Transparency

மாகாண சபைகளில் ஜனநாயகமும் அபிவிருத்தியும் (பகுதி 2)

இலங்கையில், மாகாண சபைகளுக்கு தங்கள் விடயப்பரப்புக்களில் நியதிச் சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் உள்ளது, ஆனால் இது செயல்படுத்தப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த வடக்கு மாகாண சபைக்கு கூட கிட்டத்தட்ட எந்தவொரு சாசனமும் இல்லை. அவ்வப்போது செய்யப்பட்டவை அனைத்தும் காலத்திற்குக் காலம் தீர்மானங்களை நிறைவேற்றுவதுதான். உதாரணமாக, தெற்கிலுள்ள மாகாண சபைகள் யுத்த வெற்றி தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றியபோது, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை வட மாகாண சபை நிறைவேற்றியது.

 

இதைக் கருத்தில் கொண்டு, தீர்மானங்களை நிறைவேற்ற ஒரு மாகாண சபைக்கு உரிமை இல்லை என்பதை இது குறிக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வோம். ஒரு மாகாண சபை வட மாகாண மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நியதிச் சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த முயன்றிருந்தால், அது முதலில் மாகாண சபைகளை நிறுவுவதற்கான நோக்கத்திற்கு ஏற்ப சாதகமான பங்கைக் கொண்டிருந்திருக்கும். தெற்கில் உள்ள மக்களின் அணுகுமுறை ஒன்றேயாகும், இரண்டல்ல என்று வரையறுக்கலாம். இதற்கு முக்கிய காரணங்களை சுருக்கமாகக் கூறலாம், வடக்கு மற்றும் தெற்கின் மக்கள் மாகாண சபைகளால் செய்யப்படும் சேவைகளில் அதிருப்தி அடைந்துள்ளனர். மாகாண சபைகள் அரசியல்வாதிகளுக்கு பாராளுமன்றத்திற்கு செல்வதற்கான ஒரு பாலம் மட்டுமே என்ற கருத்தின் காரணமாகவும், உண்மையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நியதிச்சட்டங்கள் வடிவமைக்கப்படவில்லை என்பதாலும் இது நிகழ்கிறது.

 

யாழ்ப்பாணத்தில் பணிபுரியும் ஒரு அரசாங்க ஊழியரைக் கொழும்புக்கு வராமல் திருகோணமலைக்கு மாற்ற முடிந்தால், ஒரு மாகாண சபை உண்மையில் பல பகுதிகளில் பல நிர்வாக சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? இந்த நோக்கத்திற்காக மாகாண சபைகளுக்கு தவிர்க்க முடியாமல் மத்திய அரசின் ஆதரவு தேவைப்படும். இதேபோல், அதிகாரத்தை கைவிட மத்திய அரசு தயக்கம் காட்டுவது மாகாண சபைகள் ஒரு பயனற்ற செலவாகும் என்ற குற்றச்சாட்டுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

 

மாகாண சபை அமைப்பு நிறுவப்படும் வரை வடக்கில் ஒரு தனி மாநிலம் என்ற கருத்து நிறுவப்பட்டது என்பது இரகசியமல்ல. மாகாண சபை அமைப்பு ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக வடக்கில் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்தை நோக்கி சாய்ந்திருக்கும் சில தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கு தலைவணங்குவதா?

 

அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டைக் கட்டியெழுப்பும்போது ஜனநாயகத்தை ஒரு தடையாகக் கருதுபவர்களும் தென்னிலங்கையின் பிரதான அரசியலில் உள்ளனர். அதிகாரப் பகிர்வு என்பது அரசினைப் பலவீனப்படுத்த ஒரு காரணம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இது அண்டைய இந்தியாவிலிருந்து ஒரு உதாரணத்துடன் முடிவடைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்திய சுதந்திர இயக்கத்தின் தந்தை மகாத்மா காந்தி மற்றும் இந்தியாவின் அரசியலமைப்பினை எழுதிய கலாநிதி அம்பேத்கர் ஆகியோர் நாட்டின் வளர்ச்சி மூலோபாயம் குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். சமத்துவத்தை அடைய நவீனமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் அவசியம் என்று அம்பேத்கர் நம்பினார். மறுபுறம், கிராமத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் காந்தியின் கருத்தாகும், சமத்துவத்தை உருவாக்க தனது எண்ணங்கள் தேவை என்றும், இதையொட்டி கிராமத்தில் அடக்குமுறை அதிகாரத்தை வெடிக்கச் செய்வதாகவும் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் கண்ட இந்தியா இன்று இல்லை. மாறாக, பொருளாதார வளர்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் இடையே பிரிக்க முடியாத தொடர்பு இந்தியாவில் உள்ளது.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts