ஜனநாயக அரசை தோற்றுவிப்பதில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் வகிபாகம்
– Srimal DC

தகவலறியும் உரிமை அல்லது தகவலை அறிவதற்கு பிரவேசிக்கும் உரிமை அடிப்படை மனித உரிமையாக பூகோள மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில்> ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) அதற்காக ஒத்துழைப்பு வழங்குகிறது. அது நாட்டின் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கிறது. தகவலறியும் உரிமையானது ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்டு> சிவில் பிரஜைகளும்> அரசாங்கமும் பொறுப்புக் கூறல் மற்றும் தீர்மானம் எடுத்தல் செயற்பாடுகளில் பங்குப்பற்றுவதை உறுதிப்படுத்துகிறது. சிறந்த ஜனநாயகமிக்க ஒரு நாடாக மாற்றமடைவதற்கு இந்த சட்டம் பயன்மிக்க பிரதான பங்கு வகிக்கிறது. இந்த சட்டம் உருவாக்கப்பட்டு ஒருசில ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நடைமுறையின் அதன் முக்கியத்துவம் குறித்து அவதானம் செலுத்துதல் காலத்தில் தேவையாகும்.
தகவலறியும் உரிமை அல்லது பொதுவான தகவல்களுக்குள் பிரவேசிக்கும் உரிமை ஜனநாயகத்தின் அடிப்படையான அங்கமாகும். அது பிரஜைகளுக்கு தமது அரசாங்கம் பொறுப்பு கூறுவதற்கு இடமளிப்பதுடன் தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையை பேணும். இலங்கைக்குள் இந்த உரிமை 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2017 ஆண்டு அமுல்படுத்தப்பட்டு ‘தகவலறியும் உரிமை சட்டம்’ (RTI சட்டம்) என்று பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனூடான சிவில் பிரஜைகள் பொது அதிகாரிகளிடமிருந்து தகவல் கோருவதற்கு உரிமையளிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் மற்றும் அரச அதிகாரிகளிடம் தகவல்களை கோருதற்கும்> அவற்றை பெற்றுக் கொள்வதற்கும் பொதுமக்களுக்கு உள்ள இயலுமை தகவலறியும் உரிமை என்று பொருள்படுகிறது. அது அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் முறைமை முதல் கொள்கை, வரவு செலவுத் திட்டம் மறறும் பொது சேவை தொடர்பிலான விபரங்கள் வரை விரிவான விடயங்களை உள்ளடக்கியுள்ளது. சிவில் பிரஜைகளுக்கு செல்வாக்கு செலுத்தும் காரணிகள் தொடர்பில் அறிவுறுத்தல் மற்றும் உறுதிப்படுத்தி நிர்வகித்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டம் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல் > ஊழல் மற்றும் மோசடிக்கு எதிராக செயற்படுதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட மிகவும் முக்கியமானதொரு சட்டமாகும். இந்த சட்டத்தின் பிரகாரம் இலங்கையின் சகல பிரஜைகளும் பொது அதிகாரிகளிடம் தகவல் கோர முடியும். இந்த உரிமை பிரதேச சபை> அமைச்சு> அரச கூட்டுத்தாபனம் மற்றும் அரச நிதியம் உள்ளிட்ட ஒருசில அரச சார்பற்ற அமைப்புக்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த சட்டத்தின் கீழ் சகல பிரஜைகளும் தகவல் அறிதலுக்கு பிரவேசிப்பதற்கு உரிமையளிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அல்லது தனிப்பட்ட தகவல்கள் என்று விசேட தொகுதிகளில் தகவல்கள் வேறுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏனைய அனைத்து தகவல்களையும் சிவில் பிரஜைகள் கோரும் போது அரச உத்தியோகஸ்த்தர்கள் உரிய தகவல்களை வழங்க வேண்டும். கோரப்படும் தகவல்களுக்கு அரச அதிகாரிகள் முறையாக பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர். சிவில் பிரஜைகள் எழுத்துமூலமாக பொது அதிகாரியிடம் தகவல் கோர முடியும். தகவல் கோரும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் மேன்முறையீடு செய்யும் உரிமை விண்ணப்பதாரருக்கு உண்டு. சட்டத்துக்கமைய தகவல் வழங்குவதற்கும்> ஆலோசனைகள் வழங்குவதற்கும் பொது அதிகாரியினால் பெயர் குறிப்பிடப்பட்டு தகவல் வழங்கும் உத்தியோகஸ்த்தர் நியமிக்கப்பட வேண்டும்.
தகவலறியும் சட்டத்தின் ஊடாக சிவில் பிரஜைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் அது பிரஜைகளை பாதுகாக்கும் ஒரு செயன்முறையாக கருதப்படுகிறது.
சட்டத்தின் ஊடாக தகவல்களுக்குள் பிரவேசிப்பதன் ஊடாக அரச அதிகாரிகள் தீர்மானம் எடுக்கும் முறைமை மற்றும் பொதுமக்களின் வரி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பரைத சிவில் பிரஜைகள் அறிந்துக் கொள்ளலாம். அதனுடாக வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும்.தகவலறியும் உரிமைச் சட்டம் அதிகாரிகள் பொதுமக்களுடன் தரவுகளை பரிமாற்றிக் கொள்வதற்கு தேவையான திறந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளதுடன் நல்லாட்சியை மேம்படுத்தி அவர்களின் செயற்பாடுகளை விசாரிப்பதற்கும் உரிமையளித்துள்ளது.அதனூடாக பொதுமக்கள் அதிகளவான தகவல்களை பெற்றுக் கொள்வதுடன் அரசாங்கமும் பொறுப்புக்கூறலுடன் செயற்பட கூடும்.
சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக் கொள்ளும் போது தகவல்களுக்காக விரிவான பிரவேசம் காணப்படுவது விசேடமானது. ஒருசில தகவல்களை வழங்கும் போது சில வரையறைகள் காணப்படும். தேசிய பாதுகாப்பு> சர்வதேச உறவுகள்> மற்றும் தனிப்பட்ட விபரங்களை பெற்றுக் கொள்வதில் வரையறைகள் காணப்படுகின்றன. இந்த சட்டம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன் உணர்வுபூர்வமான தகவல்களை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துகிறது.
ஜனநாயகத்துக்காக தகவலறியும் உரிமைச்சட்டம் இன்றியமையாத பணிகளை ஆற்றுகிறது. தகவலறியும் சட்டம் இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்தும் பிரதான சக்தியாக காணப்படுகிறது. சிவில் பிரஜைகள் தகவலை அறிந்துக் கொள்வதற்கு பிரவேசிக்கும் உரிமையை வழங்கி> தெளிவுடன் தீர்மானம் எடுப்பதற்கும்> ஜனநாயக செயற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் அரச உத்தியோகஸ்த்தர்கள் அவர்களின் செயற்பாடுகளில் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
தகவலறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் இந்த சட்டத்தின் ஊடாக முக்கியமான பல விடயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளனர். ஊழல் மோசடி, அரச வளங்கள் முறைகேடு மற்றும் அரச செயற்பாடுகளில் பலவீனத்தன்மை உள்ளிட்ட விடயங்களை வெளிக்கொண்டு வருவதற்கு ஏதுவாக அமைந்தது.
தகவலறியும் உரிமை சட்டம் சிறந்த வழிமுறைகளுக்கான ஏற்பாடுகளை கொண்டிருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போது பல சவால்கள் எழுகின்றன. ஒருசில அரச உத்தியோகஸ்த்தர்கள் கோரப்படும் தகவல்களுக்கு பதிலளிப்பதை தாமதப்படுத்துகின்றனர். அத்துடன் இந்த சட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு போதுமான தெளிவு கிடையாது. தகவலறியும் சட்டத்தின் பிரகாரம் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு மேன்முறையீடு செய்வதற்கான காலம் குறித்தும் பொதுமக்களுக்கு போதுமான தெளிவின்மை கிடையாது. அரச உத்தியோகஸ்த்தர்கள் தமது கடமைகள் குறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
தகவலறியும் சட்டம் ஊடாக இலங்கை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் நோக்கிய பயணிப்பது சிறந்ததொரு நிலையாகும். சிவில் பிரஜைகள் தகவல்கள் அறிய பிரவேசித்தல்> அரச அதிகாரிகள் பரிசீலனை செய்தல் மற்றும் சிறந்த நிர்வாகத்தை கோருவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் பெரும்பாலானோர் தகவலறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துவதுடன் இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் இந்த சட்டம் தீர்மானமிக்க பொறுப்புக்களை நிறைவேற்றுகிறது.