அஜித் பெரக்கும் ஜயசிங்க மினுவாங்கொடையில் பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு கொவிட்-19 கொத்தாக தொற்றியதைத் தொடர்ந்து நாட்டின் சில பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க அரசாங்கம் முடிவு செய்தது. அதே நேரத்தில், தீவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
கொவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை இலங்கையை தாக்குகின்றது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஏனைய நாடுகளைப் போல இலங்கையும் தனிமைப்படுத்தல் மற்றும் முடக்கல் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. முழுமையாக முடக்கப்பட்ட பகுதிகளில் நாம் வாழும்போது சமூக வாழ்க்கையை இழக்கின்றோம். நாம் ஒரு சமூகத்தில் வாழும்போது ஏனையோர் வாழும் வாழ்க்கையின் யதார்த்தத்தை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.







