டி.எம்.ஜி. சந்திரசேகர பழங்குடியின மக்கள் தமது பிரதிநிதித்துவத்திற்காக தனி அரசியல் கட்சியை உருவாக்குவது பற்றி ஆலோசிப்பதாக ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. அது நல்லதா கெட்டதா என்ற தீர்மானத்தை வழங்குவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல என்றாலும், இந்நாட்டில் வாழும் பழங்குடி மக்கள்,
புத்திக வீரசிங்க இலங்கை யானை மற்றும் மனித மோதலினால் அதிகளவான யானைகள் உயிரிழப்பதில் முதல் இடத்திலும், மனித உயிரிழப்புகளில் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக புதிய விஞ்ஞான ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி குழுமம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் காப்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலிருந்து சுபுன் லஹிரு பிரகாஷ், கலாநிதி A.
இந்து பெரேரா ‘யானை-மனித மோதல்’ என்பது இன்று நம் சமூகத்தில் காணப்படும் மிகவும் பிரபலமான வார்த்தை ஆகும். ஆனால், யானைகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கும் யானைகளுக்கும் இடையே ‘யானை-மனித உறவு’ இருப்பது பலருக்குத் தெரியாது. இது போன்று சில பகுதிகளில் கிராமத்தினர் தமது வயல்நிலங்களை அழிக்க வரும் யானைகளைத் துரத்துவதற்கு பட்டாசு
ரேகா தரங்கனி பொன்சேகா நாட்டின் கடலோர பகுதிகளில் கண்டல் தாவரங்களை நட்டு சதுப்பு நிலங்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள சுற்றுச்சூழல் நட்பான முன்னோடி திட்டத்தை அறிந்துகொள்வதற்கு, அண்மையில் எனக்கு காங்கேசன்துறை, காரைநகர், புத்தளம் போன்ற பிரதேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. நாடெங்கிலும் கடலரிப்பை எதிர்த்து போராடுவதற்கான ஒரு நிலையான
மஹேஸ்வரி விஜயனந்தன் எவ்வித இன,மத பிரிவினைகளும் இன்றி இலங்கையில் மட்டுமல்ல ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்களும் வழிபாட்டுக்காகவும் சுற்றுலாவுக்காகவும் வந்து செல்லும் இடமாகவும் இலங்கையின் இரண்டாவது உயரமான மலையுமான சிவனொளிபாதமலை வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும் அனைவரையும் கவர்ந்த இலங்கையின் இயற்கை அழகுக்கு மெருகூட்டும் மற்றுமொரு பிரதேசமாகும். கடல் மட்டத்திலிருந்து 7,359
அருண லக்ஸ்மன் பெர்னாண்டோ இலங்கையில் தற்போது இயற்கைச் சூழலின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு மற்றும் மனித சமூகத்தின் ஆரோக்கியம் ஆகியவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் எழுபதுக்கும் மேற்பட்ட சட்டங்கள் காணப்படுகின்றன. இந்தச் சட்டங்களில் பல, ஒரு குறிப்பிட்ட பிரிவில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல்
எம்.எஸ்.எம். ஐயூப் ‘சுற்றாடலுக்கு எற்படும் எதிர்மறை தாக்கங்களில் ஊடகவியலாளர்களின் பங்கு’ என்ற தலைப்பில் 2001 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுக்கான மாநாடொன்றில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இலங்கை சுற்றாடல் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதியாகவே நான் அதில் கலந்து கொண்டேன். சுற்றாடல் தொடர்பாக ஊடகங்கள் ஊடாக கருத்து
அருள் கார்க்கி தேசிய பொருளாதாரத்தில் இலங்கையின் பெண் தொழிலாளர்கள் முக்கிய இடத்தினை வகிக்கின்றனர். பெருந்தோட்டத்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை, கைத்தொழில் துறை என்று அனைத்து தொழிற்துறைகளிலும் பெண்களின் வகிபாகம் உயர்ந்து காணப்படுகின்றது. அதிலும் சூழல் சார்ந்து தொழில் புரியும் பெருந்தோட்டத்துறை மற்றும் விவசாயத்துறையில் ஒப்பீட்டளவில் ஆண்களை விடவும் அதிகமாக பெண்களே தொழில்
தனுஷ்க சில்வா உலகில் வனவிலங்கு வளங்களைப் பாதுகாப்பதில் முன்னணியில் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று. வனவிலங்கு வளங்களைப் பற்றிய உரையாடல்களில் வரும் தலைப்புகளில் யானைகள் ஒரு தனித்துவமான தலைப்பு. பிராந்திய காட்டு யானைகளின் (Elephant Maximus) சனத்தொகையில் 10% இலங்கையில் பாதுகாக்கப்படுவதால் காட்டு யானையின் உயிர்வாழ்வதில் எமது நாடு சிறப்பான பங்களிப்பை ஆற்றுவதைக் குறிப்பிடலாம்.
கமனி ஹெட்டியாராச்சி முழு இலங்கையும் மூழ்கிய கப்பலைப் போல இருக்கும் கால கட்டத்தில், நாட்டு மக்களும், நாட்டினது ஊடகங்களும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மறந்து விடுவது சகஜமான நிகழ்வாகும். ஆனால் 2021 யூன் 02 ஆம் திகதி இலங்கைக்கு சொந்தமான கடற்கரையில் வெடித்து சிதறிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் பொருளாதாரத்திற்கும் கடலுக்கும் ஏற்பட்ட சேதம் பல தலைமுறைகள் நட்டஈடு செலுத்த வேண்டிய ஒரு