கீர்த்திகா மகாலிங்கம் இலங்கை பொதுசன முன்னணி சார்பில் 52.25சதவீத வாக்குகளை பெற்று கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்று நவம்பர் 18ஆம் திகதியோடு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது. வெகு விமர்சையாக எண்ணிலடங்காத வாக்குறுதிகளை மக்கள் செவிகளுக்கு
கீர்த்திகா மகாலிங்கம் அண்மையில் முல்லைத்தீவில் பிராந்திய ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவமானது இலங்கையின் ஊடக சுதந்திரத்தை மீண்டும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இச் சம்பவம் பிராந்திய மட்டத்தில் மாத்திரமன்றி தேசிய ரீதியாகவும் கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத மரக்கடத்தல் என்பன நீண்ட காலமாக இடம்பெற்று
ஐ.கே.பிரபா கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் மக்களின் வாழ்க்கை தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளன. தினசரி வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்க ஒருமுறையான திட்டம் உள்ளதா? வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கான சரியான வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருக்கின்றதா? வீடுகளில் இறக்கும் கோவிட் 19 நோயாளிகள்
ஐ.கே.பிரபா ட்ரோன் கெமரா (பறக்கும் கண்காணிப்பு கெமரா) தொழில் நுட்பத்தின் மூலம் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் அது தொடர்பான சட்டங்களை மீறுபவர்களை அடையாளம் காணவும் மற்றும் கண்காணிக்க இலங்கை இராணுவத்தில் ட்ரோன் ரெஜிமென்ட் என்ற பெயரில் அதற்கான கமரா பிரிவாக கண்காணிப்பு அமைப்பு 2020 நவம்பர் 12 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரண்டைன
1994 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1954ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க, இலஞ்ச சட்டத்தின் 70 வது பிரிவின் பிரகாரம் ஊழல் குறித்த, இலங்கையின் சட்ட வரையறை பின்வருமாறு காணப்படுகின்றது: எந்தவொரு அரச ஊழியரும் ஏதேனும் நோக்கத்துடன் அரசாங்கத்திற்கு தவறான அல்லது சட்டவிரோதமான முறையில் நட்டத்தை ஏற்படுத்தும், அல்லது தமக்கு அல்லது எவரேனும் நபருக்கு தவறான அல்லது சட்டவிரோதமான
கீர்த்திகா “ஹற்றன் – டிக்கோயா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.” “தேயிலை பறித்துக்கொண்டிருந்த 10 பெண்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.” “மஸ்கெலியா மற்றும் ஹட்டனில் இரட்டைக்குளவிக் கொட்டினால் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.” இது போன்ற செய்திகளை இன்று
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து வௌிநாடுகளில் தொழில்புரிந்து வந்த இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு வழியின்றி எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் குறித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நாளாந்தம் தகவல்கள் வௌியாகி வருகின்றன. இந்த அடிப்படையில் மத்திய கிழக்கில், குறிப்பாக துபாயில் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள இலங்கை பணியாளர்கள் குறித்து அதிக எண்ணிக்கையான
சுனிமல் ஹெட்டியாரச்சி இலங்கையில் 2016 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துவிட்டன. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வழிமுறைகளை உள்ளடக்கியதாக அரசாங்க வர்த்தமாணி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருக்கின்றது. சர்வதேச தகவல் தினத்தை முன்னிட்டு இவ்வாண்டு செப்டம்பர் 28 ஆம் திகதி கொழும்பில்
சசினி டி. பெரேரா அடர்ந்த காடுகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான சட்டவிரோத அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக வாழ்விடங்களை இழந்த யானைகளின் அத்து மீறல் காரணமாக பல பகுதிகளில் பாரிய மனித –யானை மோதல்கள் உருவாகி வருகின்றன. யானைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்று ஹம்பாந்தோட்டை ஆகும். உதாரணமாக “வலவ கங்கை” இடது கரை அபிவிருத்தி திட்டம் முன்னைய
சம்பத் தேசப்பிரிய இலங்கையை அவ்வப்போது ஆண்ட இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை வெறுமனே பெயர்ப் பலகைகள் மற்றும் கட்சி தலைமையகங்களில் மாத்திரம் பெயருக்காக இயங்குகின்றன. கட்சிகளுக்குள் ஜனநாயகம் பாதிக்கப்பட்டமை, கட்சியின் உண்மையான நோக்கத்திலிருந்து விலகிச்சென்றமை மற்றும் கட்சியிலுள்ளவர்களின் பிரச்சினை ஆகியவையே















