கருணாரத்ன ஹெரத்: “இஸ்லாமியப் போதனைகள் குறுகிய மனப்பான்மையுடையவை அல்ல.”
சரத் மனுல விக்கிரம
இறைதூதர் முகமது அவர்களின் காலத்தில் மிருகங்களைப் போன்ற உரிமைகளையே பெண்கள் பெற்றிருந்தனர். அவருடைய போதனைகள் மூலமாகவே பெண்கள் சொத்து உரிமைகளுடன் கூடிய ஒரு இடத்தையும் கௌரவத்தையும் சமூகத்தில் பெற்றனர். அடிமைத் தளைகளிலிருந்து அவர் பெண்களைக் காப்பாற்றினார்….
இந்த நாட்டிலே முஸ்லிம் சட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது பற்றித் தீவிரமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுவரும் காலப்பகுதியில் ‘முஸ்லிம் சட்டம் பற்றிய கையேடு’ ஒன்றைத் தொகுத்தளித்த சட்டத்தரணியின் கருத்துகள் இவையாகும். இவர் முஸ்லிம் மரபுவழிச் சமபிரதாயம் மற்றும் சட்டம் என்பவைகளுக்கு ஆதரவாக இருந்த ஒரு முஸ்லிம் அல்லாதவர். இவர் ஒரு எழுத்தாளர், விரிவுரையாளர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி என்பவைகளுக்கும் மேலாக நடப்புக் காலத்தில் முஸ்;லிம் சமூகம் தொடர்புபட்ட சட்டப் பிரச்சனைகளக் கண்டுகொண்டமை அவருடைய மிகச் சிறந்த குணாதிசயாகும்.
த கட்டுமரன் கருணாரத்ன ஹெரத்துடன் மேற்கொண்ட பிரத்தியேக நேர்காணல்.
கருணாரத்தன ஹெரத்தின் பெயர் அனுராதபுரத்தில் முதன்மையானது என்பதுடன் அவர் எழுதிய பல புத்தகங்கள் காரணமாக உள்ளூர் சட்டத் துறையிலும் முதன்மை பெற்றுள்ளது. அவைகளுள் அதிகாரப் பரவலாக்கலும் மாகாணசபைகளும், அரச காணிகள் தொடர்பான சட்டங்கள், வனங்களில் நடைபெறும் குற்றச் செயல்கள், வனஜீவராசிகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் பற்றி எழுதிய சிறுசிறு விடயங்கள் மட்டும் அல்லாது உலகளவில் அவருக்குப் புகழ் சேர்த்த ‘முஸ்லிம் சட்டம்’ என்னும் புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
த கட்டுமரன்: முஸ்லிம் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுபற்றி எவ்வகையான கருத்தைக் கொண்டுள்ளீர்கள்?
சாதாரண முஸ்லிம் வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாடு இஸ்லாத்திற்கு முந்திய சடங்குகள் என்று சொல்லப்பட்ட ஒரு மரபுவழிச் சம்பிரதாயமாகும். முஸ்லிம் சட்டத்திற்கான மற்றைய அடிப்படைக் கோட்பாடு புனித குர்ரான் ஆகும். இப் போதனைகளில் மூன்று பிரதான பாகங்கள் உள்ளன. அவையாவன ஸன்னா, ஹதீஸ் மற்றும் இத்மா என்பனவாகும். அவை முதலில் அரேபிய மொழியில் வெளியிடப்பட்டிருந்ததுடன் அரேபிய குடிமக்கள் வாழ்க்கையை முற்றுமுழுதாக உருவகப் படுத்தியுள்ளது. இப்புத்தகங்களில் இருக்கும் போதனைகள் முழுமையாக நிலைநிறுத்தப்படவில்லை யாயினும் அவற்றின் அடிப்படை இஸ்லாமிய முறைமையிலேயுள்ளது.
பாண்டுகபாய மன்னன் அனுராதபுரத்தை ஸ்தாபித்தபொழுது யோனக குழுவினருக்கும் ஏனைய சுதேசிய தெய்வங்களை வழிபடுபவர் முதலான பல்வேறு சமயக் குழுவினருக்குமென்று இடங்களைக் கட்டுவித்தான் என மகாவம்சம் கூறுகிறது. யோனக மக்கள் 7ம் நூற்றாண்டில் இஸ்லாம் மதத்தைத் தழுவிக்கொண்டனர். மதத்தின் பாதுகாவலர்களான காலிப்பிடம் போதனைகளைக் கற்றுக் கொள் வதற்காக இலங்கையில் அதியுயர் கல்விமானான ஒருவர் அடங்கலான ஒரு குழுவினரை அனுப்பி வைக்க அவர்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆந்தக் காலத்திலிருந்த போக்குவரவு காரணமாக அவர்கள் அரேபியா செனறடைந்தபோது நபி காலமாகிவிட்டார். அவருடைய பிரதான ஊழியன் தான் கறறுக்கொண்ட அறிவாற்றலுடன் திரும்பினார். அதிலிருந்து இஸ்லாமியச் சட்டம் வளர்ச்சியடைந்தது
த கட்டுமரனன்: இஸ்லாமிய மதப் போதனைகள் பற்றிப் பலர் தங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அது வன்முறையைத் தூண்டுகிறது என நம்புகினறனர். நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள்?
வேற்று மதத்தவர்களாய் இருந்துகொண்டு இஸ்லாமியப் போதனைகள் குறுகிய தன்மை கொண்டவை யெனக் கூறுவது தவறு. ஏற்கெனவே பௌத்தம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்கள் ஸ்தாபிதமடைந்த பிராந்தியத்தில் அல்லாவுடைய போதனைகள் எவ்வளவு ஆழமாகப் பரவியுள்ளது என்பது கவனஞ் செலுத்தக்கூடியதாகவுள்ளது. குர்ரானைக் கற்கும்பொழுதுதான் அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளமுடியும். இறைதூதர் முகமது அவர்களின் காலத்தில் மிருகங்களைப் போன்ற உரிமைகளையே பெண்கள் பெற்றிருந்தனர். அவருடைய போதனைகள் மூலமாகவே பெண்கள் சொத்து உரிமைகளுடன் கூடிய ஒரு இடத்தையும் கௌரவத்தையும் சமூகத்தில் பெற்றனர். அடிமைத் தளைகளிலிருந்து அவர் பெண்களைக் காப்பாற்றினார்.
த கட்டுமரன்: இவ்விடயம் தொடர்பில் இஸ்லாம் பற்றிய விளக்கத்தை உங்களால் காண்பிக்க முடியுமா?
மதங்களுக்கிடையில் பல பிணைப்புகளை காண்பிக்க முடியும். உதாரணமாக பௌத்த மதத்தில் ‘ஸப்பே தாஸன்தி தன்தஸ்ஸ்’ என்பதில் ‘உயிரினங்கள் எல்லாம் தண்டிக்கப்பட விரும்புவதில்லை’ எனப்படும் கருத்து இறைதூதர் முகமதுவின் போதனைகளில் ‘ஏனையவர்களும் தங்களுடைய உயிர்களைப் பாதுகாக்க விரும்புவர் எனக் கூறப்படுகிறது. பணம் ஈட்டுவதிலும் வர்த்தகத்திலும் கவனஞ் செலுத்திய இஸ்லாத்திற்கு முந்திய கமூகங்களில் மனித உயிருக்குப் பெறுமானம் அதிகளவில் இருக்கவில்லை. ஆனால் இஸ்லாம் தோன்றியபின் மதத்திற்கும் பெறுமானங்கள் கிடைக்கப்பெற்றன. அதனாற்தான் இஸ்லாம் உலகெங்கும் பரவியது.
த கட்டுமரன்: முஸ்லிம் சட்ட நடைமுறைப்படுத்தல் இலங்கையில் எவ்வாறு உள்ளது என உங்களால் விளங்க வைக்கமுடியுமா?
முஸ்லிம் சட்டம் இலங்கையில் ஒரு சில துறைகளில் மட்டுமே பிரயோகிக்கப்படுகிறது. பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட மூன்று சட்டங்கள் மட்டுமே முஸ்லிம் சட்டமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. ஓன்று தனிநபர் அந்தரங்கம் அல்லது குடும்ப உறவுகளுடன் சம்பந்தப்பட்ட முஸ்லிம் மக்களின் விவாகச் சட்டம். இரண்டாவது சொத்து சம்பந்தமான சட்டம். ஒரு சொத்து உரிமையாளர் தனது சொத்தை யாரேனும் ஒருவரிடம் கையளிக்காது அல்லது நன்கொடையாக வழங்காது மரணமடைந்தால் பின்உரித்தாளர் சம்பந்மான பிரச்சனை உருவாகும். மற்றைய சட்டம் பள்ளிவாசல்களில் அறக்கொடைச்சட்டம். இவைகள் மட்டுமெ இலங்கையில் முஸ்லிம்களுக்கென வேறாகப் பிரயோகிக்கப்படும் மூன்று சட்டங்கள். இச் சட்டங்களின் கீழ் வர விரும்புவோர் அவ்வாறு செய்யலாம். இல்லாவிட்டால் அவர்களுடைய பிரச்சனைகளைப் பொதுவான சட்டத்தின் கீழ் நீதிமன்றம் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.
த கட்டுமரன்: முஸ்லிம் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் காதி நீதிமன்றங்கள் பற்றியும் அவற்றின் நீதிபதிகள் பற்றியும் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் இருந்து மாறுபாடான கருத்துக்கள் இருந்தனவே. அவற்றை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
முஸ்லிம் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் காதி நீதிபதிகள் கடவுளுக்காகத் தங்களை அர்ப்பணித்த வர்களெனக் கூறப்படுபவர்கள். அதில் ஒரு ஆழமான கருத்து உண்டு. இது ஒரு நடுவர் சபை போன்றது. காதிகளாக நியமனம் பெறுபவர்கள் தகுதி பெற்றவர்களாயிருத்தல் வேண்டும். காதி சபை நீதிமன்றங்கள் நீதி அமைச்சின்கீழ் இயங்குகின்றன. அவை சாதாரண நீதிமன்றங்களுடன் இணைந்துள்ளன. தற்கால சூழ்நிலைகள் காரணமாக அவற்றில் குறைபாடுகள் இருக்கின்ற போதிலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலேயே உருவாகியுள்ளன.
This article was originally published on the catamaran.com