கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள்

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு செயன்முறை பற்றிய பார்வை

சிறைத்துறையில் தற்போது காணப்படும் திருத்த கட்டமைப்பிலுள்ள பலவீனங்கள் மற்றும் புனர்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த ஆய்வில், தண்டனை வழங்குவதைக் காட்டிலும் குற்றத்தை திறம்பட தடுக்கவேண்டியதை பற்றி கவனஞ்செலுத்தியுள்ளது. இலங்கையில் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் விகிதம் அதிகரித்துள்ளமையானது, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சிறைவாசத்தின் நிபந்தனைகளில் சிக்கல்கள் உள்ளன என்பதையும் கைதிகளை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒழுங்காக ஒருங்கிணைக்க இயலாமல் உள்ளதென்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு கைதிகளையும் மையமாகக் கொண்ட புனர்வாழ்வுத் திட்டங்கள் இல்லாமை இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.

 

கைதிகளின் புனர்வாழ்வு குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த ஆய்வின் முடிவுகள்

புனர்வாழ்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

  • சிறைச்சாலை பணிகள்
  • கல்வி மற்றும் எழுத்தறிவு திட்டங்கள்
  • தொழிற்பயிற்சி
  • ஆலோசனை வழங்குதல்
  • போதைப்பொருள் பாவனையிலிருந்து மறுவாழ்வளித்தல்

 

சிறைச்சாலை பணிகள் 

பாரதூரமான குற்றங்களில் ஈடுபடாத கைதிகளுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும் வேலை வெளியீட்டு திட்டத்தின் கீழ், கைதிகள் சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் பணியில் ஈடுபடுவார்கள். தமது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்கு அவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக வேலை நிபந்தனைகள் சாதகமற்றவையாக காணப்படுவதோடு கைதிகளின் தண்டனைக்கு மேலதிகமாகவும் இது காணப்படுகின்றது. 

சிறையில் காணப்படும் கல்வி மற்றும் எழுத்தறிவு திட்டங்கள் 

கைதிகளின் கல்வி நிலை குறித்த ஆய்வின் முடிவுகளின் பிரகாரம், பெரும்பாலான ஆண் கைதிகள் தரம் எட்டு அல்லது சாதாரண தர பரீட்சையை பூர்த்திசெய்துள்ளமை தெரியவந்துள்ளது. ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை தவிர அனைத்து தடுப்புக்காவல் பிரிவுகளிலிருந்தும் 10 வீதத்திற்கும் குறைவான கைதிகள் உயர்தர பரீட்சையை பூர்த்திசெய்துள்ளனர். பெண் கைதிகளில் பெரும்பாலானோர் தரம் 8 அல்லது சாதாரண தர பரீட்சையை பூர்த்திசெய்துள்ளனர்.  15 வீதத்திற்கும் குறைவான பெண் கைதிகள் உயர்தர பரீட்சையை பூர்த்திசெய்துள்ளனர். மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கும் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்கும் சிறையில் இருக்கும்போது முழுமையான கல்வியை பெற்றுக்கொடுப்பது அவசியம். எனினும், சிறைச்சாலையில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொதுவாக மிகக் குறைந்தளவான கைதிகளே கூறியுள்ளனர் என தரவுகள் குறிப்பிடுகின்றன. 

சிறைச்சாலையில் தொழிற்பயிற்சி

ஆய்வின் முடிவுகளின் பிரகாரம் 11 வீதமான ஆண்களும் 14 வீதமான பெண்களும் தொழில் அல்லது திறன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக, தாம் சிறைத்துறை பணியில் ஈடுபட்டதாக 22 வீதமான ஆண்களும் 7 பெண்களும் கூறியுள்ளனர். சில கைதிகள் சிறைத்துறை பணிக்கும், தொழில் / திறன் பயிற்சிக்கும் இடையிலான வித்தியாசத்தை இனங்கண்டுள்ளனர் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் குழு வேலைகளும் தொழில் / திறன் பயிற்சியளிக்கும் குறிக்கோளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய தொழிலாளர் சந்தையில் நிலவும் கேள்விகளை பூர்த்தி செய்யக்கூடிய வேலைவாய்ப்பு திறன்களைக் கற்கும் வாய்ப்பு கைதிகளுக்கு உள்ளதென்பதை உறுதி செய்வது கட்டாயமாகும். எனவே, சிறு வயதிலிருந்தே மீண்டும் மீண்டும் பல குற்றங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் சிறையில் கழித்த நேரத்தை முக்கியமானதாக செயற்பட வைக்க முடியும்.

சிறையில் வழங்கப்படும் ஆலோசனை சேவைகள் 

சிறைச்சாலைகளில் காணப்படும் ஆலோசனை சேவைகள் சிறை நிர்வாகத்தின் விருப்பத்திற்கிணங்க நிர்வகிக்கப்படுகின்றன. அத்தோடு, இது ஒரு வழக்கமான மற்றும் கட்டமைக்கப்பட்ட திட்டமாக இல்லாமல் தற்காலிக முறையில் செயற்படுத்தப்படுவதாக ஆய்வு குறிப்பிடுகின்றது. 

போதைப்பொருள் பாவனையிலிருந்து மறுவாழ்வளித்தல்

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையால் நிர்வகிக்கப்படும் சிகிச்சை மையங்களில் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றமை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தும் கைதியொருவருக்கு தேவையான சிகிச்சையை தீர்மானிப்பதற்கு தேவையான போதைப்பொருள் சார்புநிலையை மதிப்பிடுவற்கான தரப்படுத்தப்பட்ட கொள்கையின் பற்றாக்குறை என்பவற்றையும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தற்போதுள்ள சில சிகிச்சை மையங்களில் போதைப்பொருள் மறுவாழ்வுக்கான தேவையை பூர்த்திசெய்யும் திறன் இல்லை. 

புனர்வாழ்வு தொடர்பில் சிறைச்சாலையில் காணப்படும் சவால்கள்

பழிவாங்கும் அணுகுமுறையிலான தண்டனை, பயனற்ற சிறை முகாமைத்துவம் மற்றும் கைதிகளிடம் தவறாக நடந்துகொள்வது கைதிகளின் பயனுள்ள மறுவாழ்வைத் தடுப்பதோடு குற்றங்களையும் தடுக்காது. இதன்படி, சிறைக்கு பதிலாக தடுப்புகளற்ற நடவடிக்கைகள் அதாவது சமூகம் சார்ந்த திருத்தங்களை பயன்படுத்துதல், போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களின் மறுவாழ்வு மற்றும் தகுதிகாண் நடவடிக்கை என்பன குற்றங்களைத் தடுப்பதற்கான திறமையான மாற்றீடுகளாகும். விசாரணை மற்றும் தத்துவத்தின் மறு ஆய்வு, தண்டனை முறையின் கொள்கை மற்றும் நடைமுறைகளின்போது மட்டுமே தற்போதுள்ள திருத்த கட்டமைப்பில் சீர்திருத்தம் நிகழும். சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் கைதிகள் சமுதாயத்தில் ஒன்றிணைந்து, மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுவதை புனர்வாழ்வை மையமாகக் கொண்ட ஒரு திருத்தக் கட்டமைப்பு உறுதிசெய்யும்.

 

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts