Transparency

மாகாண சபைகளில் ஜனநாயகமும் அபிவிருத்தியும் (பகுதி 1)

மாகாண சபை தேர்தல்களும் மாகாண சபை அமைப்பும் மீண்டும் ஒரு முக்கிய அரசியல் தலைப்பாக மாறியுள்ளன. அதே சமயம், மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையின் கீழ் அல்லது புதிய முறையின் கீழ் நடத்தப்படுமா என்ற விவாதமும் நடைபெறுகிறது. இது தொடர்பான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

 

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட மாகாண சபைகள் முறை இந்த நாட்டில் உள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டன. இது எமது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் உருவாக்கமாகும். பின்னர் மாகாண சபைகள் முறை மாகாண சபைகள் முறைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட ஒரு அரசியல்வாதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் முன்னாள் இராணுவ அதிகாரியும் ஆவார்.

 

அமைச்சர் பதவி அதன் பின்னர் பலரால் வகிக்கப்பட்டிருந்தாலும், மாகாண சபைகளுக்கு தற்போதைய அரசியல் அதிகாரத்தின் அணுகுமுறை அமைதியாகவே உள்ளது. கருத்தியல் மட்டத்தில் ஒரு அரசியல் பாத்திரத்தை வகிப்பதற்கும் உயர் மட்ட சித்தாந்தத்திற்கும் இடையில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

மாகாண சபைகள் முறை பற்றிய பெரும்பான்மையான கருத்து என்னவென்றால், அவர்களுக்கு நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது. தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கையில் உள்ள மாகாண சபைகளின் இறையையும் உருவாக்கியுள்ளது. வடக்கில் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக மாகாண சபைகள் நிறுவப்பட்டன, ஆனால், அவை சரியாக செயல்படவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். மாகாண சபை முறையின் முக்கிய நோக்கம், நடவடிக்கைக்கு உகந்த சூழலையும், வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு தன்னாட்சி அதிகாரத்தையும் உருவாக்குவதாகும். இன்று, நாட்டின் மத்திய அரசு எந்த அளவிற்கு மாகாண சபை முறை மூலம் விடயங்களை நிர்வகிக்க முயன்றது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம்.

 

மாகாண சபை முறையின் கீழ், தொடர்புடைய விடயத் தலைப்புகளின் பட்டியல் உள்ளது. மேலும், மத்திய நிர்வாகத் தரப்பின் கீழ், மற்றொரு விடயத் தலைப்புகளின் பட்டியல் உள்ளது. மாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கியை நிரல் என பெயரிடப்பட்ட மூன்றாவது தலைப்புகளின் பட்டியல் உள்ளது.

 

இதன் அடிப்படையில், மாகாண சபைகள் சட்டத்தில் பொலிஸ் அதிகாரமும் நில அதிகாரமும் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், ஆளுநர் நிறைவேற்று ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருப்பதால் நில உரிமை தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதன் விளைவாக, மாகாண சபை முறை அரசாங்கத்தின் திறமையற்ற அமைப்பு என்று பெரும்பான்மையானவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts