எம் . பி. முகமட் மக்கள் தங்களின் உரிமை, உடமைகளைக் காத்துக்கொள்ள ஒருபுறமாக அலைகின்றனர், மக்களின் பிரதிநிதிகள் இன்னுமொரு புறமாக எதற்கோ அலைகின்றனர்….. “அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 14127 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தினாலும் தனி நபர்களாலும்
சமன் மங்கராச்சி தேவாலயத்தின் பெரும்பாலான பகுதி புனரமைப்பு செய்யப்பட்டுவிட்டது. சந்தேகங்கள் இல்லை. ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்கின்றோம். சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களுக்கிடையிலான ஒற்றுமை நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று நான் கருதுகின்றேன்… உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அந்த தாக்குதல் மக்களது உள்ளங்களில் அச்சத்தையும்
கமலாரணி கார்த்திகேசு “நான் பொதுப்போக்குவரத்தின் போது பொட்டுவைத்து, தமிழ் பிள்ளைபோன்று போவதை நிறுத்தினேன். இதேதான் இப்போது இந்த முஸ்லீம் மாணவிக்கும்…எமது இன அடையாளங்களே எங்களுக்கு எதிராக நிற்கும்போது என்னதான் செய்வது?” நான் ஒவ்வொருநாளும் புகையிரதத்தில் வேலைக்கு சென்று வருபவள். எனக்கு நன்றாக தமிழும் சிங்களமும் பேசத் தெரியும். எனக்கு தமிழ், முஸ்லீம் சிங்கள நண்பர்கள் பலர்
தர்மினி பத்மநாதன் ஓகஸ்ட்டில் உத்தரீய மாத பெருநாள் புத்தளம் முந்தலில் நடக்கும். நம்மட ஊரே அங்க தான் நிக்கும். எங்க ஆம்பளையள கூட்டிகிட்டு குடும்பமா போறேண்டா இப்பிடி கோயில் பெருளநாளுக்குதான். கூடாரம் அடிச்சு, சமைச்சு சாப்பிட்டு வருவம். இப்ப அதுவும் இல்லாமல்ப்போச்சு. இந்த முறை யாருமே வாறாங்கள் இல்லை……. “ ஓகஸ்ட்டில் உத்தரீய மாத பெருநாள் புத்தளம் முந்தலில் நடக்கும். நம்மட ஊரே
இசட்.ஏ. ரஹுமன் பண்டமாற்று செய்து இன்றும் சீவியம் நடத்தும் எம்மைப்போன்றவர்களுக்கு சமூகங்கள் இணைந்து வாழ்வது என்றும் தேவைதான். ஒருவரில் இருந்து ஒருவரைப் பிரித்துவைத்து வாழ்ந்துவிடமுடியாது. எம்மைப்போல் இதை எல்லோரும் உணரவேண்டும். இந்தக்காலத்திலும் நான் ஒரு பண்டமாற்றுமுறையில் எம்மிடம் இருக்கும் சில பொருள்களை 30 ,35 கிலோமீற்றர் தூரத்தில் வசிக்கும் சிங்களமக்களுக்குக் கொடுத்து,
லசந்தா டி சில்வா எதிரியின் கடந்த கால நினைவுகளை பாதுகாக்க எமக்கு தேவை இருக்கின்றது. துட்டகைமுனு மன்னர் அவ்வாறு செய்தார். துட்டகைமுனுவிற்கும் எல்லாள மன்னனுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தையும் எல்லாள மன்னனின் மறைவையும் நாம் மறந்துவிட்டோம். துட்டகைமுனு மன்னன் எல்லாளனை நினைவு கூற தூபியொன்றை அமைத்ததை நாம் எமது சந்ததியினருக்கு கற்பிப்பதற்கு மறந்துவிட்டோம்.
கமலாரணி கார்த்திகேசு சிறுவர்களுக்குத் தேவையான கல்வியினை வழங்குவதற்கு அந்த முகாம்களில் வாழ்ந்த ஆசிரியர்களின் உதவியை நாடினோம். அவர்கள் உடுத்த உடையுடன் இருந்தனர் மாற்று ஆடைகள் எதுவும் இருக்கவில்லை. இதனால் முதலில் ஆசிரியர்களுக்கு தேவையான ஆடைகளைப் பெற்றுக்கொடுத்து சிறுவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கையை சிறிய மரத்தடியில் வைத்து ஆரம்பித்தோம். நான் வாடிக்கையாக வாங்குகின்ற ஐந்து
துசாந்தன் வைரமுத்து நாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமாகவிருந்தால், தூரநோக்குள்ள, அரசியல் சிந்தனை உள்ள அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் இந்த நாட்டிற்கு தேவை. மக்கள் அதை உணர்ந்து செயற்படவேண்டும். “இந்தநாட்டில் மனித நேய, மனித அபிமானத்திற்கு முன்னுரிமை அளித்து இனிவாத, மொழிவாத, மதவாத என்ற எண்ணப்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து நாம் இலங்கையர்கள் என்ற தேசியவாத
கமலாரணி கார்த்திகேசு எங்கட ஆட்டோ ஐயா ஒரு சிங்களவர். அந்த ஐயாவைத்தான் எல்லா இடங்களிற்கும் நாம் அழைத்துச்செல்வோம். எங்கு போகச்சொன்னாலும் கேள்விகேட்காது போவார். காசும் கொஞ்சமாகத்தான் எடுப்பார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாங்கள் கொட்டாராமுல்லைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் ‘இப்போதைய சூழ்நிலையில் வெளியில் நடமாடவும் சரியான பயமாக இருக்கின்றது…?’ என்றேன். அவர் சொன்னார்….
பிரியதர்ஷினி சிவராஜா இணக்கபூர்வமான செயற்பாடுகளின் இறுதியில் அவரவர் இன அடையாளங்களும் தனித்துவங்களும் பாதுகாக்கப்படும் நிலை உருவாகின்றது. இதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. இதுவே நாட்டுக்கு பயன்மிக்கதாக அமையும் எனலாம். இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் நல்லிணக்கத்தினையும், இனங்களுக்கிடையேயான சகவாழ்வினையும் ஏற்படுத்த வேண்டுமாயின் 2015ம் ஆண்டில் நாங்கள்















