சமூகம்

கட்டுவாப்பிட்டி மக்கள்: ‘ஊடகங்களின் செய்தியைத்தான் நம்புறம்! இன்னும் பயமா இருக்கு!’

தர்மினி பத்மநாதன்
ஓகஸ்ட்டில் உத்தரீய மாத பெருநாள் புத்தளம் முந்தலில் நடக்கும். நம்மட ஊரே அங்க தான் நிக்கும். எங்க ஆம்பளையள கூட்டிகிட்டு குடும்பமா போறேண்டா இப்பிடி கோயில் பெருளநாளுக்குதான். கூடாரம் அடிச்சு, சமைச்சு சாப்பிட்டு வருவம். இப்ப அதுவும் இல்லாமல்ப்போச்சு. இந்த முறை  யாருமே வாறாங்கள்  இல்லை…….
“ ஓகஸ்ட்டில் உத்தரீய மாத பெருநாள் புத்தளம் முந்தலில் நடக்கும். நம்மட ஊரே அங்க தான் நிக்கும். எங்கட ஆம்பளையள கூட்டிகிட்டு குடும்பமா போறேண்டா இப்பிடி கோயில் பெருநாளுக்குதான். கூடாரம் அடிச்சு, சமைச்சு சாப்பிட்டு வருவம். ஆனா  இந்த முறை  யாருமே வாறாங்கள்  இல்லை.” என்கிறார் நிலாந்தி நிகார் (43)
இவர் நீர்கொழும்பு காட்டுவாப்பிட்டியைச் சேர்ந்தவர். சிங்களவர்களாக இருந்தபோதும் நன்றாக தமிழ் பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர். கட்டுவாப்பிட்டியில் மீன்பிடித் தொழிலில் பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டுவரும் இவர்கள் அண்மைய உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாதவர்களாக உள்ளனர்.

த கட்டுமரன் : காட்டுவாப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற  ஏப்ரல் 21 சம்பவத்திற்குபிறகு தற்போது நிலைமை சுமூகமாகியுள்ளதா?
பதில் : உண்மையில் மிச்சம் பயமாக இருக்கு. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப பயமாய் இருக்கு. நாங்கள் வெளியில் போக பயமாய் இருக்கு . பின்னேரம்  எங்கும் போக பயம் . வெளிய போனால் போன வேலை முடிக்காட்டியும் வீடு வந்திட வேணும் என்ற பதட்டம் இன்னும் குறையலை . யூலையிலையும் ஸ்கூலுக்கு   கடிதம் வந்ததாம் மூண்டு நாளுக்கு பிள்ளையை  பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். அன்று  குண்டு வெடிக்கும் எண்டு. சின்னப்ப பிள்ளைகளை யாரை நம்பி. எப்பிடி  அனுப்புறது. ? முந்தியை விட இப்ப பயம்

அதிகமாய் இருக்கு. யுத்த  நேரம் கூட  எல்லாரும் சேர்ந்து காசு போட்டு ஒண்ணா மாடு மாத கோவில் , போவம். இப்ப யாருமே வர விரும்பல. எல்லாரும் பயப்படுறாங்கள். .இப்பிடி ஒரு சம்பவம் இருக்கா இல்லையா எண்டு  கூட  உண்மை தெரியல. நாங்கள் ஊடகங்களில வார செய்தியை தான் நம்புறம் .

த கட்டுமரன் : பாடசாலைகளில் மாணவர்களுக்கு  பயமற்ற மனநிலையை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதே?
பதில் : பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் தான் போட்டு இருக்கு. ஆனாலும், டீச்சரை போன் பண்ணிக் கேட்டா, ‘எப்பிடி எண்டு எங்களுக்கு தெரியாது.  நீங்கள் பிராச்சசனையை பார்த்து பிள்ளையை ஸ்கூலுக்கு வர பண்ணுங்க. அனா நாங்கள் பொறுப்பில்லை.’ எண்டு சொல்றாங்க. எங்கட ஊர்   ஆம்பிளையங்கள்  கடற்றொழில்  செய்றவங்கள் . அவங்கள்  கடலுக்கு போவங்கள். போனால் மூணு நாலு நாளுக்கும்   அல்லது பத்து நாளுக்கும் பிறவு தான் வருவாங்க. நாங்கள் தான் பிள்ளையை  குட்டியை பார்த்திட்டு இருக்க வேண்டும். அப்ப நம்பிக்கையில்லாம எப்பிடி பிள்ளையள அனுப்புறது?

த கட்டுமரன்: உங்கள் கிராமத்தில் எல்லா இனமக்களும் வாழ்கின்றனர். இப்போது அந்த உறவுநிலை எப்படியுள்ளது?
பதில் : எனது வீட்டுக்கருகில் தமிழர்களில் சில குடும்பமும், முஸ்லீம்களில் ஒன்று இரண்டு குடும்பங்களும் உள்ளன. ஆனால் சந்தை , கடை எல்லாம்  முஸ்லீம்  மக்கள் தான் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்புகள் இருக்கு.  ஆனால் முன்னர் போல் யாருமே  நிறையப் பேசுறது இல்லை. யாரோ செய்ததற்காக அப்பாவிகளை குறை சொல்லவும் முடியாது. ஆனாலும் அவர்கள் எம்மைவிட்டு கொஞ்சம் தூரமாகத்தான் தெரிகிறார்கள். நான் இரவில சாப்பாடு சமைச்சுக் குடுக்கிறனான். அதையும் இப்ப செய்யமுடியல.

த கட்டுமரன்: நீங்கள் சாப்பாடு சமைத்து கொடுக்கிறீர்களா?
பதில் : ஆம். இரவில மட்டும் திறக்கிறதா ஒரு சின்ன சாப்பாட்டு கடை நடத்துறன். நான் மூணாம் வகுப்பு வரைதான்(8வயது) படிச்சன் பிறவு படிக்கல. அந்த நேரம் அம்மாக்கு கஷ்டம். நான்தான் மூத்த பிள்ளை மற்றவர்களை பாக்கிறதுக்காக என்னைய பள்ளிக்குடத்திலஇருந்து நிப்பாட்டிட்டாங்க. சமையல் மட்டும் நல்லா செய்வன். இப்ப அதுதான் கைகொடுக்ககுது. வீட்டோட கடை எல்லாரும் வந்து சாப்பாடு வாங்கிட்டுப் போவாங்க. ரோட்டி , சோறு இட்டலி எண்டு செய்வன். இப்ப குறைஞ்சிற்று.

 த கட்டுமரன்: இந்த குண்டுவெடிப்பால் உங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டதா?
பதில் : எங்கட குடும்பத்திற்கு எதுவும் நடக்ககல. ஆனா எல்லா உயிரும் சொந்தம் மாதிரி தானே. சமைக்கவும் இல்லை. றோட்டிலையும் அங்கையும் இங்கையும் ஓடினோம். ஆக்கம் பக்க இனசனத்தை இழந்திருக்கிறம். அதுவும் எமக்கு இழப்புதான். போர் காலத்திலகூட நாங்க இப்பிடி ஒண்ட எதிர்கொள்ளல…இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. இப்பபெல்லாம் சேந்து கூட்டமா போறதுக்குக் கூட யோசிக்கவேண்டியிருக்கு. வருசாவருசம் மடுவுக்கு போறனாங்கள். இப்ப அதுக்கு போகவும் பயமா இருக்கு.

த கட்டுமரன்: உங்கள் அயலில் நடக்கும் கிறிஸ்தவ தேவாலய திருவிழாக்களுக்கு மக்கள் போகத்தொடங்கிவிட்டனரா?
பதில் : எங்க….எல்லாரும் பயத்தில இருக்கிறம். ஓகஸ்ட்டில் உத்தரீய மாத பெருநாள் புத்தளம் முந்தலில் நடக்கும். நம்மட ஊரே அங்க தான் நிக்கும். எங்க ஆம்பளையள கூட்டிகிட்டு குடும்பமா போறேண்டா இப்பிடி கோயில் பெருளநாளுக்குதான். கூடாரம் அடிச்சு, சமைச்சு சாப்பிட்டு வருவம். இப்ப அதுவும் இல்லாமல்ப்போச்சு. இந்த முறை  யாருமே வாறாங்கள்  இல்லை. எல்லா நேரமும் கடலுக்கு போற எங்கட ஆம்பிளையள் இப்பிடி கோயில் திருவிழா எண்டாதான் ஒண்டா குடும்பமா நிப்பாங்க. இப்ப அவங்களுக்கும் எங்கள கூட்டிட்டு போக பயமாய் இருக்கு.

த கட்டுமரன்: ஒரு சுமூகமான சூழல் ஏற்படவேணுமென்றால் என்ன செய்யவேண்டும் என எண்ணகிறீர்கள்?
பதில் : அரசாங்கம்தான் இதுக்கு முழுப்பொறுப்பையும் எடுக்கவேணும். போர் போர் எண்டு அது முடிஞ்சு இப்பதான் கொஞ்சக்காலமா சந்தோசமா இருந்தம். அதுக்குள்ள இப்பிடியொரு இடி. அதோட மக்களும் கொஞ்சம் விழிப்பா இருக்கோணும். குடும்பங்களிலயும் தங்கட பிள்ளைங்க எப்பிடி இருகக்கிறாங்க எண்டு அப்பா அம்மா கவனிக்கணும். மற்ற குடும்ப உறப்பினர்களும் இப்பிடியான தீவிர எண்ணங்கள்கொண்டவங்கள கவனிக்கணும்.நானும் மூண்டு பிள்ளையள வைச்சிருக்கிறன். நாளைக்கு அதுகளின்ற காலத்திலையாவது சந்தோசமா பயமில்லாமல் பிரச்னை இல்லாமல் வாழ்ந்தால் போதும்.
This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts