ந.மதியழகன் வலி. வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் போர்க் காலத்தில் தமிழ் மக்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலம், பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது தெரிந்ததுதான். இங்கு அரசினால் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் எதிர்காலம் குறித்த கேள்விகள் தமிழ் மக்களிடம் எழுந்திருக்கின்றது. யாழ்ப்பாணம்
எம்.எஸ்.எம். மும்தாஸ் “வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று” என்று சொல்லிய காலம் நீங்கி இன்றைய சூழ்நிலையில் அறிவியல் கண்டுபிடிப்புக்கள், தொழிநுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி ஆகிய முன்னேற்றத்தினால் கல்வியை தொடர ஒவ்வொரு நபருக்கும் இலகுவானதாக உள்ளது. ஒருவர் இந்த உலகில் பெறுகின்ற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின்
அருண லக்ஸ்மன் பெர்னாண்டோ நிகழ்நிலை கல்வி இலங்கையின் பரந்த சமுதாயத்திற்கு மிகவும் புதியதாக இருந்தபோதிலும் உலகிற்கு புதியதல்ல. மார்ச் 2020 இல் கொவிட்-19 இனால் இலங்கைத் தீவு ஆக்கிரமிக்கப்படாவிடின் பெரும்பான்மையான இலங்கையர்கள் இன்னமும் நிகழ்நிலை கல்வியை அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக, கல்வி முறைமை முக்கியமாக நிகழ்நிலை கல்வியாக மாற்றப்பட்டுள்ளது.
விஸ்வாஜித் கொடிகர பல இலங்கையர்கள் வைகாசி மாதத்தை வெசாக் காலமாக அறிமுகப்படுத்துகிறார்கள், ஏனெனில் அந்த மாதத்தின் பௌர்ணமி நாள் புத்தரின் பிறப்பு, பரிநிர்வாணம் மற்றும் முக்தியை குறிக்கிறது. பாரம்பரியமாக, பௌத்தர்கள் இந்த காலத்தில் அக மற்றும் புறத் தானங்களை மேற்கொள்கிறார்கள். அதனைத் தவிர, வைகாசி மாதம் தென்மேற்கு பருவமழையின் மூலமாக கனமழையைக் கொண்டு வருகின்றது.
பார்த்தீபன் வரலாற்றுத் தொன்மையையும், இயற்கையின் அதிசயங்களையும் வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கும் யாழ்ப்பாணத்தின் நிலாவரைப் பகுதி அண்மைக்காலத்தில் சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறிவிட்டது. தொல்பொருள் திணைக்களம் இந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்டதையடுத்தே சர்ச்சை உருவாகியது. இதற்கு அனுமதிப்பதில்லை என்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுதியான நிலைப்பாடு இந்தப் பகுதியில்
எம்.பி. முகமட் நாட்டில் மீண்டும் பொலிஸ் துன்புறுத்தல்கள் (Police Brutality) பற்றிய கதையாடல்கள் சமூக வலைத்தளங்களில் இடம்பிடித்துள்ளன. #Endpolicebrutality எனும் ஹாஷ்டெக்கினை பயன்படுத்தி பலரும் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொயிட் எனும் கறுப்பினத்தவர், பொலிஸ் அதிகாரி ஒருவரால் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட போது சீற்றமடைந்த நாம், இலங்கையில்
பா. சந்தனேஸ்வரன் “என்னுடைய 12 வயதில் நான் நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கினனான். 50 வருடங்களாக தொடர்ந்தும் இதே தொழிலைத்தான் செய்துகொண்டிருக்கிறன். எத்தனையோ இடப்பெயர்வுகள், கலவரங்களைக் கண்டிருக்கிறன். ஆனால், இந்த கொரோனா ஏற்படுத்திய பாதிப்பைப்போல அது ஒன்றும் இருக்கவில்லை…” என்று தன்னுடைய சோகக் கதையைச் சொல்கின்றார் யாழ்ப்பாணம் தாவடியின் பிரபல நாதஸ்வரக் கலைஞர்
ஜீவா சதாசிவம் இலங்கையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது தேயிலைத் தொழிற்துறை. இது பெருமைக்குரியதாகப் பேசப்படுகிறது. ‘சிலோன் டீ’ என்பதே இலங்கையின் ‘பிராண்ட்’ ஆகி இருக்கையில் அந்த தேயிலை உற்பத்தியின் பின்னால் உள்ள அந்தத் தொழிற்துறை சார்ந்த மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரம் அதற்கு மாறான விதத்தில் ‘பிராண்ட்’ பண்ணப்பட்டுள்ளது . இதனை
மல்லியப்புசந்தி திலகர் கொவிட் -19 பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தவென தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை உலகளாவிய ரீதியாக இடம்பெற்று வருகிறது. தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியமானது என பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல நாடுகள் தேசிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. இலங்கை அரசாங்கமும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை
ஜீவா சதாசிவம் மனிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது தீ! அந்த தீ அவனது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பல பயன்தரவல்லது. அதுவே அந்தக் கட்டுப்பாட்டை இழக்கும் போது பல ஆபத்தை ஏற்படுத்த வல்லது. அதனை தீ விபத்து என கூறிக் கொண்டாலும் அது தீ ஆபத்து என்பதே உண்மை.தீ விபத்துச் சம்பவங்கள் சிறு குடிசையில் இருந்து ஆடம்பர மாளிகைகள் வரை அழித்து விட்ட பல சம்பவங்கள் உண்டு. தீ சமூக