இலங்கையில் நீடித்த உள்நாட்டு யுத்தத்தில், அரசாங்கத்துடன் போரிட்டு உயிரிழந்த விடுதலைப் புலிகளை நினைவுகூரும் மாவீரர் நாளில் (நவம்பர் 27), இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு பெருமெடுப்பில் நினைவுகூரல் ஏற்பாடுகள்
இன்று பலரது வாழ்க்கையில் சமூகவலைத்தளங்கள் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாக மாறி விட்டன. 2020 இல் உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அங்கம் வகிப்போரின் எண்ணிக்கை 3.6 பில்லியன்களாகும். இது உலக சனத்தொகையில் அரைவாசியாகும். 2025 ஆம் ஆண்டாகும் போது இவ்வெண்ணிக்கை 4.41 பில்லியன்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணிம (டிஜிட்டல்) ஊடங்களின் துரித வளர்ச்சி அதன் பாவனையாளர்களை எந்நேரமும் செயலில் வைத்திருக்கிறது. கொரோனாவிற்கு பின்னர் அதன் வேகம் இன்னமும் துரிதமாகியுள்ளது. இந்நிலையில் ஒருவர் இடும் பதிவுகளை கண்காணித்து அதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் மரபே எண்ணிம ஊடகங்களில் உள்ளது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக கடமையாற்றும் நபர் ஒருவர்
நாட்டில் கொவிட்-19 தொற்று அச்சுறுத்தலினால் ஒவ்வொருவரினதும் இயல்பு வாழ்க்கையில் பாரியளவிலான விகாரங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதாரம், சுகாதாரம் தொடர்பில் கடுமையான சவால்கள் நிலவுகின்ற இந்தத் தருணத்தில் 2021 இற்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது. அதில் பெண்களின் ஆரோக்கிய துவாய்களுக்கு புதிதாக CESS என்ற 15 சதவீத வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில்
“வைத்தியரே, முடக்கல் நிலையின்போது (லொக்டவுன்) என் கணவருடன் வீட்டில் இருக்க முடியாது. அவர் என்னை ஏற்கனவே கொன்றுவிட்டார்” வானொலி நிகழ்ச்சியொன்றிற்கு அழைப்பை ஏற்படுத்திய பெண்ணொருவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் மற்றொரு தொற்றுநோயும் பரவுகின்றது என்பது சிலருக்குத் தெரியும். அநேகமாக அனைத்து ஊடகங்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான எண்ணிக்கையில் கவனம்
இலங்கையில் ‘நீடித்த அமைதி’ எங்கிருந்து தொடங்குகிறது? இது நமது வரலாற்றின் போது இலங்கையர் என்ற அடையாளத்தை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் நிஜமானதும் மற்றும் கற்பனையானதுமான மதிலை தகர்ப்பதில் இருந்து தொடங்குகிறது. பண்டைய இலங்கையில் பெரும்பாலும் அதிகாரம் சார்ந்த, பிராந்திய பதற்றங்கள் மற்றும் உள் அதிகாரப் போராட்டங்கள் ஒழுக்கக்கேடான ‘பிறருக்கு’ எதிரான நீதி தேடல்கள் என்று தவறாகப்
ஜயசிரி ஜயசேகர “ஊடக ஒழுக்கக்கோவை” என்பது அண்மைக்காலம் வரையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த ஒரு தலைப்பாகும். அது பெரும்பாலும் ஊடகத்தின் தராதரம், சமூக செயற்பாடு தொடர்பாக ஆர்வம் காட்டக்கூடிய உயர் வகுப்பினரின் உரிமையாக கருதப்பட்டது. ஒழுக்கக்கோவை அச்சு ஊடகத்துறைக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக பலரும் கருதி வருகின்றனர். அதனால் அந்த ஒழுக்கக்கோவை
கீர்த்திகா மகாலிங்கம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மூல காரணமே மொழிப் பிரச்சினைதான். 1956 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய ‘சிங்களம் மட்டும்’ சட்டம்தான் சிங்கள – தமிழ் இனப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டதுடன் பின்னாளில் மூன்று தசாப்த காலங்கள் நீடித்த போராகவும் உருவெடுத்தது. இன்று போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் அதன் வடுக்களிலிருந்து மீண்டுவர
கீர்த்திகா மகாலிங்கம் கண் விழித்தபடியே ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா – பெர்டோலூசி (பெர்டோலூசி – இத்தாலிய இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்) உலகளாவிய ரீதியில் இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்த ஊடகம் என்றால் அது சினிமாதான். குறிப்பாக ஆசிய நாடுகளில் சினிமாவினுடைய தாக்கம் மக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கையில் மிக விரைவாக
கீர்த்திகா மகாலிங்கம் “மரக்கறிகளை எவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியில் கொண்டுவந்து விற்றாலும் அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணமில்லை. கண்ணுக்கு முன் அவை அழுகிப்போவதைப் பார்க்க முடியாமல் மொத்தமாக குறைந்த விலைக்கு கொடுத்துவிடுகிறோம்.” என சாகரிக்கா கூறுகிறார். சாகரிக்கா கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் சிறிய அளவில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் ஒருவர். அவரது கணவர் தம்புள்ளையிலிருந்து