அருண லக்ஷ்மன் பெர்ணான்டோ பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் யுத்தத்திலிருந்து இலங்கை இப்போது விடுபட்டுள்ளது. மனிதாபிமானத்தின் பேரழிவாக காணப்பட்ட யுத்தம் மீண்டும் நிகழாமல் இருக்க பல கட்டமைப்பு மாற்றங்கள் தேவைப்பட்டன. பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்கும் அரசியலமைப்பு சீர்திருத்தம் அதில்
பெருநிலன் உலகம் பூராவும் என்றுமில்லாத அளவிற்கு ‘கல்வி’ பெறுவதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் தற்கால சமூகம் முக்கியத்துவமளிக்கின்றது. எனெனில் சமூக அடுக்கில் ஒருவரது நிலைக்குத்தான உயர்வு நோக்கிய நகர்வுக்கு ‘கல்வி’ பெரும் பங்களிக்கிறது. எல்லோருக்கும் கல்வி என்ற அடிப்படையில் ஒரு சமத்துவப் போக்கை பேணுவதற்காக இலங்கை இலவசக் கல்வியை பெருமையுடன்
பா.கிருபாகரன் இறுதியாக எடுக்கப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி 21.7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் பெரும்பான்மையினராக 74.88 வீதம் பேர் சிங்களவர்களாகவும் நாட்டின் அடுத்த பெரும்பான்மையினராக 24.6 வீதம் பேர் தமிழர்களாகவும் உள்ளனர். இவர்கள், இலங்கைத் தமிழர் ,முஸ்லிம்கள் மற்றும் இந்தியத் தமிழர் என மூன்று பெரும்
ஆர்.ராம் இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் சிறந்த சமூக கட்டமைப்பையும் வழிநடத்தி செல்லும் பொருட்டு போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும் உரிமையாளர்கள் அற்ற சமூக ஊடகங்களை முடக்குவதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அமைச்சரவையின் அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை பத்திரத்தினை வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய
யூ.எல். மப்றூக் முட்டையிடும் சுமார் 09 ஆயிரம் கோழிகள் வளர்க்கப்பட்ட மிகப்பெரிய 6 கோழிக் கூடுகளும் இன்று வெறுமையாக உள்ளன. நான்கு வருடங்களாக இந்த கோழிப்பண்ணையை நடத்தி வந்த எஸ்.எல். நசீம், கடந்த பெப்ரவரி மாதம் இதை இழுத்து மூடிவிட்டதாகக் கூறுகின்றார். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஸ்ரப் நகரிலுள்ள தமது சொந்தக் காணியில் மருமகனின் பொருளாதார உதவியுடன் அந்தக் கோழிப்
ஜீவா சதாசிவம் இது கொரோனா காலம். 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவெடுத்து வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. ஆரம்ப நாட்களில் வைரஸின் தாக்கம் அதன் வீரியம் பற்றி பெரிதாக கண்டு கொள்ளாத மக்கள் இப்போது பெரிதும் அச்சமடைந்துள்ளனர். ஒரு வருடம் கடந்த பின்னர் வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என்று எதிர்ப்பார்த்த போதிலும் அது நிகழ்ந்ததாக இல்லை.
ஆர்.ராம் “போரின் பின்னரான காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக ஆட்சியில் அமர்ந்திருந்த அரசாங்கங்கள் வைத்திருந்த ‘பிடி’யில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், உள்நாட்டு, நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களை தமது கட்டுக்குள் முழுமையாகவும் இறுக்கமாகவும் வைத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்; எள்ளளவும் மாறுபாடுகள் இருந்திருக்கவில்லை.இந்த நிலையிலேயே புதிய சட்டமூலத்திற்கான
அருள்கார்க்கி பெருந்தோட்டங்களில் உள்ள முன்பள்ளிகள் விருத்திசெய்யப்படவேண்டும் குழந்தை ஒன்று பிறந்தது முதல் 5வயது வரையான காலப்பகுதி முக்கியமானதாகும். குழந்தையின் உடல் வளர்ச்சி, இயக்க விருத்தி, அறிவு வளர்ச்சி, மொழிவிருத்தி பிள்ளைக்கும் சமூகத்திற்குமான தொடர்பு ஆகியவை விருத்தியடையும் காலமாகும். ஒரு மனிதனின் வாழ்நாளில் விருத்தியடையக்கூடிய நுண்ணறிவு வளர்ச்சியில் 50 வீதமானவை
ஜெம்சித் பத்திரிகைத்துறை சேவையை அடிப்படையாக கொண்டது. யாருக்கும் அடிபணியாமல் சுயமாக இயங்க வேண்டும். தாங்கள் சொல்ல வேண்டிய கருத்துக்களை தைரியமாக எடுத்துரைக்க வேண்டும். நாட்டில் நடைபெறக்கூடிய அநியாயங்களையும், சட்டமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் கண்டித்து நீதியின் சார்பில் நிற்க வேண்டும்.இதைக் கருத்தில் கொண்டே இந்தத் துறை ஜனநாயக நாடொன்றின் நான்காவது தூணாக
மல்லியப்புசந்தி திலகர் இலங்கை வாழ் மலையகத் தமிழ் மக்கள் குறித்த வரலாறு பன்முகப்பார்வையில் பார்க்கப்படக்கூடியது. அவர்களது உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்துக்காக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மக்கள் இவர்கள். இன்று இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்ற அளவுக்கு தம்மை இலங்கையில் நிறுவிக்கொண்டுள்ளமையானது, குறித்த மக்கள் தமது உழைப்பை