கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான கவனக்குறைவும் வெளிப்படைத்தன்மையும்

பாவனா மோகன்

2020 ஆம் ஆண்டு பற்றி குறிப்பிடுவதாக இருந்தால் எந்தவொரு விடயம் தொடர்பாகவும் ஒரு சாதகமான போக்கை அவதானிக்க முடியவில்லை. இதில் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் மிகவும் அவதானத்தை ஈர்த்த விடயமாகும். அடுத்ததாக அவதானத்தை ஈர்த்த விடயமாக அமைவது 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வார காலப்பகுதியில் பதிவாகிய சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான பல முறைப்பாடுகளாகும்.

இந்த விடயங்களில் கடந்த வருடத்தில் மீதியாக இருந்த காலப்பகுதிகளிலும் நல்ல திருப்திகரமான நிலை இருக்கவில்லை. 2020 ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 5000 அளவிலான சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

வருடத்தின் நடுப் பகுதியளவில் பல சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஜூன் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் 06 வயதுடைய ஒரு சிறுமியின் சடலம் கிணற்றுக்குள் போடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அந்த சடலம் தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையின் பிரகாரம் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 16 மாத குழந்தையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஜூலை மாதத்தில் நீர்கொழும்பு பகுதியில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். புத்தளம் பிரதேசத்தில் பாம்பு கடிக்கு ஆளாகி அதிகமான இரத்தப்போக்கு காரணமாக மரணம் அடைந்ததாக தாயாரால் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட 10 வயதுடைய சிறுமி அவரது வளர்ப்பு தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை தெரிய வந்தது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்படும் சம்பவங்களானது இலங்கையில் புதிய விடயம் அல்ல. தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்களாகும்.

1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க சிறுவர் பாதுகாப்பு சபை சட்டத்தின் கீழ் இயங்கக்கூடிய அதிகாரம் கொண்ட தேசிய சிறுவர் பாதூகப்பு அதிகார சபையானது (NCPA)  மேற்கொண்ட அறிவூட்டல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான அறிக்கையிடல்களே அது தொடர்பான குற்றச் செயல்கள் உயர்வடைய காரணம் என்று தெரிவிக்கின்றது. அது தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாட்டாளர்களும் இதே காரணத்தை தெரிவிக்கின்றனர். 

விழிப்புணர்வு மட்டத்தை அளவீடு செய்கின்ற போது அதனை தடுப்பது தொடர்பாக சமூகத்தில் போதுமான அறிவூட்டல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய பொறிமுறை இருக்குமானால் சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக இலகுவாகின்றது. அவ்வாறே முறைப்பாடுகளை மேற்கொள்வதில் இருந்து வருகின்ற தடைகளும் நீக்கப்பட வேண்டும். 

கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக வீட்டுத்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள பொருளாதார கஷ்டங்கள் காரணமாகவும் சிறுவர் துஷ்பிரயோக சூழ்நிலை மோசமாமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. அதே நேரம் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக இன்டர்போல் (INTERPOL) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தற்போதைய கொவிட் 19 வைரஸ் தொற்று கால சூழ்நிலையிலும் கூட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்களை அறிக்கையிடுவது வலைப்பின்னல் தொடர்பாடல் முறைகள் ஊடாக பரிமாறுவது மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான முறைகளை விபரித்தல் போன்ற நடவடிக்கைகளும் இந்த விடயத்தில் ஒருவிதமான அதிகரிப்புக்கு வழிவகுப்பதாக தெரிவிக்கின்றது.

தொடர்பற்ற அரச முறையும் வேறுபாடான பொறுப்புணர்ச்சியும்

உக்கிரமடைந்து வருகின்ற இவ்வாறான “சிறுவர் துஷ்பிரயோக குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பாக தேவையான தேசிய கொள்கை” ஒன்றின் தாமதமும் இந்த நிலைமைகளை மோசமடையச் செய்வதாக இருந்து வருகின்றது. சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஏற்படுத்தப்பட்டு 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அது தொடர்பான கொள்கை ஒன்று கடந்த வருடமே வகுக்கப்பட்டது. ஆனாலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்ததில் இருந்து மேலும் உறுதியாக தெரிய வருவதானவது அரச மட்டத்தில் போதுமான செயற்றிட்டங்கள் இருக்கவில்லை என்பதாகும். 2020 ஆம் ஆண்டின் செயற்றிட்டங்களுக்குள் 2015 ஆம் ஆண்டின் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டிருந்ததோடு 2020 ஆம் ஆண்டின் திட்டங்களும் அந்த வருடத்தின் முதல் காலாண்டு காலப்பகுதியில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டிருந்தது.  அத்துடன் செயற்றிட்டங்களானது மீள் செயற்பாட்டிற்கு முன்னெடுக்கப்பட்டவைகளாகவும் உள்ளன. முதலாவதாக 2015, இரண்டாவது 2016, மூன்றாவதாக 2018 மற்றும் புதிய திட்டமாக 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு காலப் பகுதிக்கானதாகவும் உள்ளன.

அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் வெளிப்படுத்தப்பட்டுள்ள அறிக்கையின் படி சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களின் பதிவுகளாக முன்வைக்கப்பட்டிருப்பவை 2010 ஆம் ஆண்டிற்கான பிற்பட்ட காலப்பகுதிக்குரியவையாகும். 2010  ஆம் ஆண்டில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரையான 04 வருட காலப்பகுதிக்கான அறிக்கையாக வெளிப்படுத்தப்பட்டுள்ள அறிக்கையில் 15/7/2014, என்று பிற்பட்ட கால திகதியின் அடிப்படையிலேயே கையொப்பம் இடப்பட்டிருக்கின்றது. இந்த விடயமானது ஏனைய தகவல்களின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்களை கிளப்புவதாக அமைகின்றது.

அதிகமானவைகள் எந்த பிரிவின் கீழ் செய்யப்பட்ட முறைப்பாடுகள் என்ற தகவலுக்கு பதிலாக அவை வகைப்படுத்தப்பட்டு ஏனையவை என்ற வகைக்குள் உட்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த பதிவிலும் முதலாவதாக முறைப்பாடுகளின் தன்மை, இரண்டாவதாக ஏன் இந்த வகையின் கீழ் மேலதிகமான பதிவாக இலக்கம் இடப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் வினாக்கள் எழுகின்றன. அது தொடர்பாக விசாரணை செய்த போது எனக்கு வழங்கப்பட்ட நம்பத்தகுமான தகவல்களின்படி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் முறைப்பாடுகளின் பதிவில் ஏனையவை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பதிவுகள் தொடர்பாக தகவல் திரட்டல் குறைபாடு காரணமாக இத்தகைய பிரச்சினைகளை எதிர் நோக்கியதாக கூறப்பட்டது.

அதே நேரம் 2017 ஆம் ஆண்டு இறுதி வரையான காலப்பகுதிக்குள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் 17,000 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் விசாரணைக்காக கிடப்பில் தேங்கி இருப்பதாக இவ்வருட ஜூலை மாத அறிக்கை கூறுகின்றது. அவையும் 10 வருடங்கள் பழமை வாய்ந்தவைகளாக உள்ளன. இந்த எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டின் இறுதி அளவில் 25,000 ஆக அதிகரித்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இருந்தாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொதுஜன தொடர்பு அதிகாரியான ஸ்டெலா தகவல் தருகையில் 2019 ஜனவரி முதல் 2020 ஜூலை வரையான காலப்பகுதிக்குள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குற்றச் செயல்கள் பற்றிய 12,968 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவற்றில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்காக 6,149 முறைப்பாடுகள் பொலீசாரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டதோடு 4,372 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. மேலும் 2,447 முறைப்பாடுகள் தொடர்டபாக மாஜிஸ்ரேட் நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் அவரின் அறிக்கை கூறுகின்றது.

ஒரு சாதாரண கணிப்பீட்டின் அடிப்படையில் பார்க்கும் போது வார இறுதி நாட்களையும் உள்ளடக்கியதாக ஒரு நாளைக்கு 24 முறைப்பாடுகள் என்ற அடிப்படையில் அவை பரிசீலனை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.

மத்திய மயப்படுத்தப்பட்ட ஆவணப்படுத்தல் (டேடா பேஸ்) இல்லாத குறைபாடும் பிரச்சினைக்கான அடிப்படையும்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை செய்வதற்கான ஒரே அதிகாரசபை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மட்டுமல்ல. அதன் சில வகையான தகவல்களில் அகில இலங்கை ரீதியான தகவல்கள் உள்ளடக்கப்படாததோடு அவையும் உண்மையான தகவல்களை வெளிப்படுத்துபவையாக இல்லை.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது பதிவிடுகின்ற முறைப்பாடுகளில் பௌதீக, பாலியல் மற்றும் உளவியல் ரீதியான குற்றச் செயல்கள் பற்றிய தகவல்களை மாத்திரமே உள்ளடக்குவதோடு 1929 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக பொலீசாருக்கு விடுக்கின்ற பதிவாகின்ற அல்லது எழுத்து மற்றும் வாய் மூலமான உதவி கோரல்கள் பற்றிய முறைப்பாடுகள் ஆகியவற்றுடன், அரச சார்பற்ற மற்றும் தனியார் அமைப்புக்களால் பெறப்படுகின்ற முறைப்பாடுகள் பற்றிய தகவல்களை புறக்கணித்து வருகின்றது.

எவ்வாறாயினும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு அவற்றை பற்றிய பதிவுகளுக்காக சரியான தொழில்நுட்ப வசதிகள் இல்லை. 

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்களை பதிவிடுவதற்காக மத்திய மயப்படுத்தப்பட்ட ஆவணப்படுத்தல் (டேடா பேஸ்) இல்லாத குறைபாடு காரணமாக நாடளாவிய அடிப்படையில் இதன் உண்மை நிலையை கண்டறிவதற்காக அத்தகைய விடயங்களிலான முன்னேற்றங்கள் பற்றி கணிப்பீடுகளை செய்ய முடியாதிருக்கின்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையானது சில விடயங்களில் அதன் (NCPA Act) சட்டத்தோடு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருப்பதால் தே.சி.பா.அ. சபையின் பிரிவு 14 இற்கமைவாக  அதற்கு மேலதிகமாக சில நடவடிக்கைகளை எடுக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கின்றது. 

உதாரணமாக தே.சி.பா.அ. சபை சட்டத்தின் பிரிவு 29 சிறுவர் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி சில அதிகாரங்களை வழங்குவதோடு பிரிவு 30 அவ்வாறாக அதன் அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் செயற்படும் போது அவர்களுக்கு எதிராக ரீட் மனு தாக்கல் செய்ய முடியாது என்ற விடயத்தை வலியுறுத்துகின்றது. பிரிவு 33, 34, மற்றும் 35 ஆகியன “ஏதாவது சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் செய்யப்பட்டால் குறித்த இடத்தில் விசாரணகளின் போது நீதிமன்றத்தின் தேடலுக்கான முன் அனுமதி இல்லாமல் ஒரு இடத்திற்குள் நுழைவது, கண்காணித்தல், தேடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல், தடயங்களை கைப்பற்றல் போன்ற” அதிகாரங்களை வழங்குகின்றது. 

இவ்வாறான போதுமான அதிகாரங்களுடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை செயல்திறன் கொண்டதாக இயங்க முடியும். ஆனாலும் அதற்கு ஏற்றவகையில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டும். பொலீசார் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் இணைந்த ஒத்துழைப்புடன் குறுகிய காலப் பகுதிக்குள் இந்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் நடவடிக்கைகள் திறம்பட முன்னெடுக்கப்பட வேண்டும். 2021 ஆம் ஆண்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் இருந்து நாம் எதிர்பார்ப்பது அதனையாகும். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts