சுற்றுச்சூழல்

ஓக்சிஜன்: மூலாதாரமான உயிர்காப்பு

கமந்தி விக்ரமசிங்க

எமது அயல்நாடான இந்தியாவின் மீதான பிடியை கோவிட் – 19 இறுக்கிக் கொண்டிருக்கிறது. அநேக பிரஜைகள் மருத்துவ ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்த பயங்கர வைரசுக்கு இரையாகின்றனர். மூச்சுத்திணரல் காரணமாக அதிகமானோருக்கு மருத்துவ ஒக்சிஜன் தேவைப்படுகிறது என்று அண்மையில் வெளிவந்த அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் ஒக்சிஜன் வினியோகம் குறைந்துகொண்டு வருகிறது. அநேக நாடுகள் முடக்கநிலையை விதித்துள்ள நிலையில், ரூடவ்ராக் போன்ற நாடுகள் தமது பிரஜைகளை இடப்பெயர்வு செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும், அவுஸ்திரேலியா, இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகள் ஒக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதன் மூலம் இந்தியாவுக்கு ஒத்தாசை வழங்கியுள்ளன.

இந்த பின்னணியில், இயற்கையில் நிகழும் சிக்கலான இரசாயன எதிர்விளைவுகளின் துணை விளைபொருளான ஒக்சிஜனின் முக்கியத்துவத்தை மீளாய்வதற்கான சரியான நேரமாக இது அமைகிறது. இறுதியில் இது நம்மை சுயாதீனமாக சுவாசிக்க அனுமதிக்கிறது.

இலங்கையின் வனப்பரவலின் நிலமை.

சுற்றுலா மேம்பாட்டு பிரசாரங்கள் இலங்கையை ஒரு பசுமை நிறைந்த சுற்றுலாப் பயண இலக்காக காண்பிக்கின்றன. ஆனால் தீவின் உட்புறத்தை நோக்கி பயணிக்கும் போது, பாரிய அளவான சூழல் அழிவைக் காணலாம். சர்வதேசத் தொற்றின் முதலாவது அலையின் போது, இலங்கையிலுள்ள இயற்கையை நேசிக்கும் சகோதரத்துவத்தை வியப்பூட்டும் வகையில், சில சம்பவத் தொடர்கள் ஏற்பட்டன. இச்சம்பவங்கள், பாதுகாப்பு வலயங்களில் உள்ள காடுகளை பெருவாரியாக அழிக்கும் செயற்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

இலங்கை மூன்று மழைக்காடுகளுக்கு இருப்பிடமாக அமைந்துள்ளது. அவை சிங்கராஜா உலக பாரம்பரியத் தளம், நக்கிள்ஸ் மலைத் தொடர் மற்றும் அதன் மலைச் சிகரக் காடுகள் என்பவற்றை உள்ளடக்கும். இப்பகுதிகள் ஒவ்வொன்றிலும் உள்ள உயிரியல்பல்வகைமை, காலநிலைக்கும் இடத்திற்கும் அமைய மாறுபடுகிறது. ஓவ்வொரு இடமும், பல்வேறு வகையான அரிய தாவர விலங்கினங்களின் இருப்பிடமாக அமைவதோடு, மலைச்சிகரத்தின் காடுகள், பந்தீரா பர்டஸ் கொடியாவின் (இலங்கை சிறுத்தை) இருப்பிடமாக அமைகிறது. எவ்வாறாயினும், இந்த உணர்திறன் வாய்ந்த சூழல் அமைப்புகள் ஒவ்வொன்றும், மானிடவியல் தாக்கங்களால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக காணிகளை கைப்பற்றல், பழமை வாய்ந்த காணிச் சட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், மணல் சுரங்கங்கள் மற்றும் சில நடவடிக்கைகள் ஒன்றுசேர்ந்து, இந்த வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் பொருவாரியான அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளன. இந்த சூழல் அமைப்புகளுக்குள் நடைபெறும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அணுகுமுறைகளை எளிதாக்குவதற்காக யானைகளின் தாழ்வாரங்கள் அழிக்கப்படுகின்றன. ஒருகாலத்தில் நன்னீர் மீன்களைக் கொண்ட தெளிவான நீர்வீழ்ச்சிகளும் நீரோடைகளும் தற்போது சேறும் சகதியுமாக மாறிவிட்டன. இவற்றில் சில வற்றிப்போய்விட்டன. ஒருகாலத்தில் இந்த வாழ்விடங்களில் உள்ள வன விலங்குகளுக்கு நிழலையும், உணவையும் வழங்கிய மரங்கள் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டதால் திறந்த வெளிகள் உருவாக்கப்பட்டன. இவை பாதுகாப்பு வலயங்களிலும், இயற்கை வளக் காப்புகளிலும் தொடர்ந்து நடைபெறும் அழிவின் ஒரு கணப்பொழுது கண்ணோட்டமாகும்.

உலகளாவிய வனக்கண்காணிப்பு – உலகளாவிய காடுகளை, ஒரு பரந்த தகவல் வலைப்பின்னலால் அவ்வப்போது கண்காணிப்பதன் மூலம் 2002 இற்கும் 2020 இற்கும் இடையே இலங்கை 102 கிலோஃஹெக்டயர் ரூடவ்ரலிப்புக் காடுகளை இழந்துள்ளது என்று மதிப்பிடப்படுகிறது. எனவே, இக்காலப்பகுதியில் முதன்மையான ரூடவ்ரலிப்புக் காடுகள் 1.7மூ தால் குறைந்துள்ளது. மேலும் புள்ளிவிபரங்களின் படி, குருநாகல், மொனராகலை, வவுனியா, கேகாலை ஆகிய நான்கு பிராந்தியங்களுக்கு மேலதிகமாக, அநுராதபுரம் 29.9 கி.ஹெ காட்டை இழந்து, அதிகமான மரச்செறிவை இழந்தது.

தீர்மானம் எடுப்பவர்களும் ஒக்சிஜனைப்பற்றி அவர்களுடைய கருத்தும்.

பெப்ரவரி 2020இல் நீர்கொழும்பு பிரதேசத்தில் சதுப்புநில செறிவைக் கொண்ட ஒரு சூழலுக்கு அருகில் ஒரு கைப்பந்தாட்டத் திடலை நிர்மாணிப்பதற்கான திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டது. கம்பஹ மாவட்ட வனத்துறை அலுவலகரான தேவாணி ஜயதிலகவிற்கும் கடற்தொழில் ராஜாங்க அமைச்சரான சனத் நிஷாந்தவிற்கும் இவ்விடயத்தைக் குறித்து ஏற்பட்ட கடுமையான விவாதத்தின் விளைவாக இவ்விருவருக்கு இடையே சண்டை ஏற்பட்டது. இவ்வுரையாடல் சமூகத்தளங்களில் வைரலாகப் பரவியது.

(https://www.newsfirst.lk/2020/02/12/female-state-official-stands-up-against-the-imminent-destruction-of-the-queens-isle-in-negombo/ ) முக்கியமாக, இங்கு இந்த அரசாங்க அதிகாரி ஒக்சிஜனின் முக்கியத்துவத்தைக் குறித்து வலியுறுத்தியதாலும் ராஜாங்க அமைச்சர் அதன் பாவனையை பற்றி கேள்வி எழுப்பியதன் நிமித்தமும், சூழல் பாதுகாப்புக் குழுக்கள் வனவியல் அதிகாரிக்குச் சாதகமாக ஊடகங்களைப் பிரயோகித்தனர். தீவு முழுவதும் ஏற்பட்ட முடக்கநிலையின் போது, தீவின் எல்லா மூலைகளில் இருந்தும் சூழல் அழிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் சில போலியான தகவல்கள் என நிராகரிக்கப்பட்டு, மற்றும் சில நிகழ்வுகள் விசாரணை செய்யப்பட்டன. இயற்கையை நேசிக்கும் குழுக்களின் கோபத்தை தூண்டும் வகையில், அரச நிலங்களில் உள்ள வனப் பகுதிகளில் மரங்கள் பலகைக்காக வெட்டப்பட்டன. வனப் பாதுகாப்பு நிலங்களில் உள்ள மரங்கள் வெட்டி எரிக்கப்பட்டு, தேசிய வனஅரண்களுக்கு மத்தியில் நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டன. வனவிலங்கு மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்கள், வனவிலங்குகளையும் காடுகளையும் பாதுகாக்கும் பெரும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் முடக்கநிலையால் அதிகாரிகளை அந்தந்த பிரதேசங்களுக்கு அனுப்புவது, வனவிலங்கு மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களுக்கு சவாலாகவே இருந்தது. குற்றவாளிகளின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

ஜனாதிபதி ராஜபக்ச “கம சமக பிலிசதரக்” என்னும் திட்டத்தை ஆரம்பித்த போது (“கம சமக பிலிசதரக்” (‘Gama Samaga Pilisandarak’ ,What is the project this? Tamil readers are not aware this. so can you give the link about the project) ஒரே இரவில் டஹயகலவில் (Dahaiyagala)  (https://news.mongabay.com/2021/04/farmers-move-to-occupy-a-critical-elephant-corridor-in-sri-lanka/ )  யானையின் நடைபாதையில் உள்ள மரங்கள் பிடுங்கப்பட்டு, சூழல் அழிவு அதிகரித்தது. ஜனாதிபதியின் உத்தரவை பலர் தவறாக புரிந்து கொண்டதால் பெரும்பாலான மக்கள் அதிக காணிநிலங்களையும் தண்ணீரையும் கேட்கிறார்கள்.

கருத்துச் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்

19 வயதான பாக்யா அபேரத்ன, சிங்கராஜா வனப்பகுதியில் நடைபெறும் சூழல் அழிவை அம்பலப்படுத்திய போது, மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூகத்தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அவருடைய வெளிப்பாடுகளைத் தொடர்ந்து, இலங்கை காவல்துறையில் ஏற்கனவே ஒரு பெண்கள் மற்றும் சிறுவர் இலாகா இருக்கும் போது, இரண்டு ஆண் காவல்துறை அதிகாரிகள் அவரை விசாரணை செய்ய தீர்மானித்தார்கள். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பலதரப்பினர், இவருடைய கருத்துகளை மறுப்பதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும், இவருடைய கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்திற்கு ஏற்பட்ட சவாலையும் பற்றி அக்கறை தெரிவித்தனர்.

இவ்வாறான விளைவுகளைச் சந்தித்த ஒரே சூழல் ஆர்வலர் பாக்யா அபேரத்ன மட்டுமல்ல, காலநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து, அவமானப்பட்டு பின்னர் அங்கீகாரம் பெற்ற சுவீடன் நாட்டைச் சேர்ந்த சூழல் ஆர்வலரான “கிரெட்டா துன்பெர்க்கும்” ஒருவராவார். இங்கு முன்னர் குறிப்பிட்டரூபவ் கம்பஹ மாவட்ட வன அலுவலகர் தேவாணி ஜயதிலக்க எதிர்நோக்கிய சம்பவமும் இதே போன்றதே. இச்சம்பவத்தின் பின், தன்னை வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வார்கள் என்றும் தேவாணி அஞ்சினார். அண்மையில், ஒரு நெடுஞ்சாலையை அமைப்பதற்குத் தடையாக இருந்த “டியா செய்லானிக்கா”இனத்தை சேர்ந்த மரங்களில் எஞ்சியிருந்த சிலவற்றை வெட்ட அரசாங்கம் தீர்மானித்த போது, அதற்கெதிராக தேவாணி ஜயதிலக்க மீண்டும் குரல் எழுப்பினார். அப்போது அதற்கு பொறுப்பான அமைச்சர் சி.பி. ரட்னாயக்க, தேவாணி ஜயதிலக்க சட்டத்தை புறக்கணித்து செயல்பட்டதாக கூறி, அவர் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் என, அவரை மீண்டும் அவமானப்படுத்தினார்.

இழந்த பசுமையை மீட்டுக்கொள்ளல்

இழந்துபோன பசுமையை மீட்க ஒரே தீர்வு வனங்களை மீள் அமைப்பதே என்பது பலருடைய நம்பிக்கையானாலும் இது விவாதத்திற்கு உரிய தலைப்பாகவே காணப்படுகிறது. காடுகளை மீளமைப்பதற்கு காலம் செல்லும் எனவும், காடுகள் அழிக்கப்பட்ட பின் அவற்றை மீட்டு சுற்றுச்சூழலை முன்பிருந்த நிலைக்கு கொண்டுவர அண்ணளவாக 30 ஆண்டுகள் எடுக்கும் என்பது சுற்றாடல் நிபுணர்களின் கருத்தாகும். ஒரு காடு, சிறு பற்றைகள் முதல் பரந்த கூரைகளாகும் வரை பல படிமுறைகளைக் கொண்டது. எனவே மீளமைப்பதற்கு காலம் செல்லும். மனிதர்களால் உருவாக்கப்பட்ட காடுகள் ஒரே வகைமாதிரியாக ஒரே இனம் சார்ந்ததாகக் காணப்படுவதால், அவை சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் குறைவானதாகும். மேலும் வன பாதுகாப்பு மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படும்.

அரசாங்கம், பல சந்தர்ப்பங்களில் மரம் நடும் செயல்திட்டங்களை செயற்படுத்தினாலும், சுற்றாடல் வல்லுனர்கள், கும்புக் பேன்ற வர்த்தக மயமான மரங்களை மழைக் காடுகளுக்குள் நாட்டுவது நன்மையை விட தீமையையே விளைவிக்கும் என நம்புகின்றனர். உதாரணமாக, கும்புக் மரத்தின் பட்டை உரியும் போது, அதில் படரும் லைகன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இது உயிரியல் குறியீடுகளான லைக்கன்களின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. எனவே, சூழல் நீண்டகால பயனை பெற வேண்டுமானால், வனமீள்வளர்ப்பு பூரணமான அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும்.

இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள உக்கிரமான தொற்று நோய் நிலமையின் காரணமாக, ஒக்சிஜன் பயனற்றதா? அல்லது உலகம் சுவாசிப்பதற்கான காற்றை இழக்காத வண்ணம் மேலும் அதிகமாக செயல்பட வேண்டுமா என மக்கள் வினவவேண்டும்!

Oxygen : The Ultimate Lifesaver

ඔක්සිජන්: ජීවිතාරක්ෂක ප්‍රමුඛයා

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts