Home Articles posted by Admin (Page 55)
முக்கியமானது

மக்கள் செய்யவேண்டியது: இனவாத அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள், ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும்.

பி.பொன்னரசு சமூகங்களுக்கிடையிலானநல்லிணக்கம் என்பது இலங்கை அரச நிகழ்ச்சிநிரலில் பிரதான விடயமாக இடம்பிடிக்கும் வரையில் இந்தநாட்டிலே இனமுரண்பாடுகளைத் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாது. அதற்கு இலங்கை அரசு இதயசுத்தியோடு செயலாற்ற முன்வருதல் வேண்டும். ஈஸ்டர் குண்டு வெடிப்புகளுக்கு பின்னரான முஸ்லிம் மக்கள்
சமூகம்

நானும் யோசிக்கின்றேன் : “நாம் ஏன் இந்த கறுப்புநிற ஆடையைத் தெரிவு செய்து அணிந்தோம்…?”

கமலாரணி கார்த்திகேசு எங்கட ஆட்டோ ஐயா ஒரு சிங்களவர். அந்த ஐயாவைத்தான் எல்லா இடங்களிற்கும் நாம் அழைத்துச்செல்வோம். எங்கு போகச்சொன்னாலும் கேள்விகேட்காது போவார். காசும் கொஞ்சமாகத்தான் எடுப்பார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாங்கள் கொட்டாராமுல்லைக்குச் சென்ற சந்தர்ப்பத்தில் ‘இப்போதைய சூழ்நிலையில் வெளியில் நடமாடவும் சரியான பயமாக இருக்கின்றது…?’ என்றேன். அவர் சொன்னார்….
முக்கியமானது

மனித உரிமை மீறல்கள்: அதிக முறைப்பாடுகள் அரச நிறுவனங்களுக்கு எதிரானவை!

இசட்.ஏ. ரஹுமன் ஒரு காலத்தில் இன நல்லிணக்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் குறிப்பிட்ட சில தீவிரவாதிகள் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்றைய நிலை அதற்கு மாறாக உள்ளது. இங்கே சில மதகுருமார், சில கல்வியாளர்கள், சில அரசியல் வாதிகள், சமூகத்தின் சில முக்கிய புள்ளிகள், சில செல்வந்தவர்கள், ஏன் சாதாரண மனிதர்கள் பலரும் இன நல்லிணக்கத்திற்கு எதிரான பல செயற்பாடுகளில்
அரசியல்

மக்கள் ஏன் குழம்புகின்றனர்?! இன மத வேறுபாடுகளுக்க அப்பால் மக்களை இணைக்கவேண்டும்!

தர்மினி பத்மநாதன் நாட்டில் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் சார்ந்து 10 வீதமும் சாதாரண மக்கள் 90 வீதமும் உள்ளனர். எனவே பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நல்லிணக்கம்தான் மன மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் எமது நிறுவனத்திற்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. “தமிழ் மக்களுக்காக கருத்து தெரிவிக்க எந்தவொரு அரசியல் வாதியாலும் முடியாது . இலங்கையில் சண்டை இருக்க வேணும் , நாடு குழம்பி
அரசியல்

வாக்குகளைத் திரட்ட : இனத்திற்காக செயற்படலாம். இனவாதமாக செயற்பட முடியாது.

குறிஞ்சிப்பார்த்தன் பௌத்த மதவாதிகள் சிலர் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களை இல்லாதொழிப்பதற்கான சதியில் ஈடுபடுவதை உணர முடிகின்றது. ஆகவே அதில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்கும், அதன் ஊடாக வரக்கூடிய ஆபத்துக்களை தடுப்பதற்கும், இந்த நாடு தொடர்பில் உலகளாவிய  ரீதியில் ஏற்படும் அவப்பெயரை இல்லாது செய்வதற்கும், நாங்கள் பதவிகளை இராஜிநாமா செய்தோம். ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட
சமூகம்

மக்களுடன் பேசவேண்டும் : ‘நாம் ஏன் இணைந்து வாழவேண்டும்?’

பிரியதர்ஷினி சிவராஜா இணக்கபூர்வமான செயற்பாடுகளின் இறுதியில் அவரவர் இன அடையாளங்களும் தனித்துவங்களும் பாதுகாக்கப்படும் நிலை உருவாகின்றது. இதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன. இதுவே நாட்டுக்கு பயன்மிக்கதாக அமையும் எனலாம். இலங்கையில் இன்றைய காலகட்டத்தில் நல்லிணக்கத்தினையும், இனங்களுக்கிடையேயான சகவாழ்வினையும் ஏற்படுத்த வேண்டுமாயின் 2015ம் ஆண்டில் நாங்கள்
சமூகம்

கல்முனை சுபத்ரா ராமய முன்பள்ளி “எனது பிள்ளை தேவாரம் மட்டும் படிக்கவில்லை..! குர்ஆனும் ஓதுது..!ஜெபமும் சொல்லுது..!”

ஏ. எம். பாயிஸ் “2005 ஆம் ஆண்டு இந்த முன்பள்ளியை ஆரம்பிக்கும் போது மூவினங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டே ஆரம்பித்தோம். தற்பொழுது முப்பதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இங்கே கற்கிறார்கள். இங்கு கல்வி கற்று வரும் மாணவர்களினது மத விழாக்களை இங்கு கொண்டாடி மகிழ்விப்போம். சரஸ்வதி பூஜைஇ வெசாக்இ ரமழான்இ கிறிஸ்மஸ் என எல்லா மத நிகழ்வுகளையும் கொண்டாடி குழந்தைகளுக்கு அதைப்பற்றி
சமூகம்

“கடும்போக்குவாதிகள் அமைதியானாலே போதும் இந்த பிரச்சினையை அடியோடு ஒழிக்கலாம்.”

குறிஞ்சிப்பார்த்தன் தற்போது அரசு முகத்தை மூடுவதற்கு மட்டுமே தடை விதித்துள்ளது. முகம் மூடுதல் நாட்டுக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தல் என்றால் அதைத் தவிர்க்கலாம். “இஸ்லாம் தீவிரவாத்தை அனுமதிக்கவில்லை. இது சாந்தி மார்க்கம். தற்கொலை செய்வது இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக மறுக்கப்பட்ட செயல். அது மட்டும் இல்லாமல் வெள்ளிக்கிழமைகளின் (பள்ளிவாசலில்) கூடலின் போதும் அங்கு அதையே
முக்கியமானது

பயங்கரவாதிகளும் இஸ்லாமும்…. அவர்களை நிமிர்ந்து பார்க்கவே வேதனை கூடுகிறது. ஆனால்……

பிரியதர்ஷன் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதனால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமே தவிர அப்பாவி மக்களல்ல. டந்த 2019ஏப்ரல் 21 (2019)இல் உயிர்த் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு 200க்கும் மேற்பட்டோரை பலிகொண்டது. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலின்பின் ஒவ்வொருவரினதும் மனக்காயங்களும் அதன்
சமூகம்

வாங்க…! வாங்கலையோ…! அன்னாசி…! தமிழில் எனக்கு பிடித்த வார்த்தை ‘எப்படி சுகம்’?

கமலாரணி கார்த்திகேசு கம்பகா வெலிவேரிய பகுதியில் இருந்து மன்னார் 286 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. சாதாரணமாக பொதுப் போக்குவரத்து அல்லாத சொந்த வாகனங்களில் பயணிக்கின்றபோது 5 மணித்தியாலமும் 30 நிமிடமும் ஆகும். ஏனெனில் எங்கள் வீதிகள் அப்படியானவை. இந்த நிலையில் அன்னாசி விற்பனைக்கான இவர்களது வருகையானது கிரமத்தவர்களுக்கு பொருளாதார தேட்டம் அவ்வளவு ஒன்றும் இலகுவானதல்ல என்பதையே