இலங்கையில் பெண்ணியவாதம் தூரமாக்கும் கருதுகோளாக உள்ளதா?
நடாலி சொய்சா
நான் ஒரு பெண்ணியவாதி அல்ல எனச் சிந்தித்தவாறு அதிக நேரத்தை செலவிட்டேன்.
இது நானாக, எட்டிய ஒரு முடிவு அல்ல – அது ஒரு எதிர்வினையாகவே பெறப்பட்டது. ஏனெனில், பெண்ணியவாதிகள் தூரமாவதை நான் கண்ணுற்றேன். நான் கருத்திற்கொள்ளாத மேலும் என்னால் புரிந்து கொள்ள முடியாத மொழிநடையை அவர்கள் பயன்படுத்துகின்றனர். உண்மையில் எவரும் இதனை எனக்கு விளக்கவில்லை, நான் இன்று உள்ள நிலையை அடைவதற்கு எனது வழிகள் மற்றும் கற்ற விடயங்களை மறத்தல் என்பவற்றை மறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
எனவே, நான் தவற விடும் அந்த விடயம் என்ன? அந்த செய்தி. அது எனக்குரியது, அதனை நான் பெற்றுக்கொண்டிருக்கிறேன்.
பெண்ணியவாதம் அல்லது பெண்ணியவாத கொள்கை வழங்கிய மொழிநடை அல்லது கருதுகோள்கள் பற்றி அதிகமான இலங்கையர்கள் நன்கு அறிந்தவர்களாகவோ அல்லது கருத்திற்கொள்பவர்களாகவோ இல்லை. இந்த மனநிலையே ஏனைய பாடவிதானங்கள் தொடர்பிலும் காணப்படுகின்றது. தற்போதைய கடினமான காலப்பகுதியில் முன்னுரிமைகள் வித்தியாசமானவை. உணவுத் தேவையை பூர்த்தி செய்தல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு நெருக்கடி நிலையில் இருந்து விடுபடல் என்பன மிக முக்கிய விடயங்களாக அமைகின்றன, எனவே, இந்த தேவைகளுடன் மிகவும் குறைந்த தொடர்பு கொண்ட விடயம் ஒன்றில் அவர்கள் இணைவார்கள் என எவ்வாறு நாம் எதிர்பார்க்க முடியும்?
அளவுக்கதிகமான அனுமானங்கள்
இலங்கையில் இடம்பெறும் பெண்ணியவாத பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் வழியில் ஏதோ ஒரு விடயம் ஆழமாகப் பொருந்தாத நிலையில் அல்லது அது இல்லாத நிலையில் உள்ளதாக நான் நம்புகின்றேன். இப்பிரச்சாரத்தை இலங்கையின் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தாது அதனை உலகின் வேறு பகுதிகளில் இருந்து பெற்று உள்ளுூருக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து முன்னெடுக்கப்படுவது போல் தோன்றுகின்றது. இவ்வழிமுறைக்கு இலங்கை இன்னும் தயாராகவில்லை. பொது மக்கள் ஆணாதிக்கம் அல்லது நச்சுத்தன்மை மிக்க ஆண்மை போன்ற வார்த்தைகளை மற்றும் அவை எவ்வாறு செயற்படுகின்றன என அறிந்தவர்களாக உள்ளனர் என்ற அனுமானம் இங்கு எடுக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.
இன்னொரு விடயத்தை நோக்கும் போது இது தொடர்பான செய்திகள் பெண்ணியவாதம் பற்றிய கல்வியில் புரிதல் உள்ளவர்களாலேயே உருவாக்கப்படுகின்றன, இவர்களின் காரண காரிய விளக்கம் மற்றும் சிந்திக்கும் பாதை என்பன இலங்கையில் உள்ள ஏனையோரால் புரிந்து கொள்ளப்படுகின்றது என்ற அனுமானத்திலேயே இவ்வாறான செய்திகள் உருவாக்கப்படுகின்றன. உண்மையில் அவ்வாறான புரிதல் காணப்படுவதில்லை. அவ்வாறான உள்ளடக்கங்களை புரிந்துகொள்ளாத அல்லது அவற்றை தொடர்புபடுத்த முடியாத வாசகர்கள் அவற்றை நோக்காது விட்டுவிடுகின்றனர். அதன் பின்னர், பால்நிலை தொடர்பான நாட்டின் சமகால நிலையினை மாற்றியமைக்க வைக்கப்படும் பெரிய அடிகள் மற்றும் சிறந்த பணிகள் அனைத்துமே
பிரயோசனமற்றதாக மாறி விடுகின்றன.
மேலும், தொடர்பாடல்களை திட்டமிடும் வேளை பொதுமக்கள் காணப்படும் அல்லது காணப்படுவதாக அனுமானிக்கப்படும் பக்கச்சார்பு கருத்திற்கொள்ளப்படுவதில்லை. பெண்ணியவாதத்தை நோக்கிய மனப்பாங்குகள் இங்கு பல வகைகளில் காணப்படுகின்றன, சிலர் பெண்ணியவாதிகளை ஆண் வெறுப்பாளர்களாக நோக்கும் அதேவேளை ஏனையோர் பெண்ணியவாதம் பேசப்படும் வேளை அதனை சிரித்து விட்டு கடந்து செல்பவர்களாக, சிலவேளைகளில் அவர்களை வைத்து வேடிக்கை செய்பவர்களாகவும் காணப்படுகின்றனர். பலர் பெண்ணியவாத உரையாடல்கள் இடம்பெறும் வேளை அவ்விடத்தை விட்டு அகன்று விடுகின்றனர் – ஏனெனில் அங்கு போதிக்கப்படும் விடயம் அத்துடன் அது சொல்லப்படும் விதம் தொடர்பில் அவர்களுக்கு எந்தவித விருப்பையும் காண முடியாமல் உள்ளது. சொல்லப்படும் செய்தியைப் போன்று இந்த தடைகள் மற்றும் பக்கச்சார்புகளையும் வெற்றிகொள்வதும் முக்கியமானதாகும்.
மனித உள்நோக்கு காணப்படா நிலை
உங்கள் பார்வையாளர்கள் யார் என்பதை புரிந்துகொள்வது சிறந்த தொடர்பாடல் ஒன்றின் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என உங்களால் தேடி அறிந்து கொள்ள முடியாவிட்டால் அவர்களுடன் உங்களை தொடர்புபடுத்த முடியாதுரூபவ் இது தகவலில் தவறவிடப்படும் இன்னொரு விடயமாகவுள்ளது. இலங்கையில் பெண்கள் நியாயமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர் என நாம் அறிவோம். நியாயமற்ற சம்பள இடைவெளிகள், பாலியல் வன்புணர்வு, கருக்கலைப்பு, பராமரிப்பு வேலை, துஷ்பிரயோகம் போன்ற எந்த ஒரு விடயமும் பொதுமக்களின் கவனத்தைக் கவர தவறுவதில்லை. எனினும் இவற்றுக்கு கிடைக்கும் பதில்கள் எப்போதும் விருப்பற்றனவாகவே அமைகின்றன. நாம் குரலெழுப்பி பேசுவது அல்லது மக்கள் பெருமளவில் ஒன்றிணைவது ஆணாதிக்க ஆண் அரசியல்வாதிக்காகவே இடம்பெறுகின்றது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்காக இவ்விடயங்கள் மிகவும் குறைவாகவே இடம்பெறுகின்றன, இதற்குரிய காரணம் அவர்கள் நலிவான பாலினத்தவராக அமைவதாகும், அது பின்னர் அவர்களின் குரல்களை மறுப்பதாக மாற்றமடைகின்றது. இந்நிலை காரணமாக இந்த வாழ்வுச் சூழமைவில் வாழப் பழகிக்கொண்டுள்ளனர். இதற்கு விதிவிலக்குகள் எவையும் இல்லை எனக் கூற முடியாது. அண்மையில் இளம் சூழல் செயற்பாட்டாளரான பாக்யா அபேரத்னவுக்கு இலவச சட்ட சேவை வழங்கும் ஆண் வழக்கறிஞர்களின் அணி ஒன்று ஆதரவளித்தது மனதைத் தொடும் விடயமாக அமைந்திருந்தது. இங்குள்ள பிரச்சினை என்னவென்றால் இவ்வாறான விடயங்கள் போதுமானளவு இடம்பெறாமையாகும்.
பிரச்சினையை ஏற்றுக்கொள்ளும் நாம் அதனை தீர்ப்பதற்கான இயங்குநிலை மிக்க உதவியை வழங்குவதில்லை. கருதுகோள் எவ்வளவு நியாயமற்றதாக இருப்பினும், எமது குறுகிய மனநிலை காரணமாக நாம் ஆறுதலாக வாழ்வை அவ்வாறே ஏற்றுக்கொள்கின்றோம். “விடயங்கள் அவ்வாறே உள்ளன” எனக் கூறும் நாம் அதனைத் தொடர்ந்து ‘எம்மால் என்ன செய்ய முடியும்?” எனக்கூறுகின்றோம். இலங்கை மக்களிடம் ஆழ வேரூன்றியுள்ள இந்த மனநிலையை கருத்திற்கொள்ளாமல் பெண்ணியவாத செய்திகள் எவ்வாறாவது மக்களிடம் வழங்கப்படுகின்றன, இதன் காரணமாக அந்த செய்தியின் வினைத்திறன் இல்லாமல் போய் விடுகின்றது.
டிஜிட்டல் காலப்பகுதியில் பெண்ணியவாதம்
டிஜிட்டல் காலப்பகுதி என்பது உரையாடல் ஆரம்பமாகிய காலப்பகுதியாகும். இது தொடர்பாடல் என்ற எமது எண்ணக்கருவை நபர்களின் தொடர்பற்ற ஒரு வழியில் அமைந்த தொலைக்காட்சி அல்லது செய்திப்பத்திரிகை போன்ற வழிகளில் இருந்து இடையீடு மிக்க, நபர்களுக்கு தனித்துவமான மற்றும் இருவழியில் அமைந்ததாக மாற்றியமைத்துள்ளது. எனினும் இலங்கையில் உள்ள பெண்ணியவாத பிரச்சாரகர்கள் இந்த நிலை மாற்றத்தை தவறவிட்டுள்ளதாக தோன்றுகின்றது. சமூக ஊடகங்களில் “ஆணாதிக்கம் ஒழிக” என்பது கவர்ச்சிகரமான வடிவமைப்புகளை கொண்டிருப்பது விடயங்களை மேற்கொள்ள வேண்டாம். அவை பல மக்களுக்கு ஒரு பொருளையும் வழங்காததுடன் அவை உரையாடல்களையும் தூண்டாது.
இங்கு பெண்ணியவாத செய்திகளின் சக்தியை பெற்று புரிந்து கொள்ளும் திறன் கொண்ட உண்மையான வாசகர்களாக ஏனைய பெண்ணியவாதிகளே அமைந்துள்ளனர். மத போதகர்களுக்கு போதனை செய்வது இடம்பெறுமானால், அவ்வாறான குழுக்கள் புதிய வாசகர்களை சென்றடையும் விருப்பற்றவை – அல்லது வினைத்திறனுடன் தொடர்பாடுவதற்கு தேவையான வளங்கள் அற்றவை என்றே கருத வேண்டியுள்ளது. இதுவே காரணமானால், இவ்விடயத்தில் வளங்களுக்கான அவசர தேவை ஒன்று காணப்படுகின்றது. இலாப நோக்கற்ற துறைகளிடம் இருந்து வரும் கல்வி இங்கு அவசியமாகின்றது.
வர்த்தக ரீதியான தொடர்பாடல் நிபுணர்களை நோக்கி சாய்வது ஒரு தீர்வாக அமையும். இலாபமீட்டும் வர்த்தக நாமங்கள் தமது சந்தைப்படுத்தல் தொடர்பாடல்களில் என்ன கருவிகளை, ஊடகங்களை மற்றும் குரலின் தொனியை பயன்படுத்த வேண்டும் என அறிந்துள்ளமையினால் அவற்றினால் பார்வையார்களை வினைத்திறனுடன் சென்றடைய முடிகின்றது. பார்வையார்களை சென்றடைதல் என்ற இந்தத் தேவை பெண்ணியவாத பிரச்சாரத்தினுள்ளும் மாற்றமடையாமல் காணப்படுகின்றது. இந்த நாட்டில் சந்தை தொடர்பாடல் நிபுணர்கள் பலர் உள்ளனர்.
முற்றுமுழுதான வர்த்தகப் பாதை தீர்வாக அமையாத போதும், இந்த இரண்டு விடயங்களுக்கும் இடையான சமநிலையை அடைந்து கொள்வது இந்நாட்டில் உள்ள பெண்ணியவாத குழுக்களுக்கு வெற்றிகரமான வழியாக அமையும்.இங்குள்ள விடயம் யாதெனில், இலங்கையருக்கு இந்த செய்தியை கொண்டு சேர்ப்பதன் ஊடாக அவர்களை தட்டியெழுப்பி கவனம் செலுத்த வைப்பதாகும்.
Is Feminism An Alienating Concept In Sri Lanka?
ස්ත්රීවාදය ශ්රී ලංකාවට නොගැලපෙන සංකල්පයක්ද?