முக்கியமானது

சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு… மொழி ஒரு இலகுவான குறுக்கு வழியாக உள்ளது.

கயன் யாதேஹிஜ்
கடுமையான முறையில் மெழி ஊடாக ஒரு இனம் இன்னொரு இனத்தை அவமானப்படுத்தும் போது நாட்டில் ஒன்றாக வாழும் இனங்களுக்கிடையிலான இடைவெளி விரிவடைந்து செல்கின்றது. இதனை கட்டுப்படுத்துவது கஷ்டமானதாகும். 1950 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் இவ்வாறான நிலைமைகள் வலுவடைந்தமையே தொடர்ந்து கொண்டிருந்த யுத்தத்திற்கும் காரணமாக அமைந்தது எனலாம்…
“எல்லா இனத்தவர்களையும் ஒன்றிணைப்பதற்கான ஆரம்ப ஆயுதம் மொழியாகும். மக்களுக்கி டையில் பலவிதமான பிளவுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தவதற்காக பலமான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்ற இன்றைய சூழ்நிலையில் மொழியை பயன்படுத்துவது சிறந்ததாகும்” என்று அரச கரும மொழிகள் திணைக்களத்தைச் சேர்ந்த மிலிந்த மாயாதுன்னை கூறுகிறார். இலங்கையில் சகவாழ்வை பலப்படுத்தவதற்கு மொழியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அவரிடம் வினவிய போதே இவ்வாறு கூறினார்.
மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் கலாச்சாரத்திற்கும் இடையில் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்து வருகின்றது. புவியியல் ரீதியான வேறுபாடுகள், அரசியல் ரீதியான வேறுபாடான சிந்தனைகள், அரசியல் பூகோள சூழல், இயற்கையின் தாக்கம், சர்வதேச பொருளாதார நிலைமைகள் ஆகியன மானிட நடத்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வரும் காரணிகளாக உள்ளன. வரலாற்றுரீதியாக எடுத்து நோக்கின் கலாச்சாரத்தின் தாக்கம் கடுமையானதாக இருந்து வருவது பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். விவேகம், தொடர்பாடல், உதவி ஒத்தாசைகள், ஐக்கியத்தை பகிர்ந்துகொள்ளல் மக்களுக் கிடையிலான சமாதானம் என்பன நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச் செல்லும் பிரதான காரணிகளாக உள்ளன. மனித வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கலாச்சாரத்தின் தாக்கம் மிகவும் பிரதானமானதாகும். கலாச்சார பரிமாற்றத்தின் அடிப்படை ஊடகமாக மொழியை கருத முடிகின்றது. அபிவிருத்தியை நோக்கிய பயணத்திற்கான அத்தியாவசியமான வாகனமாகவும் மொழியை அடையாளப்படுத்த முடிகின்றது. எமது இலங்கைத் திருநாட்டைப் பொறுத்த வரையில் பல்லினங்கள் வாழ்கின்ற நாடு என்ற வகையில் சகோதரத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு மொழி ஒரு இலகுவான குறுக்கு வழியாக உள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்காக மொழி இன்றியமையாத ஒரு ஊடகமாக கருதப்படுகின்றது.

கட்டமரான் : இலங்கையானது பல்லின, பல மதங்களைக் கொண்ட நாடாகும். பல்வேறுபட்ட இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாட்டுக்கு தீர்வாக மொழி எத்தகைய தாக்கத்தை எற்படுத்தலாம் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
தீவிவரவாத குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பரவிய தீச்சுவாலை அல்லது தீ எமது நாட்டின் மொழி பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருந்தது. சிலர் எரியும் நெருப்பை தண்ணீர் கொண்டு அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்த போது இன்னும் சிலர் பேச்சுக்களையும் புறக்கணித்தவர்களாக எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றினர். இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய பிரதான விடயம் மொழியால் இணைக்க அல்லது பிரிக்க முடியும் என்பதையாகும். நூற்றுக் கணக்கானவர்கள் குண்டுத் தாக்குதலால் தேவாலயங்களில் கொல்லப்பட்ட போது அப்பிரதேசத்தில் ஒன்றாக உறவினர்கள் போல் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பலரும் அஞ்சினர். இருந்தாலும் அத்தகைய வன்முறைகளுக்கு இடமில்லாத வகையில் பேராயர் பல உரைகளை நிகழ்த்தினார். இந்த நோக்கத்திற்காக அவர் மொழியையும் மத போதனைகளையும் மிகவும் புத்திசாதுர்யமாக பயன்படுத்தினார்.

கட்டமரான் : மொழிப் பயன்பாடு எவ்வாறு அதன் உள்ளடக்கத்தில் அல்லது பயன்பாட்டில் இருந்து வேறுபடுகின்றது?
மொழியானது நீண்ட காலமாக வேறுபட்டவர்களாக அல்லது பிரிந்து வாழும் சமூகங்களை இணைப்பதற்காகவும் நெருக்கமாக கொண்டு வரவுமான ஒரு சக்திவாய்ந்த பாலமாக இருந்து வருகின்றது. இதனை மேலும் தெளிவாக புரிந்துகொள்வதற்காக லுட்வின் விட்கென்ஸ்டீன் என்ற தத்துவவாதியின் “மொழி ஒரு விளையாட்டு” என்ற விடயத்தை நாம் அறிந்திருக்க வேண்டும். விடயத்திற்கு விடயம் மொழியின் பயன்பாட்டில் அர்த்தம் வேறுபடுகின்றது. லுட்வின் என்பவர் குறிப்பிடுகையில் மொழியின் வெளிப்பாட்டின் அர்த்தத்தை மாற்றியமைக்கும் ஆற்றலே “மொழியின் விளையாட்டு” என்பதன் அர்த்தமாகும். உதாரணமாக நாம் “இந்த கத்தி நல்லது” என்று கூறினால் அதன் அர்த்தத்தின் உள்ளடக்கத்தை புரிந்துகொள்ள ஆற்றல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மனைவியால் சமையலறையில் அவ்வாறு கூறினால் இந்த கத்தி மரக்கறி வெட்டவும் வேறு தேவைக்கும் நல்லது என்பதே அர்த்தமாகும். ஆனாலும் இதனை ஒரு கொலைகாரன் கூறினால் அதன் அர்த்தம் முற்றிலும் வேறுபட்டதாகும். அதனால் மொழியின் பயன்பாட்டின் உண்மையான உள்ளடக்கத்தை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டி இருக்கின்றது.

கட்டமரான் : மொழியானது இரண்டு பக்கங்களைக் கொண்ட கத்தியைப் போன்றது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அது ஓரளவிலான நன்மையை நோக்கிய அல்லது தீமையின் பாலான ஒருவிதமான இணைப்பாக நீங்கள் கருதுகின்றீர்களா?
ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பை வித்தியாசமான முறையில் இழிவாக அல்லது தாழ்ந்தவர்களாக காட்டுவதற்கு மொழியை பயன்படுத்திய வரலாறு இலங்கையில் நிறைய இருந்து வருகின்றது. “ஹம்பயா” “பரதெமலா” “தம்பியா” போன்ற வார்த்தைகள் சில உதாரணங்களாகும். ‘பப்லர்’ (Babbler) என்பதன் ஆங்கில கருத்து பலவிதமான பறவை இனங்களாகும். இவ்வாறு பொருள்படுவதற்கு காரணம் அவை அடிக்கடி ஒன்றாக இருந்து கீச்சிடுவதாகும். இந்த பறவைகள் “தெமிழச்சி” என்று சிங்களத்தில் அழைக்கப்படுகின்றது. இந்த வார்த்தைகள் இன்னொரு இனத்தை இம்சைப்படுத்தி தாழ்த்துவதற்காக பயன்படுத்துவதால் அதனால் பாதிக்கப்படும் குறிப்பிட்ட இனத்திற்கு தினமும் இதனால் மன உளைச்சல் ஏற்படுகின்றது. இன முரண்பாட்டில் அதன் பரவலாக்கத்தின்போது இத்தகைய வார்த்தை பிரயோகங்கள் முரண்பாட்டை மேலும் சிக்கலாக்குவதாக இருந்து வருகின்றது.

கட்டமரான் : பெரும்பான்மை இனம் மட்டுமல்லாது ஏனைய இனங்களாலும் இவ்வாறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருவதைப்பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?
1977 முதல் 1983 ஆம் ஆண்டு வரையில் எதிர்கக்ட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் மொழியை பயன்படுத்திய போது அவரது மணைவி சகோதர இனத்திற்கு எதிராக இருந்தார். அவ்வாறே தேசிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகரான (அப்போதைய 1959 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தகவல் மற்றும் ஒலிபரப்பு பிரதி அமைச்சர்) கே.எம்.பி ராஜரத்தினம் ஓரளவிற்கு தமிழ் விமர்சனத்திற்கு எதிரியாக இருந்துள்ளார். ஒரு இனத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா இனங்களிலும் இவ்வாறானவர்கள் இருக்கின்றனர். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதி முதல் இந் நிலைமைகள் இங்கு தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பிரித்தானிய காலனித்துவத்தின் ஆட்சியின் கிழ் இருந்தததை விட இன்றைய நிலையில் சகோதர இனங்களை இவ்வாறாக தாழ்த்தி இழிவுபடுத்தும் நிலைகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. குடியேற்றவாதமானது எமக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்றாகும். இவ்வாறாக கடுமையான முறையில் மெழி ஊடாக ஒரு இனம் இன்னொரு இனத்தை அவமானப்படுத்தும் போது நாட்டில் ஒன்றாக வாழும் இனங்களுக்கிடையிலான இடைவெளி விரிவடைந்து செல்கின்றது. இதனை கட்டுப்படுத்துவது கஷ்டமானதாகும். 1950 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் இவ்வாறான நிலைமைகள் வலுவடைந்நதமையே தொடர்ந்து கொண்டிருந்த யுத்தத்திற்கும் காரணமாக அமைந்தது எனலாம்.

கட்டமரான் : இது இலங்கையின் நிலையாக இருந்தாலும் உலகில் ஏனைய நாடுகளிலும் இவ்வாறான நிலைமைகள் உள்னவா என்பதற்கு உதாரணம் கூற முடியுமா?
மொழி பயன்பாடு தொடர்பாக உலகில் பல நாடுகளில் பெயரியளவிலான முரண்பாடுகள் நிலவி வருகின்றன. சிறந்த உதாரணம் ஜேர்மனியாகும். “இரத்தத்தின் மூலமாக” அப்போதைய ஜேர்மனியின் ஆட்சியாளராக இருந்த ஹிட்லர் மொழியால் ஜேர்மனியில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார். நாம் கண்ட மற்றுமொரு உதாரணம் தான் இரண்டாம் உலகப் போரின் பின்னர் உலகில் ஏற்பட்ட மொழியை அடிப்பயைடாகக் கொண்ட பரவலான வன்முறைகள் ஏனைய வன்முறைகளை விட பலமானதாக இருந்து வந்தது. மக்களை ஒரு இனத்திற்கு எதிராக தூண்டுவதற்கு பயன்படுத்தக்கூடிய மிகவும் பயங்கரமானதும் பலமிக்கதுமான ஆயுதங்களாக மொழியும் மதமும் இருந்து வருகின்றன.

கட்டமரான் : மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான பிரதான வேறுபாடாக இருந்து வருவது மனிதன் மொழியைப் பயன்படுத்தி வருவதாகும். ஆனாலும் சில சந்தர்ப்பங்களில் உறுதிப்பாடு இல்லாதவைகளை அடைவதற்காக மொழி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது பொதுவானதா?
மனிதர்களிடையேயான தராதரத்தை வெளிப்படுத்தவே நாம் மொழியை பயன்படுத்த வேண்டும். வேறு வார்த்தையில் கூறவதாயின் மொழியானது ஏனைய மனிதர்களின் வாழ்க்கைக்கு சிறந்த அர்த்தத்தையும் மதிப்பையும் கொடுக்கக்கூடியதாக பயன்படுத்தப்பட வேண்டும். மனிதர்களுக் கிடையில் வன்முறை மற்றும் கொடூரத்தன்மை ஆகியவற்றை புறந்தள்ளி மொழியானது நீதி, நியாயம், சமத்துவம், யதார்த்தமான நடத்தை போன்ற சிறந்த பன்புகளை மேம்படுத்து வதற்காக சிறந்த முறையில் திட்டமிடப்பட்ட வியூகங்களுடன் மொழி பயன்படுத்தப்பட வேண்டும்.
காஷ்மிர், மியன்மார், இஸ்ரேல், பலஸ்தீனம் ஆகிய எல்லா நாடுகளிலும் தொடரும் இன மத அடிப்படையிலான முரண்பாட்டில் மொழி பற்றிய அனுபவம் இருந்து வருகின்றது. மொழி இல்லாமல் ஒரு இனத்தின் அடையாளம் இல்லை என்ற நிலை இருந்து வருவது கவலை தருகின்றது. மனிதர்கள் ஒரு நாட்டில் வாழும் போது அங்கு அவர்களது இனத்தின் இருப்பு தொடர்பாக சிந்திக்க வேண்டும். ஒரு நாடு முழு உலகிற்கும் உரிமை கோரினால் அங்கே அழிவு காத்திருக்கின்றது. இன்றைய நிலையில் அவ்வாறான நிலைமைகள் குறித்து நல்ல அனுபவம் இருக்கின்றது. மொழியானது ஒரு இனத்தின் குறிப்பாக சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லிம் என்ற அடிப்படையில் இனங்களை வேறுபடுத்தி நோக்குகின்ற அடிப்படையில் அல்லாமல் மனித வாழ்வின் உயர்வுக்காகவும் முன்னேற்றத்தை அடிப்ப டையாகக் கொண்ட நலன்களுக்காகவும் பன்படுத்தப்பட வேண்டும்.
This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts