கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கோவிட்-19 மற்றும் எதிர்கால சந்ததியினர்

‘இணையவழி வகுப்புக்கள்’ எனும் சொல் இலங்கை சமூகத்தில் பெரும் பாத்திரத்தை வகிக்க ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நேரடி விரிவுரைகளில் இருந்து இணையவழி கல்விக்கு மாற்றம் பெற்றமை காரணமாக இலங்கையின் உயர் கல்வி மாணவர்கள் சிறப்பான நிலைமையை அடைந்திருப்பது வெளிவந்திருக்கும் பல்வேறு அறிக்கைகளிலிருந்து தெரியவந்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் அடிப்படையில், சுமார் அரைவாசிக்கு மேற்பட்டோர் இணையவழி கற்கை நடவடிக்கைகளுக்கு அவசியமான சாதனங்களை பெற்றுக் கொள்ளகூடியவர்களாக இருந்தனர். எவ்வாறாயினும், பாடசாலை மாணவர்களுக்கு இது பொருந்துமா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. நாட்டின் ஒவ்வொரு பகுதியும் இணையவழி கல்விக்கு அவசியமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதியைக் கொண்டிருக்காததன்  காரணமாக இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்கள் மின்சார வசதி இல்லாமை காரணமாக இன்று வரை தமது வீடுகளில் விளக்கேற்றுவதற்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறான மக்களுக்கு தொலைக்கல்வி என்பது தொலைவிலுள்ளதோர் கனவு மட்டுமே. மாணவர் ஒருவர் விரிவுரை அல்லது வகுப்பொன்றில் இணைந்து கொள்வதற்காக எத்தனை போராட்டங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது என்பதை செய்திகளும் சுட்டிக்காட்டியுள்ளன. சிலநேரங்களில் காட்டு யானை தாக்குதல் அபாயத்துக்கு மத்தியிலும் அவர்கள் சமிக்ஞைகளைத் தேடி தமது வீட்டிலிருந்து வெகுதூரம் செல்லநேரிடுகிறது. தற்போது நீடித்து வரும் உலகளாவிய தொற்றுநோய் மட்டும் கல்வி கற்கும் சூழலை பாதிக்கவில்லை. சில இடங்களில், மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாடசாலைக் கட்டடம் ஒழுகுவதனாலும் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை தொடருவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும் இந்த வைரஸ் தொற்றுடன் இதுவரை நடைமுறையிலிருந்த ஏனைய அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்தியில் கல்விக்கான அணுகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு டெப்லட் கணினிகள் வழங்கப்படுவது பற்றி தீவிரமாக பேசப்பட்டு வந்த காலமொன்று இருந்தது. எனினும் துரதிஷ்டவசமாக இந்த யோசனை அரசியல் மயப்படுத்தப்பட்டிருந்ததே தவிர இதனை நடைமுறைப்படுத்துவதற்காக எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. மேற்படி ஒட்டுமொத்த பிரச்சினைகளும் பல்கலைக்கழக அனுமதியில் குறைவை / உயர் கல்விக்கான அனுமதி அல்லது முடித்து வெளியேறுவோரில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கல்வி தொடர்பான புள்ளிவிபரங்களை கவனத்திற்கொள்ளும்போது, கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பாடசாலைக் கல்வி மேம்பாட்டுக்காக செலுத்தப்பட்டிருந்த முன்னுரிமை படிப்படியாக குறைவடைந்து சென்றுள்ளது. 1990 இல் அரசாங்க செலவில் கல்விக்காக மேற்கொள்ளப்பட்ட செலவு 10.62 சதவீதமாகவும் 2019 இல் அது 10.45 சதவீதமாகவும் காணப்படுகிறது. 1990 ஆம் ஆண்டு புதிதாக 387,314 பேர் அனுமதி பெற்றிருந்தபோதும் 2019 இல் இதன் எண்ணிக்கை 328,776 ஆகும்.

இப்புள்ளிவிபரங்களை கவனத்திற்கொள்ளும்போது, இலங்கையின் தற்போதைய கல்வி முறைமை தொடர்பில் ஒரு தெளிவான படத்தை புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. கோவிட்-19 பரவலுடன், இவ்விடயம் எல்லை மீறியுள்ளது. கிராமிய கல்வியை முன்னேற்றுவதன்மூலம் அதன் வெளிப்பாட்டை மேம்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்குரிய தருணம் இதுவேயாகும்.அத்துடன் மின்சாரம், நீர், தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது குறித்தும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும்.

தற்போது நீடித்து வரும் உலகலாவிய தொற்று நோய் அச்சுறுத்தல் இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்குமோ அல்லது எதிர்காலத்தில் எவ்வாறான நிலைமையை தோற்றுவிக்குமோ என்பது பற்றி எமக்கு எதுவும் தெரியாது. என்ற போதும் எமது மாணவர்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக நாம் எங்கள் குரல்களை எழுப்புவோம்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts