சுற்றுச்சூழல்

காடழிப்பு, அரசாங்கம் மற்றும் சுற்றறிக்கைகள்

அருண லக்‌ஷ்மன் பெர்னாண்டோ இலங்கையின் உள்ளூர் செய்திகளில் சுற்றுச்சூழல் சேதம் வானளாவியளவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பெருந் தொற்றுநோயையையும் விஞ்சி முதன்மையாகவுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்காக அரசாங்கம் நேரடியாக குற்றம் சாட்டப்படுகிறது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

சிங்கள பௌத்த தேசியவாதம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆபிரிக்காவின் முன்னுதாரணம்

அசங்க அபேரத்ன சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை விரும்புவோருக்கு மார்ச் மாதத்தில் வரும் இரண்டு சர்வதேச தினங்கள் முக்கியமானவை. மார்ச் 14ஆம் திகதி வரும் இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் முதலாவது. மற்றும் மார்ச்  24ஆம் திகதி வரும் சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய உண்மை மற்றும் பாதிக்கப்பட்டோரின் கண்ணியம் சார்ந்த தினம் இரண்டாவது. துரதிஷ்டவசமாக குறித்த இரண்டு
சமூகம்

கொரோனா அழுத்தங்கள்! “குடிக்க பணம் இருக்கு, வீட்டு செலவுக்கு ஏன் பணம் இல்லை?”

விவேக் (மு.விவேகானந்தன்) கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையில் வீடுகளில் இடம்பெறும் குடும்ப முரண்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட 150 இற்கும் மேற்பட்டவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.  இது இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பெரும் பிரச்சினையாகவும் உள்ளது. பொதுவாகவே
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமத்துவக் கல்வியில் இருந்து அசமத்துவத்தை நோக்கிச் செல்லும் புதிய கல்விச் சூழல்!

பெருநிலன் உலகம் பூராவும் என்றுமில்லாத அளவிற்கு ‘கல்வி’ பெறுவதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் தற்கால சமூகம் முக்கியத்துவமளிக்கின்றது. எனெனில் சமூக அடுக்கில் ஒருவரது நிலைக்குத்தான உயர்வு நோக்கிய நகர்வுக்கு ‘கல்வி’ பெரும் பங்களிக்கிறது. எல்லோருக்கும் கல்வி என்ற அடிப்படையில் ஒரு  சமத்துவப் போக்கை பேணுவதற்காக இலங்கை இலவசக் கல்வியை பெருமையுடன்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

இலங்கையில் வெளிநாடுகளால் புறக்கணிக்கப்படும் தேசிய மொழிகள்

பா.கிருபாகரன் இறுதியாக எடுக்கப்பட்ட  சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 21.7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில்  பெரும்பான்மையினராக 74.88 வீதம் பேர் சிங்களவர்களாகவும்  நாட்டின் அடுத்த பெரும்பான்மையினராக 24.6 வீதம் பேர்  தமிழர்களாகவும்  உள்ளனர். இவர்கள், இலங்கைத்  தமிழர் ,முஸ்லிம்கள்  மற்றும் இந்தியத் தமிழர் என மூன்று  பெரும்
சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

உடைந்த உள்ளங்களை ஒட்டச் செய்வதே ஓர் ஊடகவியலாளரின் பணி!

எம்.பி.எம்.பைறூஸ் ‘பன்மைத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புதல்’ எனும் தலைப்பில் அரச சார்பற்ற நிறுவனமொன்று ஏற்பாடு செய்த மூன்று செயலமர்வுகளில் வளவாளராகப் பங்கேற்பதற்கான சந்தர்ப்பமொன்று எனக்குக் கிடைத்தது. வழக்கமாக ஊடகத்துறை தொடர்பான செயலமர்வுகளிலேயே நான் வளவாளராகக் கலந்து கொள்வதுண்டு. எனினும் நாட்டின் அரசியல், சமூக விவகாரங்களுடன் அன்றாடம் நெருக்கமான ஊடாட்டத்தையும்
சமூகம் பொருளாதாரம்

நோயில் இருந்து உயிரை காப்பதா? பட்டினியில் இருந்து உயிரைக் காப்பதா?

அருள்கார்க்கி பண்டாரவளை நகரத்தில் அன்றாடம் கட்டுமான உதவியாளராக தொழில் புரிந்து வாழ்க்கை நடாத்துபவர் குமார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரின் மனைவி ஒரு தோட்ட தொழிலாளி. இவ்விருவரின் வருமானமே இந்த குடும்பத்தின் வாழ்க்கை செலவை கொண்டு செல்ல உதவியது.  பயணத்தடை, தனிமைப்படுத்தல், வீட்டில் இருத்தல் என்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் குமார்.
சமூகம்

வீடே உலகம்! பெண்களுடாக நிரூபிக்கிறது கொரோனா!?

பாநூ கார்த்திகேசு கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘பெண்களுக்கு வீடே உலகம்  ஆண்களுக்கு உலகமே வீடு”. இந்தக் கொரோனா காலம் எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. அதில் இந்த வீடு, என்பது முக்கியமானது. உலகமே வீடாக சுற்றிக்கொண்டிருந்த ஆண்கள் எல்லோரும் ‘ஊரடங்கு சட்டம், வீட்டில் இருங்கள், பயணத்தடை,” என்பனவற்றால் வீட்டில் தங்குவதற்கு சாத்தியம்
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த முனையும் அரசின் முன்னுதாரணங்கள் வெளிப்படுத்தும் சமிக்ஞைகள்

ஆர்.ராம் இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும் வழிநடத்தி செல்லும் பொருட்டு போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிமையாளர்கள் அற்ற சமூக ஊடகங்களை முடக்குவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும்  அமைச்சரவையின் அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த அமைச்சரவை பத்திரத்தினை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய
கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

கொரோனா சுமை! மூடப்படும் கோழிப் பண்ணைகள்!

யூ.எல். மப்றூக் முட்டையிடும் சுமார் 09 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்ட மிகப்பெரிய 6 கோழிக் கூடுகளும் இன்று வெறுமையாக உள்ளன. நான்கு வருடங்களாக இந்த கோழிப்பண்ணையை நடத்தி வந்த எஸ்.எல். நசீம், கடந்த பெப்ரவரி மாதம் இதை இழுத்து மூடிவிட்டதாகக் கூறுகின்றார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஸ்ரப் நகரிலுள்ள தமது சொந்தக் காணியில் மருமகனின் பொருளாதார உதவியுடன் அந்தக் கோழிப்