கருத்து சுதந்திரத்தின் பயனுள்ள பயன்பாடு
எளிமையான வடிவத்தில் கூறுவதாயின், ஒருவர் தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை கருத்து சுதந்திரம் எனப்படும். எமது அரசியல் யாப்பின் 14வது சரத்தில் குறிப்பிடப்பட்டிருப்தைப்போன்று, வெளியீடுகளை உள்ளடக்கியதான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும் ஏனையவற்றை உள்ளடக்கியிருந்தாலும், அவை அவற்றுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல.
நாம் அதனை முறையாகப் பயன்படுத்துகின்றோமா?
எமது சொந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதில் எமக்குள்ள சுதந்திரத்தை எவ்வளவு தூரம் நாம் பயனுள்ள வகையில் பயன்படுத்துகின்றோம் எனும் ஒரு கேள்வி உள்ளது. இது 2020 மார்ச்சில் நாடு முடக்கப்பட்டபோது தெட்டத் தெளிவானது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வைரஸ் பற்றி சமூக வலைத்தளங்கள் முழுவதும் ஏகப்பட்ட போலிச் செய்திகளும் வதந்திகளும் வெளியாகியிருந்தன. உலகலாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் உதவுவதற்கு பதிலாக பொலிஸார் வைரஸ் பற்றிய போலிச் செய்திகளை பரப்பிய நபர்களைக் கண்டுப்பிடிப்பதிலேயே மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர்,ஒரு பல்கலைக்கழக மாணவன் ஜனாதிபதியின் விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டிருந்த நிலையிலும் இதேபோன்றதொரு சம்பவமே இடம்பெற்றது. அவருடைய பதிவு சமூக வலைத்தளத்தில் பல எதிர்வினைகளைப் பெற்றிருந்தபோதும் இறுதியில் அம்மாணவன் சில வாரங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டான். போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை வெளிப்படுத்துவதில் பெரும் பங்களிப்புச் செலுத்திய இன்னுமொரு சுவாரஸ்யமான தலைப்பாக உயிர்த்த ஞாயிறு சம்பவம் அமைந்தது. எல்லோரும் அறிந்திருந்ததன்படி, தாக்குதல் நடந்த சில வாரங்களிலேயே மேலும் பல தாக்குதல்கள் இடம்பெறவிருப்பதாக குறிப்பிட்டு பல ‘வட்ஸ்அப்’ செய்திகளும் ஒலிபதிவுகளும் பகிரப்பட்டன. இந்த பகிர்வுகள் உண்மையானவையா என்பதை உறுதி செய்யாமல், மக்கள் அச்சப்பட ஆரம்பித்தனர்.
இதுபோன்ற சில சம்பவங்கள் தவறான புரிதலுக்கு காரணமாக அமையலாம். எவ்வாறாயினும்,பலர் தமது கவனத்தை ஈர்ப்பற்காக இணையத்தில் வதந்திகளை பரப்பி தமக்கென ரசிகர் கூட்டமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறிப்பிட்ட அந்நபருக்கு மட்டுமே சாதகமாக அமைகின்றபோதும், அப்பதிவை பார்ப்பவர்கள் அதனை வேறு கோணத்திலேயே அணுகுவார்கள். சிலர் அரசியல் இலாபத்துக்காகவும் வதந்திகளை பரப்புகின்றனர்.
எந்த வடிவத்தில் அவை உருவாக்கப்பட்டிருந்தாலும், சமூகம் என்ற வகையில் நாம் தகவல்களையும் செய்திகளையும் வெளிப்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும். பார்வையாளர் என்ற அடிப்படையில் எது சரி, எது பிழை என்பதை நாம் பிரித்தறிய கூடியதாக இருக்கின்ற அதேநேரம், ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகளுக்கு அநாவசியமான ஆதரவு வழங்கப்படுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தற்காலத்தில்போன்று நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சந்தர்ப்பத்தில் சமூகத்தில் குழப்பத்தை தோற்றுவிக்காமல் இருப்பதற்காக நாம் எம்மிடையே ஒரு ஒழுக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.