சமூகம்

இன மத பேதம் இல்லை. இனிமையான வார்த்தைகள் இதயத்தை இணைக்கும்!

சரத் மனுல விக்கிரம

நான் ஆசிரியராக தொழில் புரிந்து விட்டு எனது குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப அந்த வருமானம் போதுமானதாக இருக்காததால் ஆசிரிய தொழிலை விட்டுவிட்டேன். இப்போது நான் வெற்றியடைந்ததாக உணர்கிறேன். என்னிடம் அதிக பணம் இருக்கின்றது என்பது இதன் அர்த்தம் அல்ல. இப்போது எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். இரவு பகலாக அவர்களின் தேவைக்காக நான் கடுமையாக வேலை செய்கிறேன்…

குருணாகலையில் தையல் வேலைகளில் ஈடுபட்டு வரும் பௌத்த சமூகத்தில் வாழும் ஒருவரான டில்மி பாதிமாவுடன் த கட்டுமரன் அண்மையில் சந்தித்து உரையாடியது. அவர் அப்பிரதேசத்தில் உள்ள அனைவராலும் மிகவும் விரும்பத்தக்க ஒருவராகவும் மனித நேயம் மிக்க ஒருவராகவும் இருந்து வருகின்றார். இன, மத வேறுபாடுகள் இன்றி அனைவருடனும் இனிமையாக உரையாடி நல்லெண்ணத்தை வென்ற ஒரு பெண்ணாக அவர் மதிக்கப் படுகின்றார்.

“நான் ஆசிரியராக தொழில் புரிந்து விட்டு எனது குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப அந்த வருமானம் போதுமானதாக இருக்காததால் ஆசிரிய தொழிலை விட்டுவிட்டேன். இப்போது நான் வெற்றியடைந்ததாக உணர்கிறேன். என்னிடம் அதிக பணம் இருக்கின்றது என்பது இதன் அர்த்தம் அல்ல. இப்போது எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். இரவு பகலாக அவர்களின் தேவைக்காக நான் கடுமையாக வேலை செய்கிறேன். நான் நம்பிக்கையை பாதுகாத்து வருகிறேன். என்னிடம் வரும் அனைவரும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்களாவர். அவர்கள் என்னை அதிகமாக நேசிக்கின்றனர்” என்று டில்மி பாதிமா தெரிவிக்கின்றார்.

டில்மியும் அவரது கணவர் அசாமும்

டில்மியும் அவரது கணவர் அசாமும் குருணாகலையில் வசிக்கின்றனர். சிங்கள மொழியால் அவர்கள் பாசப்பிணைப்பில் இணைந்தவர்களாவர். அவர்கள் சிங்களத்திலே சாரளமாக பேசி உரையாடுவதோடு சிந்திப்பவர்களாகவும் உள்ளனர். அவர்களிடம் உதவியாளராக வேலைசெய்வது ஒரு சிங்களப் பெண்தான். இலங்கை முஸ்லிம்களது கலாச்சாரமாக இருந்து வருவது சிங்களவர்களோடு மாத்திரம் சிங்களத்தால் உரையாடுவதாகும். வீட்டிலும் அவர்களது சமூகத்தவர்கள் மத்தியிலும் பேச்சு மொழியாக இருந்து வருவது தமிழ் மொழியாகும்.

சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியையாக கடமையாற்றிய டில்மி 2014 ஆம் ஆண்டு குருணாகலையில் தையல் பயிற்சியை பெற்ற பின்னர் ஆடை தயாரிப்பு பற்றிய வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். அவர் திருமண ஆடைகளை தைப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஒருவராக இருந்து வருவதோடு மணப் பெண்களை அலங்காரம் செய்யும் தொழிலையும் அவர் மேலதிகமாக செய்து வருகின்றார். அத்துடன் இரவு நேரத்தில் அணியும் ஆடைகள் உபட்பட அனைத்து விதமான ஆடைகளையும் தைத்து வருகின்றார்.

ஒருவரது உடை அவர்களது கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாக அமைந்தூலும் டில்மியின் வடிவமைப்பில் சிங்களவர், தமிழர் அல்லது முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லை. டில்மியை அதிகமான மணப் பெண்கள் தேடி வருவதற்கான காரணம் அவரது தொழில் பற்றி அறிந்து வைத்திருப்தோடு அவரை தனிப்பட்ட முறையில் அறிந்து, பேணி வருகின்ற நட்பின் அடிப்படை யிலுமாகும். தற்போது டில்மிக்கு ஏற்பட்டுள்ள வியாபர முன்னேற்றம் காரணமாக அவர் அப்பிரதேசத்தில் உள்ள சிங்கள பெண்கள் சிலரையும் வேலைக்கு சேர்த்துக் கொண்டுள்ளார்.

தேசியவாத அடிப்படையிலான வற்புறுத்தல் காரணமாக இன ரீதியான நிகழ்ச்சி நிரலின் செயற்பாடுகள் காரணமாக சிங்களவர்கள் முஸ்லிம்களது வியாபாரத்தையும் வர்த்தகத்தையும் பகிஷ்கரித்து வருகின்ற நிலையில் டில்மியின் வாடிக்கையாளர்கள் மிகவும் உயர்வான இடத்தில் இருப்பதாக அவர் கருதுகின்றார்.

“நாம் ஏன் டில்மியின் கடைக்கு வருகின்றோம்? ஏனெனில் அவரது சிங்கள மொழி ஆற்றல் இல்லை. நாம் அவருக்காககத்தான் அங்கு போகின்றோம். அவர் சிங்கள சமூகத்தின் மணப் பெண்களுக்கு தேவையானதை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் தைத்து தயாரித்து வழங்கக் கூடியவராக இருக்கின்றார். நாங்கள் இன்னும் சில இடங்களுக்கும் போய் பார்த்தாலும் கடைசியில் இங்குதான் வந்து நிறைவு செய்கின்றோம். அவர் சிங்களவரா அல்லது முஸ்லிமா என்பது எங்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்வதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைவது மனித நேயமாகும்” என்று குமாரி என்ற யுவதி கூறுகின்றார்.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts