இராணுவ சர்வாதிகாரமா? தீவிர ஜனநாயகமா? (பகுதி 2)
2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று சில விநாடிகளுக்குப் பின்னர், நான் முகநூலில் இவ்வாறு “Just started the next presidential election campaign with a black Sunday” (கருப்பு ஞாயிறு தினமொன்றுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன) என பதிவிட்டேன். தாக்குதல் நடைபெற்ற தருணத்திலிருந்து பல சமூக ஊடகங்களில் “கோட்டாபய இருந்திருந்தால், இன்று இப்படி நடைபெற்றிருக்காது” என்ற வாசகம் பரவத் தொடங்கியது. இது மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்ட தேர்தலுக்கு முன்னரான பிரச்சாரமும் சமிக்ஞையுமாகுமென்பது மிகவும் தெளிவானதாகும். ஜனாதிபதித் தேர்தல் அபேட்சகராவது பற்றி கோட்டாபய ராஜபக்ஷ தனது தீர்மானத்தினை அறிவிக்கும் போது “தீவிரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு நான் அடுத்த தேர்தலில் போட்டியிடுகின்றேன்” என அதன்படி தெரிவித்தார். நாம் இப்போது அனுபவிக்கும் வலதுசாரி ஜனரஞ்சகத்தின் புதிய போர்வையானது (New frenzy) இராணுவவாத சிங்கள பௌத்த சர்வாதிகாரமாகும். இந்த கருத்தியல் மற்றும் அரசியல் பிரச்சாரத்தை செயற்றிட்டமாக ஜனாதிபதித் தேர்தல் மேடைக்குக் கொண்டு வந்தது கோட்டாபயவுடனான வியத்மக எனும் பொதுன பெரமுனவின் பிரச்சாரப் படையணியாகும். இந்த அரசியல் செயற்றிட்டத்தின் கருத்தியல் பொறிமுறையினுள் மதத் தலைவர்களின் கருத்துக்கள் தீர்மானமிக்கவையாகும்.
தேர்தலை அண்மித்து, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரினால், இந்த நாட்டிற்கு ஹிட்லரைப் போன்ற ஒரு ஆட்சியாளர் தேவை என்று கூறியதன் மூலம் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் கொடூரமான தர்க்கத்தைக் காட்டுகிறது. ஒரு ஹிட்லர் மீண்டும் வர வேண்டும் என்று மனசாட்சிப்படி யார் பிரார்த்திக்க முடியும்? இனப்படுகொலைக்கு ஒப்புதல் அளிக்கும் மற்றும் பங்களிக்கும் ஒருவரன்றி மனிதாபிமானத்தை மதிக்கும் விழுமியங்களை மதிக்கும் ஒருவரால் அத்தகைய அறிக்கையை வெளியிட முடியுமா? அதன்படி, தேசியவாதிகள் சிங்கள பௌத்தராக இருந்தால் மட்டும் இனி போதாது. அவர்களுக்கு ஒரு சிங்கள பௌத்த இராணுவமும் வேண்டும். எனவே, இப்போது ஒரு சவாலை சிங்கள பௌத்த தேசியவாதிகளிடம் ஒப்படைக்க வேண்டும். முடிந்தால், இராணுவத்தை விமர்சித்துக் கொண்டு, சிங்கள பௌத்த பேரினவாதத்தை பாதுகாத்துக் காட்டுங்கள். இராணுவ வீரர்களுக்கும் அதுபோன்றே, முடிந்தால், சிங்கள பௌத்த சித்தாந்தத்தை விமர்சித்துக் கொண்டு உங்கள் போர் வீரத்தை பாதுகாத்துக் காட்டுங்கள் என்பதாகும்.
நாட்டின் பல துறைகளின் நிர்வாகம் படிப்படியாக இராணுவத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றது. இருப்பினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2018 ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, ஜனபலசேனா போராட்டத்தில் இணைந்து ஒரு அற்புதமான அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதாவது, “அவர்கள் இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முயற்சிக்கின்றனர். இது ஒரு ஆபத்தான காரியமாக இருக்கும்” என்று அன்று அவர்கள் இராணுவமயமாக்கலுக்கெதிராக கருத்துத் தெரிவித்த போதிலும் இராணுவ பின்னணியில் இருந்து வந்த தமது சகோதரராகிய கோட்டாபய ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தினார். அதாவது, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பீதியினை அரசியல் ரீதியான நன்மைபயப்பதாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அவர்கள் இராணுவமே ஒரேயொரு மீட்பு எனும் மூடநம்பிக்கையை மக்கள் கருத்தாக மாற்றுவதில் வெற்றி கண்டனர். இதற்குப் பல மதத் தலைவர்களின் அனுசரணையும் கிடைத்தது. இந்த பிரச்சாரத் திட்டத்திற்கு சிங்கள பௌத்த தேசியவாதத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்தை எளிதில் அடக்கிவிடும் என்பதைக் காட்டுகிறது. சிங்கள பௌத்தராக மாறுவதற்கான மிக உயர்ந்த தகுதி நமது ஒரே மீட்பர் இராணுவம் என்பதை ஏற்றுக்கொள்வதாகும். இவ்வாறு வளர்ந்து வரும் இராணுவ சர்வாதிகாரத்தின் கருத்தியல் அடிப்படையானது ஐந்து நன்கு அறியப்பட்ட அம்சங்களில் வளர்ந்துள்ளது.
- சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே நாடு பற்றிய ஒரு உணர்வு இருக்கிறது
- எனவே, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மற்றும் பிற சமூகத்தவர்கள் பௌத்த பெரும்பான்மையினரின் கீழ் இருக்க வேண்டும். அல்லது அவர்கள் வேறு நாடுகளுக்குச் செல்லலாம்.
- நீங்கள் கோட்டாபயாவுடன் விளையாட முடியாது
- இதுவே கடைசி வாய்ப்பு, இல்லையெனில் சிங்கள இனம் முடிந்து விடும்
- இராணுவத்தைப் பயன்படுத்தி ஆட்சி செய்தால், எல்லாம் சரியாக இருக்கும்
இந்த ஐந்து கதைகளும் நன்கு அறியப்பட்டவையாகும். அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி அந்த கூற்றுகளை கேட்கிறோம். ஆனால் வளர்ந்து வரும் இந்த இராணுவ சர்வாதிகாரம் நாசிசத்தைப் போலவே ஆபத்தானது. இப்போது நாம் அனுபவித்து வரும் நிலைமை என்னவென்றால், இராணுவ சர்வாதிகாரம் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் மிகவும் இழிந்த தர்க்கத்துடன் ஆயுதம் ஏந்தியுள்ளது. ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, முஸ்லிம் துணிக்கடைகளுக்குச் சென்ற மக்களுக்கு கூழ் முட்டைகளை வீசி முஸ்லிம் விரோத சிங்கள பௌத்த வன்முறையானது ஹிட்லரைப் போன்ற ஒரு இராணுவ சர்வாதிகாரியின் அரசியல் பிரவேசத்திற்கு வழி வகுத்தது. ஹிட்லரின் நாசிஸ ஆட்சியைக் கட்டியெழுப்ப ஆரிய ஜெர்மன் பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரச்சாரமே உதவியது. கோயபல்ஸின் ஆலோசனையின் கீழ் ஜேர்மன் தேசத்தின் மீட்பர் ஹிட்லர் என்ற மூடநம்பிக்கையைப் பரப்புவதன் மூலம் தொடங்கிய பாசிச ஆட்சி, யூதர்களின் படுகொலையுடன் முடிந்தது.
எனவே, காலப்போக்கில், வரலாறு நிகழ்காலத்தையும்; நிகழ்காலம் வரலாற்றையும் சந்தித்துள்ளது. பாரம்பரிய பாசிசவாதம் தேசிய ஒற்றுமை பற்றி பிரசங்கித்தது. சுருக்கமாகக் கூறினால், இது ஒரு ஐக்கியப்பட்ட ஜெர்மனியின் மாறுவேடமாகும். ஒரு அழகான சொற்களின் தொகுப்புடன் பிரபலமான மற்றும் இலட்சிய அரசியல் இலக்கியங்களில் அங்கீகரிக்கப்பட்ட இது ஒரு குறிப்பிட்ட தேசிய அபிலாஷையை ஒவ்வொரு ஜேர்மனியரின் கைகளிலும் வைத்தது. அதிக பக்தியுடன், ‘தேசிய சோசலிசம்’ எல்லா இடங்களிலும் பலத்தாலும் மற்ற இடங்களில் மயக்கத்தினாலும் எல்லா இடங்களிலும் பரவியது. “எழுந்திரு” “எழுந்திரு” என்று பயங்காட்டினர். தேசிய பணியானது முழு தேசத்தின் பொறுப்பு என்று அரசியல் ரீதியாக மகிமைப்படுத்தவும், அதற்குக் கீழே உறக்கத்திலுள்ள அடிமட்ட ஜெர்மனியனின் அறிவினை நல்லடக்கம் செய்யவும் நாசிசவாதிகளால் முடிந்தது.
இலங்கையில் வலதுசாரி அணியானது எல்லா வகையிலும் இனவாதம் கொண்டதாகும். இன்று அது சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் என இனரீதியாகப் பிரிந்துள்ளது. அதன் பிரசங்கம் இன ஒற்றுமையாகும். ‘இனம் ஆபத்தில் உள்ளது’ என்று இனத்தின் நன்மைக்காக ஒரு இனப் பிராந்திய பழங்குடியினரை அது வரையறுத்துள்ளது. ஒரே வரலாற்றை இனரீதியாக துண்டு துண்டாக்கி, ஒரு சாகச பயணம் செய்யும் தூய்மையின் ஒரு கானல் நீருக்குப் பின்னால் ஒரு அழிவுகரமான திசையில் பயணம் செய்யத் தொடங்கியது. இனவாதம் தொடர்ந்து தனது சொந்த இனத்திற்கு ஒரு தேசிய அபிலாஷையை உருவாக்குகிறது. அதாவது, இது ஒரு மேலாதிக்க-இனத்தை இலங்கை மயமாக்குவதுடன் அதனால் போசிக்கப்படும் சிறுபான்மை கூட்டணிகளாக இரண்டு மூன்று திசைகளாகப் பிரிந்து வேறாகியுள்ளது. இராணுவமயமாக்கலுடன் கைகோர்த்துச் செல்வது சிங்கள-g Buddhist த்த இனவாதத்தின் மிகவும் இழிந்த உள்ளுணர்வாகும். அது இலங்கை நாசிசத்தைத் தவிர வேறொன்றல்ல.