பா.கிருபாகரன் கொரோனா என்னும் கொடிய வைரஸின் தாக்கம் உலகெங்கும் கட்டுக்கடங்காது பரவி ஒட்டுமொத்த உலகையுமே வீட்டுக்குள் முடக்கிவைத்துள்ளதுடன், உலக பொருளாதாரத்தையே குழி தோண்டிப் புதைத்து வருகின்றது. வல்லரசு நாடுகளில் தொடங்கி வளரும் நாடுகள்வரை, பணம் கொழிக்கும்
வ.சக்திவேல் “நான் களுதாவளையிலிருந்து கொண்டு 20 வருடங்களுக்கு மேலாக இருந்து கடல் மீன் வியாபாரத்தில்தான் ஈடுபட்டு வருகின்றேன். தற்போது இலங்கையின் தென்பகுதி கடலில் கப்பல் ஒன்று எரிந்ததன் பின்னர் சில கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதனால் என்னிடம் மக்கள் மீன்களைக் கொள்வனவு செய்ய வருகின்றார்களில்லை. நானும் நாளாந்தம் எனது வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தைக்
அருள்கார்க்கி பண்டாரவளை நகரத்தில் அன்றாடம் கட்டுமான உதவியாளராக தொழில் புரிந்து வாழ்க்கை நடாத்துபவர் குமார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரின் மனைவி ஒரு தோட்ட தொழிலாளி. இவ்விருவரின் வருமானமே இந்த குடும்பத்தின் வாழ்க்கை செலவை கொண்டு செல்ல உதவியது. பயணத்தடை, தனிமைப்படுத்தல், வீட்டில் இருத்தல் என்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் குமார்.
மெலானி மானெல் பெரேரா, கார்த்திகேசு கமலரானி “இந்த நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக தேசிய கீதத்தை தமிழில் பாடுவது அமையப் போவதில்லை. எவ்வாறாயினும் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும்தான் பாட வேண்டும் என்று அரசாங்கம் கூறுவதாக இருந்தால் அது தமிழ் மக்களை உதவியற்றவர்கள் என்ற நிலைமைக்கு தள்ளுவதாக அமையலாம்… பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கையின்
ஏ. எம். பாயிஸ் பல அரசியல்வாதிகள் உயர்மட்ட அதிகாரிகளை தொடர்புகொண்டு என்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்பதுமில்லை. அபிவிருத்தி சம்பந்தமான ஆலோசனைகளைப் பெறுவதுமில்லை. வெறுமனே மேடைகளில் பேசித் திரிவதால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. சொல்லப்போனால், அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பெரிய இடைவெளி காணப்படுகின்றது. இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட நிர்வாக சேவை
ஏ. எம். பாயிஸ் நீர்ச்சறுக்கலுக்கு பிரசித்தி பெற்ற இடமாக அறுகம்பை உள்ளது. உலக நாடுகளிலிருந்து பல வீர, வீராங்கனைகள் இங்கு வந்து நீர்ச் சறுக்கல் போட்டிகளில் பங்குபற்றுவர். இம்மாதம்(செப்ரெம்பர்) 23ஆம் திகதியில் இருந்து 26ஆம் திகதிவரை நீர்ச்சறுக்கல் போட்டிகள் இடம்பெறவுள்ளன…. உணவகம் ஒன்றின் உரிமையாளரான எஸ்.எம். அஸீஸ். “கடந்த மூன்றரை மாதங்களாக பாரிய நஷ்டத்தை எதிர்கொண்டேன். இந்த
பிரியதர்ஷினி சிவராஜா இந்த இழப்பிலிருந்து மீண்டு வரவே எனக்கு பல நாட்களாயிற்று. இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. அந்த உணர்வுக்கு இனம் மதம் மொழி வேறுபாடு என்பதில்லை. இதற்கு ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தைப் பழிவாங்குவது நியாயமே இல்லை. ஓர் இனத்தை பழிவாங்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் இறுதியில் ஏனைய இனங்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றன என்பதனை