கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்ட துஸ்பிரயோகம் பற்றி ஒரு விசாரணை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை 1966ம் ஆண்டு டிசெம்பர் 16ம் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் இவ் உடன்படிக்கை 1976ம் ஆண்டு ஜூன் 11இல் நடைமுறை வலுப்பெற்றது. இலங்கையும் இவ் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டு 2007ம் ஆண்டில் சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டம் (ஐசீசீபிஆர்) இல: 56 சட்டமாக்கியது.

ஐசீசீபிஆர் உறுப்புரை 20(2) இல் பின்வரும் ஏற்பாடு உள்ளது.

‘’பாரபட்சம், பகை அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய தேசிய, இனத்துவ அல்லது மத வெறுப்புணர்வைத் தோற்றுவிப்பதற்கு ஆதரவாகச் செயற்படுவது  சட்டத்தினாற் தடை செய்யப்பட்டுள்ளது”.

தேசிய, இனத்துவ அல்லது மத வெறுப்புணர்வைக் கொண்ட பகையை அல்லது வன்முறையைத் தடைசெய்யும் ஐசீசீபிஆர் எற்பாடுகளை நிறைவேற்றும் கடப்பாடு அரச தரப்பினருக்கு உண்டு.

ஐசீசீபிஆர் சட்டத்தின் பிரிவு 3(1) பின்வரும் ஏற்பாடு உள்ளது.

‘’ஆளெவரும் போரைப் பரப்புதலோ அல்லது பாரபட்சத்தை, அல்லது வன்முறையைத் தூண்டுவதாக அமையும் தேசிய, இன, மத ரீதியிலான பகைமையை ஆதரித்தலாகாது’’

ஐசீசீபிஆர் சட்டம் பாரபட்சம், பகை அல்லது வன்செயலைத் தூண்டும் வகையான தேசிய. இன அல்லது மதப் பகையைத் தோற்றுவித்தலை அல்லது ஆதரவளித்தலை மேல் நீதிமன்றத்தினாற்  தண்டிக்கப்படக்கூடிய குற்றச் செயல் ஆக்குவதுடன் மிகவும் கூடியது பத்து வருட கடுங்காவல் தண்டனை வழங்கக்கூடியதும் ஆகும்.

ஐசீசீபிஆர் சட்டம் பற்றிய பாராளுமன்ற விவாதம்

2007ம் ஆண்டு அக்டோபர் 10 இல் நடைபெற்ற ஐசீசீபிஆர் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பின்போது ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக மந்திரி கௌரவ (பேராசிரியர்) ஜி.எல்.பீரிஸ் அவர்கள் பின்வரும் வாக்கியங்களைப் பாராளுமன்றத்திற் கூறியதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஐயா! ஐசீசீபிஆர் கோட்பாடுகளில் இருந்து கிடைக்கும் அனுகூலம் அல்லது நற்பயனுக்கு வேறு யாரேனும் உரிமை கோருவதற்கு முன்னர், இச் சர்வதேச சாதனத்தில் வெளிப்படுத்தப்பட்ட இக் கோட்பாடுகளின் பயனாளிகள் இறைமையுடைய இலங்கைக் குடியரசின் மக்கள்தான் என்பதை உறுதிப்படுத்துவது இந்த அரசாங்கத்தின் கடமையாகும்.

ஐசீசீபிஆர் சட்டத்தின் பிரிவு 3(1) இன் பயனாளிகளும் “தூண்டுதலின்” பொருள் கோடலும்.

இலங்கையிலிருக்கும் இன-மத பலவகைமை சமுதாயத்தில் மனித உரிமைகளின் மேம்பாட்டிற்காக இனத்துவ மற்றும் மதக் குழுக்களுக்கு எதிராக வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டுவதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் ஐசீசீபிஆர் சட்டத்தின் பிரிவு 3(1). “தூண்டுதல்” என்பதன் பொருள்கோடல் பற்றிய கேள்வி ஒன்று உள்ளது:  எவ்வகையான சூழ்நிலையின் கீழ்  தேசிய. இனத்துவ மற்றும் மத வெறுப்புணர்வு காரணமான வன்முறை தூண்டப்படக் கூடும்?

ஒரு பௌத்த கோவிலில் இருக்கும் வாழ்க்கை முறை பற்றி “ஆர்தா” என்னும்; சிறு கதை எழுதியது சம்பந்தமாக சக்திகா சத்குமாரா என்பவரும் “கருத்தியல் கொள்கைக்கான புனிதப் போர்” என்ற வாக்கியங்களை உள்ளடக்கி சமூக ஊடகத்தில் ஒரு பதிவேற்றத்தை செய்தமைக்காக றம்சி றசீக் என்பவரும் கைது செய்யப்பட்டும் அவர்கள் மீது குற்றப் புலனாய்வும் மேற்கொள்ளப்பட்டது. 2014 மற்றும் 2018 இல் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நிகழ்ந்த கலவரங்களுடன் தொடர்புபட்ட பிரதான நபர்களின் கைதும் (அல்லது) தண்டனையும் இல்லாதமையும் முன்னர் சொல்லப்பட்டவர்களின் கைதுகளும் விசாரணைகளும் தெரியப்படுத்துவது யாதெனில் தேசிய, இனத்துவ மற்றும் மத வெறுப்புணர்வு காரணமாக வன்முறை தூண்டப்படும் சந்தர்ப்பம் பற்றிய பொருள் கோடலுக்கு ஏற்ப ஐசீசீபிஆர் சட்டம் வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐசீசீபிஆர் சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்படுதலின் விளைவாக இச் சட்டம் இயற்றப்பட்ட தேவை மீறப்படுகிறது அத்துடன்; இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 10 இல் வெளிப்படுத்திய சுதந்திரமான சிந்தனை, மனச்சாட்சி மதம்                 ஆகியவைக்கான உரிமையையும் மறுக்கப்படுகிறது.  

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts