சமூகம்

இளைஞர் கழகங்களின் தலைவர்: “அரபு மொழியை கற்பது போன்று சிங்கள மொழியையும் கற்கவேண்டும்”

ஜெயசிறி பெதுராராச்சி
மொஹமட் நிஹ்மி யூசுப் மாத்தறை மாவட்ட இளைஞர் கழகங்களின் தலைவரும் மாவட்ட இளைஞர்களின் தலைவருமாவார். அவர் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிரிஸ்தவம் ஆகிய எல்லா மத்களையும் சேர்ந்த இளைஞர்களின் வாக்குகளால் மாத்தறை மாவட்ட இளைஞர் பாராளுமன்றத்தின் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார். த கட்டுமரனுக்காக அவர் வழங்கிய செவ்வி. த கட்டுமரன் : – பௌத்த பாடசாலையொன்றில் படித்தவர் என்ற வகையிலும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் புகழ் பெற்ற ஒரு இளைஞர் கழகத்தின் தலைவர் என்ற வகையிலும் […]

மொஹமட் நிஹ்மி யூசுப் மாத்தறை மாவட்ட இளைஞர் கழகங்களின் தலைவரும் மாவட்ட இளைஞர்களின் தலைவருமாவார். அவர் பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிரிஸ்தவம் ஆகிய எல்லா மத்களையும் சேர்ந்த இளைஞர்களின் வாக்குகளால் மாத்தறை மாவட்ட இளைஞர் பாராளுமன்றத்தின் அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டார். த கட்டுமரனுக்காக அவர் வழங்கிய செவ்வி.

த கட்டுமரன் : – பௌத்த பாடசாலையொன்றில் படித்தவர் என்ற வகையிலும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் புகழ் பெற்ற ஒரு இளைஞர் கழகத்தின் தலைவர் என்ற வகையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலைமைகள் தொடர்பாக உங்களது கருத்து என்ன?
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் நான் எனது பல நண்பர்களை தொடர்புகொண்டு கதைத்தபோது இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் ஒரு முஸ்லிம் குழு என்பதை அறிய முடிந்தது. சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து முஸ்லிம்களது உள்ளங்களை புண்படுத்தும் விதமாக தகவல்களை வெளியிட்டன. நாம் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் எல்லா முஸ்லிம்களும் இனவாதிகளோ அல்லது பயங்கரவாதம் போன்ற நாசகார செயல்களை ஆதரிக்கக் கூடியவர்களோ அல்ல. இந்த சம்பவத்துடன் ஒரு சிறிய முஸ்லிம் இளைஞர் குழுவினரே சம்பந்தப்பட்டுள்ளனர். நான் இப்பிரதேசத்தில் பௌத்தர்களால் தெரிவு செய்யப்பட்டு இளைஞர்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். நாம் முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் இஸ்லாம் ஏனையவர்களை கொலை செய்யவோ துன்புறுத்தவோ தூண்டி அதன் மூலம் சுவர்க்கத்தை அடையலாம் என்று போதனை செய்யும் மார்க்கம் அல்ல. அத்துடன் இஸ்லாம் தற்கொலையை ஒருபோதும் ஊக்குவிப்பதும் இல்லை. இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு நரகமே தங்குமிடமன்றி ஒருபோதும் சுவர்க்கம் செல்ல முடியாது.

த கட்டுமரன் : – மனதை புண்படுத்தும் கதைகளை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?அத்தகைய நிலைமைகளை வளர்ப்பதில் சில ஊடகங்களே கடுமையான பங்களிப்பை செய்தன. பேஸ் புக் ஆகிய சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடியவர்கள் அதிகமாக இளைஞர்களாவர். கிராமப்புரங்களைச் சேர்ந்த மக்கள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாகவே தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர். ஊடகங்கள் அவர்கள் மத்தியில் சந்தர்ப்பத்தை பயபன்படுத்தி அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியதோடு முஸ்லிம்களுக்கு எதிரான கதைகளை பரப்பி முஸ்லிம் விரோத போக்கை வளர்த்தன. இந்த நிலைமைகள் தொடர்பாக நான் பல சந்தர்ப்பங்களில் மிகவும் கடுமையான வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டி இருந்ததோடு எங்களுக்கிடையிலான நட்புறவு பற்றி மிகவும் கவலைய டைந்தேன்.

த கட்டுமரன் : – ஒரு முஸ்லிமாக இருந்தும் நீங்கள் மிகவும் சாரளமாக சிங்கள மொழியை பேசுகின்றீர்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் எவ்வாறு உங்களது சமூக வாழ்க்கையை பாதித்தது?
நான் ஒரு பௌத்த விகாரை பாடசாலையில் கற்றுக்கொண்டதால் எனக்கு சிங்களம் சரளமாகத் தெரியும். அத்துடன் நான் ஒரு கைத்தொலைபேசி தொழில்நுட்பவியலாளராகவும் தொழில் புரிகின்றேன். இந்த தொழிலை செய்கின்ற போது எனக்கு சில சந்தர்ப்பங்களில் சிங்களம் தெரியாத தமிழ் பேசும் மக்களோடும் உரையாட வேண்டிய நிலைமைகள் உள்ளன. நான் என்னைத் தேடி வருபவர்களோடு வசதியான மொழியில் தொடர்பை மேற்கொள்ளாவிட்டால் அவர்கள் திரும்பிச் சென்று விடுவர். அதனால் மொழி எனக்கு தடையல்ல. சில சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குமார் என்னை சிறந்த முறையில் ஊக்கப்படுத்தியுள்ளனர். அவர்கள் அடிக்கடி எனக்கு நல்லதை செய்யுமாறு வலியுறுத்துகின்றனர். பௌத்த கோட்பாடானது நடைமுறை பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வுகளை முன்வைக்கின்றது.

த கட்டுமரன் : – அதிகமான இளைஞர்கள் அரச மற்றும் பொதுத் துறைகளில் வேலைகளை தேடுவதில் ஆர்வம் காட்டுகின்ற இன்றைய காலகட்டத்தில் நீங்கள் ஒரு இளைஞராக மூன்று மொழிகளிலும் மிகவும் பரிச்சயமான ஒருவராக இருந்துகொண்டு ஏன் சுய தொழில் முயற்சியை தெரிவு செய்தீர்கள்?
நான் இந்த நாட்டை நேசிக்கின்றேன். எனது தாய் அடிக்கடி என்னை ஒரு அரசாங்க தொழிலை பெற்றுக் கொள்ளுமாறு கோரி வருகின்றார். அத்துடன் எனக்கு பல வெளிநாட்டு தொழில் வாயப்புக்களும் தேடி வந்தன. ஆனால் எனது இதயம் இங்கே இருக்கின்றது. சிலர் எனக்கு கிடைத்த நல்ல பல சந்தர்ப்பங்களை கைநளுவ விட்டதால் நான் ஒரு முட்டாள் என்று நினைக்கின்றனர். நான் வெளிநாட்டு பயிற்சிகளுக்கும் செயலமர்வுகளுக்கும் போகின்றபோது இந்த நாட்டின் மதிப்பையும் பெறுமதியையும் நான் உணர முடிகின்றது. நான் கடினமாக சிரமப்பட்டு உழைப்பதால் எனது சிரமத்தை இந்த நாட்டின் வளர்ச்சிக்காக செலவிட்டு இலங்கையர் என்ற உணர்வுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புகின்றேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்த போதும் மிகவும் உன்னத நிலையில் மதிக்கக்கூடிய பௌத்த பாடசாலையொன்றில் கல்வி அறிவை பெற்றவனாவேன்.

த கட்டுமரன் : – ஒரு இளைஞர் தலைவர் என்ற முறையிலும் வெளிநாட்டு அனுபவங்களின் அடிப்படையிலும் உள்ளங்களை புண்படுத்தும் வகையில் மக்களைத் துண்டக்கூடிய பேச்சுக்களைத் தவிர்ப்பது தொடர்பாக உங்கள் கருத்துக்கள்?
சஹ்ரான் என்பவன் மதத்தின் பெயரால் ஒரு தவறான நம்பிக்கை கொண்ட பிழையாக வழி நடத்தலுக்குட்பட்ட ஒருவனாவான். எதற்காக ஒருவன் சுவர்க்கம் சென்று பெண்களுடன் வாழ மற்றவர்களை கொலை செய்ய வேண்டும்? அப்படியான கோட்பாடுகள் எதுவும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். இது ஒரு மத நம்பிக்கையை தவறான செயற்பாட்டிற்கு திசை திருப்பி இளைஞர்களை பிழையாக வழி நடத்தியுள்ள உளவியல் ரீதியான பாதிப்பு என்றே நான் கருதுகின்றேன். இதனால், பலதரப்பட்ட நம்பிக்கைகளை உறுதியான நம்பிக்கையாக

என்னால் சிங்களத்தில் பேச அல்லது எழுத, வாசிக்க முடியாவிட்டால் நான் வெட்கப்பட வேண்டும்.
கட்டியெழுப்புவதற்காக கலந்துரையாடல்களையும் விவாதங்களையும் நாங்கள் நடத்தவேண்டும். எல்லா மதத் தலைவர்களும் ஐக்கியமாக வாழ்வது தொடர்பாக அவர்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் உலமாக்கள் அரபு மொழியை கற்பது போன்று சிங்கள மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் மக்கள் மத்தியில் உண்மைகளை தெளிவுபடுத்த முடியும். ஒரு சிறிய தவறான புரிந்துணர்வானது இனங்களுக்கிடையிலும் நாட்டிலும் பாரிய அழிவுகளுக்கு வழிவகுக்கலாம்.

த கட்டுமரன் : – தற்போதைய சூழ்நிலையில் முன்னோக்கி நகர்வது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
ஒரு இளைஞர் தலைவர் என்ற முறையில் என்னால் எனது நாட்டிற்கு ஆற்ற முடிந்துள்ள சேவை குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். நான் அரசியலில் ஈடபட முயற்சி செய்கின்றேனா என்று எனது நண்பர்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். நான் கருதுவது நாட்டிற்கு சேவையாற்ற அரசியலே அவசியம் என்று இல்லை. அரசியல் இல்லாமலே எங்களால் அதிகமான சமூக பணிகளை நாட்டிற்கு ஆற்ற முடியும். எனக்கு தமிழ் பேச முடியும். ஆனால் எனக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ முடியாது. ஆனாலும் நான் ஒரு முஸ்லிம். இருந்தாலும் மிகவும் சாரளமாக சிங்களத்தில் பேச, எழுத மற்றும் வாசிக்க என்னால் முடியும். அதற்காக எனது ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளிலான இயலாமை குறித்து நான் வெட்கப்படவில்லை. ஆனால் என்னால் சிங்களத்தில் பேச அல்லது எழுத, வாசிக்க முடியாவிட்டால் நான் வெட்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் பிரச்சினைகளின் ஊடாக அரசியல் பிரபல்யத்தை தேட முற்படக்கூடாது. அவர்கள் எப்போதும் பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணங்களை கண்டறிந்து அவற்றிற்கு அரசியல் நடத்தையின் மூலம் தீர்வுகளையும் அதற்கான கொள்கைகளையும் முன்வைக்க வேண்டும். துரதிஷ்டவசமாக எமது நாட்டில் அரசியல்வாதிகள் அவர்களது நலன்களை குறிக்கோளகக் கொண்டு மேலும் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையுமே எதிர்பார்க்கின்றனர். அத்தகைய சில நடவடிக்கைகளானது குறுகிய நலனை அடிப்படையாகக் கொண்ட பிரதிபலன்களையே தரக்கூடியது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவதில்லை.

This article was originally published on the catamaran.com
SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts