பேனார்ட் எதிரிசிங்கே

பல காரணங்களால் ஜனநாயகம் என்றால் என்ன என்பதை கற்பது அவசியமானது. செயற்பாட்டு அரசியலில் இருந்து இளைஞர்கள் மற்றும் இளையவர்களைப் பிரித்தலும் குடிமக்கள் ஊழல் நிறைந்த மற்றும் கல்வியறிவற்ற பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பதும் ஒரு நாட்டில் ஜனநாயகத்திற்கு நீண்டகால சேதங்களை ஏற்படுத்தும்.

ஜனநாயகத்தை இரண்டு அம்சங்களில் அடையாளம் காணலாம். அதில் மிகவும் பிரபலமான அம்சம் பிரதிநிதித்துவ அரசாங்கமாகும். இது அரச நிர்வாகத்தின் நடைமுறை பற்றிய தெளிவான அமைப்பை வெளிப்படுத்துகிறது. பிரபலமான அம்சத்தில் ஜனநாயகத்தைப் புரிந்துகொள்ள முயற்சித்தால், மீதமுள்ள அம்சங்களின் கடமைகளை குறைத்து மதிப்பிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே ஜனநாயகத்திற்கு வேறு இரண்டு அடையாளங்களும் உள்ளன.

  1. சிறந்த மாதிரி
  2. ஆளும் முறைமை

சிறந்த ஜனநாயகம்

ஜனநாயகம் கொள்கைகளின் தொகுப்பாக, விழுமியங்களின் தொகுப்பாக அல்லது இலட்சிய மாதிரி என அடையாளம் காணப்படும்போது, அது குடிமக்களின் இறையாண்மையைக் குறிக்கிறது. குடிமக்களின் இறையாண்மை தொடர்பான ஆரம்ப அறிக்கைகளை பண்டைய அரசியல் இலக்கியங்களில் காணலாம். அரசியல் விஞ்ஞானிகள் இலட்சிய ஜனநாயகம் தோற்றம் பெற்றது இந்தியாவிலா, மத்திய கிழக்கிலா அல்லது பண்டைய கிரேக்க நாகரிகங்களிலா என்பதை கண்டுபிடிக்கும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். “கௌடில்யரின் பொருளாதாரம் (கி.மு 312 – கி.மு 296) இப்போது சமூக ஊடகங்களில் பிரபலமாகிவிட்டதுடன், அது  முடியாட்சியில் ஒரு அரசனின் கடமைகளையும், குடிமக்களின் முன்னேற்றத்திற்காக அவர் செய்ய வேண்டிய சேவையையும் விளக்குகிறது. இந்த காரணத்தினால் பெரும்பாலான தேசபக்தர்கள் “கௌடில்யரின் பொருளாதாரம்” குறித்து கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இது முடியாட்சியின் நியமனம் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் கட்டளைகள் தொடர்பில் குடிமக்கள் வைத்திருக்கும் அதிகாரத்தைப் பற்றி விவாதிக்கவில்லை. இலட்சிய ஜனநாயகம் பற்றிய விவாதத்தில், குடிமக்களின் அரசியல் அதிகாரம் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஜனநாயகத்தின் வரைவிலக்கணம் முதலில் கிரேக்க அரசியல் இலக்கியத்தில் மக்களின் இறையாண்மையின் கொள்கை என்று குறிப்பிடப்பட்டது. சைனிய வீரர்களுடன் தொடர்புடைய பெரிக் லிஷ் செய்த பிரபலமான நினைவு உரையின் ஒரு பிரித்தெடுப்பு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. தாசிசிடிஸ் (கி.மு 454 – கி.மு 404/396) எழுதிய பலஃபோனீசிய வரலாற்றுப் புத்தகத்தில் இது இடம்பெற்றுள்ளது. “எங்கள் ஆட்சி சிலருக்கு பதிலாக பலரின் பங்களிப்பைப் ஏற்றுக்கொள்வதால் நாம் அதனை ஜனநாயகம் என்று அழைக்கிறோம். எங்கள் சட்ட அமைப்பு அவர்களின் தனிப்பட்ட அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பொதுவானதாகும். பொது சேவையில் ஈடுபட யாருக்கும் விருப்பம் இருந்தால், அந்த வாய்ப்பு அவர்களின் சமூக அந்தஸ்தில் அல்லாது அவர்களின் திறனைப் பொறுத்ததாகும். சமூக அந்தஸ்து அல்லது வறுமை திறமையினை இடையூறு செய்யாது. ”

சமூக இறையாண்மையைப் பற்றிய இந்த எண்ணக்கரு இடைக்கால சகாப்தத்தில் உருவாக்கப்பட்ட பிற அரசியல் எண்ணக்கருக்களால் மறைக்கப்பட்டுள்ளது. நிலத்தை வைத்திருக்கும் பிரபுத்துவ வர்க்கத்துடன் கைகோர்த்திருந்த முடியாட்சியின் அதிகாரம் முதலாளித்துவ நடுத்தர வர்க்கத்தால் சவால் செய்யப்பட்டது. இந்த எண்ணக்கருவிற்கான அரசியல் தீர்வாக, அரசியல் சிந்தனையாளர்கள் பிரதிநிதித்துவ ஆளுகை மற்றும் அரசியலமைப்பு வாதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் மட்டுமே இந்த கருத்தை ஒரு சுவாரஸ்யமான முறையில் பேசிய ஒரே அரசியல்வாதியாவார். அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது (1891-1895) பென்சில்வேனியா மற்றும் கேடிஸ்பர்க்கில் இறக்கும் வீரர்களை நினைவுகூரும் வகையில் நினைவுச்சின்னத்தை திறக்கும் போது அவர் இந்த வார்த்தைகளை பேசியுள்ளார். “இந்த போரில் இறந்த வீரர்கள் வீணாக இறக்கவில்லை. அமெரிக்கா கடவுளின் கீழ் ஒரு புதிய வகை சுதந்திரத்தை அனுபவிக்கப் போகிறது, அது மக்களின் அரசாங்கமாகிறது, மக்களால், மக்களுக்காக, அது பூமியிலிருந்து அழியாது. ” இங்கே ‘ஜனநாயகம்’ என்ற சொல் லிங்கனால் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன் பின்னர் அது அந்த அறிக்கையுடன் சேர்க்கப்பட்டது.

லிங்கனின் இந்த அறிக்கையானது ஜனநாயக அரசியலை நோக்கி வழிநடத்திய முக்கிய பழமொழிகளில் ஒன்றாக அடையாளம் காணப்படுகிறது. ஒருபுறம், இந்த அறிக்கை கிரேக்க காலத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஜனநாயகம் குடிமக்களை மையமாகக் கொண்ட ஆட்சியல்ல என்பதைக் குறிக்கிறது. ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கான அதிகாரம் அந்த நாட்டின் குடிமக்களிடமே உள்ளது, ஆனால் உயர் வர்க்க சமுதாயத்திடம் இல்லை என்பது இதன் பொருளாகும். தாங்கள் நிறுவிய விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பொறுத்து நாட்டை ஆட்சி செய்ய ஒரு குடிமக்கள் குழுவை நியமிக்கும் அதிகாரம் குடிமக்களுக்கு உண்டு. நியமிக்கப்பட்ட அந்த குடிமக்கள் அனைவரின் நலனுக்காகவே நாட்டை ஆளுகிறார்கள். அவர்களின் சமூக அந்தஸ்து, அவர்கள் வசிக்கும் புவியியல் பகுதி அல்லது அவர்கள் பெறும் பதவிகள் மற்றும் சமூக ரீதியான ஏற்றுக்கொள்ளுகை ஆகியவற்றைப் பொறுத்து சிறப்பு சலுகைகளைப் பெறும் நோக்கத்துடன் அவர்கள் அத்தகைய பதவிகளை வகிப்பதில்லை.

19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வாக்களிக்கும் உரிமையுடன் இந்த அரசியல் இலட்சியவாதம் யதார்த்தமானதா? குடிமக்களின் இறையாண்மை என்ற கருத்து பண்டைய காலத்தில் தோன்றியது என்பதுடன் அதில் நிறைய சமூக முரண்பாடுகள் நிலவுகின்றன. இது 19 ஆம் நூற்றாண்டில் மீண்டும் வெளிப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, கிரேக்க யுகத்தில் பெண்கள் எந்த அரசியல் உரிமைகளையும் கொண்டிருக்கவில்லை. குடிமக்களின் இனம் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்ப வாக்களிக்கும் உரிமை தீர்மானிக்கப்பட்டது. தற்போது இந்த கூறுகள் இறையாண்மையின் சக்தியை பலவீனப்படுத்துவதால் அவை அகற்றப்பட்டுள்ளன. இப்போது, ஒவ்வொரு குடிமகனுக்கும்  வாக்களிக்க உரிமை உண்டு.

பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான அடிப்படை தகுதி வாக்களிக்கும் உரிமையாகும். 21 ஆம் நூற்றாண்டில் அனைத்து தேர்தல்களும் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் கருதப்படுகின்றன. ஆனால் தேர்தல்கள் குடிமக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கிறதா என்பதைக் குறிப்பிடுவது கடினமாகும். குடிமக்கள் தங்களை தனிப்பட்ட வேட்பாளர்களாக முன்வைப்பதை விட பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் ஆதரவாளர்களை தேர்தல்களில் வேட்பாளர்களாக முன்வைக்க முயற்சிக்கின்றன. பல தொழிலதிபர்கள் தங்கள் அடிமைகளாகக் கருதி தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக பெரிய அளவில் பணத்தை செலவழிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். மேற்கூறப்பட்ட காரணங்களைத் தவிர, ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு பக்கச்சார்பாக இருப்பது, தற்போதுள்ள தேர்தல் முறை குடிமக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கிறதா என கண்டறிவது ஒரு முக்கியமான வாதமாகும்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளைத் தவிர, பெரும்பாலான நாடுகளில் வாக்களிக்கும் உரிமை மீதான நம்பிக்கை குறைவாகும். 1946 இலிருந்து 1964 இற்கிடையில் வாழ்ந்த தலைமுறையை வாக்களிக்கும் உரிமை மிகவும் ஈர்த்தது. ஆனால் தற்போதைய சமுதாயத்தில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களாக இருப்பதால், நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் தேர்தல்கள் குறித்து பெருமளவில் அக்கறைப்படுவதில்லை. அதற்கு பிரதானமான காரணம் பிரதிநிதித்துவ ஜனநாயகம் கட்சி அரசியலாக மாற்றமடைவதாகும். ஆனால் அது ஜனநாயகம் தொடர்பான இறையாண்மையுடன் இளம் தலைமுறையினர் வாழ்வதற்கு தடையல்ல.

குடிமக்களின் இறையாண்மையின் ஜனநாயக எண்ணக்கரு, ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கும், கேள்வி கேட்பதற்கும், ஆளும் முறை பற்றி ஜனாதிபதி அல்லது பிரதமருடன் விவாதிப்பதற்கும் நமக்கு உரிமையை வழங்குகிறது. பாரம்பரிய சமுதாயத்தில் நடக்கும் இத்தகைய உரையாடல்கள் கனவுகள் மட்டுமல்லாது அவை ஒரு நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் சக்திகளும் கூறுகளும் ஆகும்.

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts