிய படைப்புகளுக்கு இடையிலான இந்த பிணைப்பு நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதற்கான முக்கிய உந்துதலையும் மற்றும் காரணிகளையும் புரிந்துகொள்கிறது, மேலும் அந்த போக்குகளை அமைதிக் கட்டமைப்பின் முயற்சிகளுடனும் இணைக்கிறது.

இலங்கை சூழலில், நகர அமைதி கட்டமைப்பின் முக்கியத்துவத்தை மதிப்பிடுவதற்கான சிறந்த மாதிரியாக கொழும்பு பெருநகரப் பகுதி உள்ளது. கொழும்பு அதன் இடம்பெயர்வு ஈர்ப்பு காரணிகளால் உள் இடம்பெயர்வுக்கான முக்கிய இடமாக உள்ளது, அவை பல தசாப்தங்களாக வளமும் வாய்ப்பும் சார்ந்தவை. எனவே, இலங்கையில் சில இனரீதியாக துருவப்படுத்தப்பட்ட நகரங்களுக்கு மாறாக கொழும்பின் நகரமயமாக்கல் இனரீதியாக ஊக்கமளிக்கப்பட்ட ஒன்றல்ல. இங்கே கொழும்பில், மோதல்களுக்கு கட்சிகளாக உள்ள வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் கூட்டத்தினர், அவர்கள் ஒன்றிணைந்து நெருக்கமாக வாழ நேரிடும். இதன் காரணமாக நல்லிணக்கத்தின் பலனளிக்கும் உரையாடல்களை வெளிக்கொணர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பகிரப்பட்ட குறைகளை, இழப்புகள் மற்றும் வன்முறையின் பகிரப்பட்ட வரலாற்றைக் கொண்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அதே குறைகளை மற்றும் விரோதமான வரலாற்றைக் கொண்டிருக்கும் மக்கள் ஒருவருடன் ஒருவர் உறவாட நிர்ப்பந்தம் ஏற்படுகிறது, அதனால்தான் கூறப்படும் தினசரி ஈடுபாடுகள் இந்த கற்பனையான சுவர்களை உடைக்கக்கூடும் மற்றும் விரோதப் போக்கு மறையக்கூடும். கொழும்பு பெருநகரப் பகுதியில் போக்குவரத்து, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு மற்றும் பொது இடங்கள் ஆகியவை பன்முக கலாச்சார கூறுகளை கொண்ட இடங்களாக இருப்பதால், அங்கு மக்கள் ஒருவருக்கொருவர் இன வேறுபாடுகள் அற்ற மற்றும் தப்பெண்ணங்களை களைந்து பார்க்க முடியும் மற்றும் அவர்களால் பொதுவான வாழ்க்கை போராட்டங்களைக் கொண்ட மனிதர்களாக இணைய முடியும். அனுபவத்தின் மூலம் இந்த எளிய உணர்தல் இன வேறுபாட்டின் கற்பனை சுவர்களை உடைப்பதற்கான முதல் படியாகிறது.

ஆனாலும், உணர்தலால் மட்டுமே அதை உடைத்தெறிய முடியாது; இனத்துவ சிந்தனைக்கு அப்பால் சுற்றுச்சூழல் சீரழிவு, பாலின அடிப்படையிலான வன்முறை, மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளிலிருந்து உருவாகும் பொதுவான குரலைக் கொண்டிருப்பதற்கு மக்களுக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இந்த குரல்கள் ஒலிக்கப்பட வேண்டும், செவிசாய்க்கப்பட வேண்டும், செயல்பட வேண்டும். யுத்த வலயங்களில் நீடித்த அமைதி நிலவுவதில்லை, ஆனால் இது ஒரு பரபரப்பான தெருவில் உருவாக்க முடியும், அங்கு ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் இரண்டு அந்நியர்கள் இன அடையாளங்களின் கற்பனை சுவர்களைக் காட்டிலும் மற்றொரு சக மனிதனை அங்கு பார்க்கிறார்கள்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts