கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் சமாதானம் மற்றும் நல்லிணக்கம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான சில வினாக்கள் – பகுதி இரண்டு

ஜனாதிபதியால் செய்யப்பட்டுள்ள சிபாரிசின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக பேராசிரியர் ஜகத் பாலசூரியவே கடமையாற்றவுள்ளார். இந்த ஜகத் பாலசூரிய மனித உரிமைகள் பற்றிய அல்லது சட்டத்துறையோடு சம்பந்தப்பட்ட ஒரு பேராசிரியர் அல்ல. அதைவிட மோசமான நிலை அவர் தற்போது பதவியில் இருக்கின்ற அரசாங்கத்தின் முன்னைய அரசியல்வாதிகளுள் ஒருவராவார். அவ்வாறே முன்னைய ஆட்சியில் பிரதி அமைச்சராகவும் ஆளுனராகவும் பதவிகளை வகித்தவராவார். அவருடைய மனைவியும் முன்னாள் ஆளுனராவார். அவ்வாறே பேராசிரியர் ஜகத் பாலசூரியவின் புதல்வாரன தாரக பாலசூரிய தற்போதைய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்களுள் ஒருவராவார். இந்நிலையில் ஜகத் பாலசூரிய தற்போதைய நிலையில் அரசில் செயற்பாட்டாளராக இல்லாவிட்டாலும் அவரை சூழ்ந்து காணப்படுகின்ற அரசியல் மூலங்களில் இருந்து அவர் ஒருபோதும் சுயாதீனமானவர் என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. இத்தகைய அரசியல் பின்னணியைக் கொண்ட ஒருவர் அரசியல் சார்பற்ற சுயாதீனமாகவும் நடுநிலையாகவும் செயற்பட வேண்டும் என்று மக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு ஆணைக்குழுவுக்கான பதவியை வகிப்பதற்கான தகைமையை தூரமாக்குவதாக இருக்கின்றது.

 

மனித உரிமைகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட நாள் முதல் இது வரையில் அரசியல் பின்னணியைக் கொண்ட ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டதாக இல்லை. ஆனாலும் பதவியில் இருந்த ஒரு சில தலைவர்களின் நடத்தை மனித உரிமைகளை மதிக்கின்ற சமூகத்தில் அவ்வப்போது விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்தபோதும் அதன் தலைவர்கள் ஒருபோதும் நேரடியான அரசியல் தொடர்பை வைத்திருந்தவர்கள் அல்ல என்று கூறலாம். முன்னைய தலைவர்களின் வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் இந்த நிலைமையை தெளிவாக காண முடிகின்றது. 

 

உதாரணத்திற்காக இறுதியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த பேராசிரியர் தீபிகா உடகம பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தொடர்பான பேராசிரியராக பதவி வகித்தவராவார். பேராசிரியர் உடுகமவிற்கு முன்னர் அதே பதவியை வகித்த பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியராவார். எதுவாக இருந்தாலும் அரசியல் வாதிகளை இதுபோன்ற சுயாதீன ஆணைக்குழுவொன்றின் உயர் பதவிக்கு நியமிப்பதில்லை என்ற சம்பிரதாயம் பேராசிரியர் ஜகத் பாலசூரியவை நியமித்ததன் மூலம் மீறப்படுகின்றது. 

 

இந்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட எல்லா ஆணைக்குழுக்களும் மக்களின் விருப்பத்திற்கும், பன்முகத்தன்மைக்கும் கௌரவமளிக்கும் வகையில் அவற்றின் பிரதான பதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். ஆணைக்குழுவின் யதார்த்தமான அடிப்படையில் “சுயாதீனம்” என்பது அமைவது அதன்படியாகும். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டமும் அதற்கு நேரடியாக சம்பந்தப்படும் வகையில் அமைந்ததாகும். இ.ம.உ.ஆ.கு. சட்டத்தின் பிரிவு 3(3) பின்வருமாறு பொருள் கோருவதாக இருக்கின்றது. ஆணைக்குழுவுக்கு ஆணையாளர்களை நியமிக்கும் போது சிறுபான்மை இனங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். ஆனாலும் தற்போதைய ஜனாதிபதி செய்துள்ள சிபாரிசின் அடிப்படையில் பார்க்கின்ற போது சிறுபான்மை இனத்தவர்கள் ஒருவரும் இல்லை. ஆனால் கடந்த ஆணைக்குழுவை எடுத்துக்கொண்டால் அதன் பிரதிநிதிகள் குழாமில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் (தமிழ்), சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் (முஸ்லிம்) ஆகியோர் ஆணையாளர்களாக இருந்தனர். ஆனால் எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் பிரதிநிதிகளில் சிறுபான்மையினர் இல்லாத முழுமையான சிங்கள ஆதிக்கத்தை கொண்ட ஒரு ஆணையாளர்களாவர். இந்த நிலையானது ஒருபுறம் ஆணைக்குழுவின் சட்டத்தை மீறும் செயலாக அமைவதோடு மறுபுறமாக பல்லின கலாசார பண்பை வெளிப்படுத்த வில்லை. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பல்லின சமூகங்கள் தொடர்பாகவும் செல்வாக்கு செலுத்தக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கு பூரண சிங்கள ஆதிக்கமுடைய ஆணையாளர்கள் குழாத்தால் முடியும் என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் சொற்பமானதாகவே இருக்கின்றது.

 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டம் இவ்வாறு கூறுகின்றது. “ஆணைக்குழு மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றிய அறிவு பெற்றுள்ள மற்றும் பிரயோக அனுபவத்தை உடையவர்களில் ஐந்து அங்கத்தவர்களைக் கொண்ட ஆணையாளர்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்”. இந்த பிரிவானது தற்போது சிபாரிசு செய்யப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும்? இதற்கு மேலதிகமான சபரகமுவ பல்கலைக்கழகத்தின்  பேராசிரியர் சந்தன உடவத்தையின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது. இவர் அப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியராவார். அவ்வாறே அவர் இரத்தினபுரி மாவட்டத்தில் ஆளும் கட்சியின் முக்கியமான ஆதரவாளராவார். அதன் காரணமாக மேற்படி பேராசிரியர் ஜகத் பாலசூரிய தொடர்பாக முன்வைக்கப்பட்ட அதே விமர்சனம் இவர் மீதும் முன்வைக்கபடலாம்.

 

இத்தகையவர்கள் கடந்த காலப்பகுதிக்குள் அவர்களது செயற்பாட்டிற்குள் மனித உரிமைகள் தொடர்பாக பெற்றுள்ள தகைமை என்ன? இந்த நாட்டின் மனித உரிமைகள் மேம்பாடு முன்னேற்றம் தொடர்பாக வழங்கியுள்ள பங்களிப்பு யாது? அரசியல் நடத்தையில் இருந்து விடுபடாத இத்தகையவர்களால் எதிர்வரும் 05 வருட காலப்பகுதிக்குள் இந்நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழுவை சுயாதீன ஆணைக்குழுவாக நடாத்திச் செல்வதற்கு போதுமான நடவடிக்கைகளை இவர்கள் எடுப்பார்களா என்பது இவ்விடயம் தொடர்பாக எழுகின்ற கேள்விகளாகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts