இருளிற் தொடரும் ஒரு தரப்பு யுத்தம்: முள்ளிவாய்கால் நினைவுத் தூபி தகர்ப்புத் தொடர்பில்.
2019 ல் நினைவுத் தூபியின் படம்: மூலம் தமிழ் கார்டியன்.
எங்கள் தீவைப் பீடித்த 26 வருட உள்நாட்டு யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு பெரும்பாலும் 12 வருடங்களானபோதும் இலங்கை தனது பிரிவினைவாதத்திலிருந்து விடுபடவில்லை.
அதற்குச் சான்று தரும் ஆவணங்களாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை ஜனவரி 8, 2021ல் இரவோடிரவு தந்திரமாகத் தகர்த்தமையும், தகர்ப்பைத் தொடர்ந்து அதற்கு எதிராகக் குரலெழுப்பிய மாணவர்கள் நடத்தப்பட்ட முறையும் இருக்கின்றன.
ஜனவரி 8ம் திகதி இரவு அதிரடிப் படையினர் யாழ் பல்கலைக்கழக வாயில்களுக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கும் பொழுது, மாணவர்கள் நினைவுத் தூபி தகர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மூலம் – தமிழ் கார்டியன்
இருந்தாலும் இதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் பரபரப்பான சூழ்நிலையைத் தளர்த்தும் வகையில் உள்ளூர் அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையைக் காணக்கூடியதாயிருந்தது – கடந்த காலங்களில் நிகழ்ந்த இவ்வாறான சம்பவங்கள் போது காணப்படாத விடயம்.
முதலில், “பாதுகாப்புப் பிரிவு, புலனாய்வுப் பிரிவு, கல்வி அமைச்சு, எல்லோரினதும்” கட்டளைகளைத் தொடர்ந்தே நினைவுத் தூபி தகர்க்கபட்டதெனக் கூறிய யாழ். பல்கலைகழக உப வேந்தர் எஸ்.ஸ்ரீ சற்குணராசா, பின்னர் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் பாக்லே அவர்களைப் பிரதம மந்திரி சந்தித்ததின் பின் பிரதம மந்திரி ராஜபக்க்ஷவின் ஊடகப் பிரிவு செயலாளரின்படி யென வேறொரு கதையளந்தார்.
மேலும், தூபி தகர்ப்புப்பற்றி இந்தியாவின் உரத்த கண்டனத்துடன் வெளிநாடுகளின் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் கண்டனங்களும் தாக்கஞ் செலுத்தியுள்ளன.
இருந்தபோதிலும் இந்த விரைவான நடவடிக்கைக்கு பின்னாலுள்ள நோக்கம் கேள்விக்குரியதாகவே உள்ளது. இதே நினைவுத் தூபியைத் தகர்க்க மறுத்தமையால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பதவி நீக்கஞ் செய்யப்பட்டாரென யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறைத் தலைவர் மு.குருபரன் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நினைவுத் தூபி தகர்க்கப்படுதல்:
மூலம். தமிழ் கார்டியன்.
நினைவு கூரும் உரிமை தடுக்கப்பட்டது.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலையில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி வானை நோக்கிக் கைகள் உயர்த்தப்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது. இது சரணடைய வந்தவர்கள் இலங்கைப் படைகளினால் கொல்லப்படும்போது காணப்பட்ட காட்சிகளைத் தெரிவிப்பவையாக இருந்தன.
இறந்துபோன தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூருதல் மனதிலுள்ள காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கும் பங்களிப்புச் செய்யும் என்பதால் ஒரு நாட்டின் குடிமக்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
முன்னைய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கும் போது தமிழ் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கிருந்த கட்டுப்பாடுகளிற் தளர்வுகள் ஏற்பட்டும் அதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டும் இருந்ததை இலங்கையிற் காணக்கூடியதாயிருந்தது. இருப்பினும், யுத்தத்திற்குப் பின் ராஜபக்க்ஷ ஆட்சியில் நடந்தவற்றை நினைவுபடுத்துவதுபோல் இப்போதும் இந்தச் சுதந்திரம் மீண்டும் தடுக்கப்படுகிறது.
சம்பவங்கள் புதியன அல்ல
எனினும், அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஆச்சரியத்துக்குரிய ஒன்றல்ல. ஏனெனில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு, அவற்றிகான ஆதாரங்கள் இருந்தும் கூட சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்ப்பதும் குற்றச்சாட்டுகளை மறுப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,000 பேர் என்று சொல்லப்படும்போது 2012ல் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட புள்ளி விபரங்களில் இறந்தோர் தொகை 9,000 எனக் குறிப்பிடுவது நேர் மாறாக இருக்கிறது.
உண்மையாக, யுத்தம் முடிவிற்கு வந்த காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளரக இருந்த ஜனாதிபதி கோட்டபாய ஒரு வருடத்திற்கு முன்னர், அதாவது 2020 இல், காணமற்போன ஆயிரக்கணக்கானோரில் – 20,000 பெரும்பாலும் தமிழர்கள்; இறந்த விட்டனர் எனத் தெரிவித்தார்.
மேலும் ஒருபடி மேற்சென்று, மாவீரர் தினம் கொண்டாடப்படுவதால் “தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியை உருவாக்கும்” என்ற வாதத்தை அரச சட்டதரணிகளும் பொலிஸாரும் முன்வைத்ததன் பின்னர் சென்ற வருடம் நவம்பர் மாதம் த.ஈ.வி.புலிகளில் இறந்தவர்களின் நினைவாகக் கொண்டாடப்படும் மாவீரர் தினத்தை (27 நவம்பர்) நீதிமன்றம் தடைசெய்தது.
இத்துடன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி க்றீவ் அவர்களின் ஜூன் 2020 வெளிவந்த உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள் நிகழாமைக்கு உத்தரவாதம் ஆகியவற்றின் மேம்பாடு சம்பந்தமான அறிக்கையில் “கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் கைதுகள் ஆகியன நினைவுகூரல் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்தும் இடையூறு விளைவிக்கின்றன: இறந்தவர்களின் உறவினர்கள் நினைவிடங்களையும் நினைவுத் தூபிகளையும், இவைகளிற் சில வேண்டுமென்றே அழிக்கப்பட்டு விட்டன, அணுக முடியாதுள்ளனர்: இறந்த தமிழ் புலிகளை நினைவுகூருதல் மீது இருக்கும் தடை தொடர்ந்த வண்ணம் உள்ளது எனத் தெரிவிக்கிறது.
இதன் பின்புலத்தில், வேறேதும் நாட்டிற்குப் பதிலளிக்க வேண்டியதில்லை எனக் கூறுகின்ற மற்றும் ஏனைய நாடுகளின் தலையீடுகளுக்குக் கண்டனம் தெரிவித்துக் கோஷமிடுகின்ற நடப்புக்கால அரசாங்கத்திற்குத் தெளிவு ஏதும் ஏற்பட்டதா என்ற கேள்வியை இணையத்தள பயன்பாட்டாளர்கள் கேட்க வேண்டும்.
ஒரு தரப்பு யுத்தம் இருளிலே நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் இணைத்தளப் பயன்பாட்டாளராகிய நாம் விழிப்புடன் இருந்து, நீதி தேவதை போல, நாங்களும் கண்பார்வை அற்றவர்ளாயில்லை என்பதையும் தெரியப்படுத்தல் வேண்டும்.