சமூகம்

அநுரதபுரம்-வவுனியா-மன்னார் இனங்களை ஒன்றிணைக்கும் நீர்!

சரத் மனுல விக்கிரம

மல்வத்து ஓயா நீரில் இருந்து விவசாயத்திற்காக அதிகளவு பலன் எதுவும் எடுக்கப்படாத நிலையில் மன்னாரில் அது இந்து சமுத்திரத்துடன் கலக்கின்றது. இந்த ஆற்றிற்கு குறுக்காக தந்திரிமலை பிரதேசத்தில் ஒரு அணையை நிர்மாணித்து நீரை திசை திருப்பி நீர்ப்பாசன வசதி செய்வதற்கான திட்டம் ஒன்று 1969 ஆம் ஆண்டு வரையப்பட்டது. ஆனாலும்

நீர் மக்களை இணைக்கின்றது! மொழி,கலாசார பரம்பல், பிரதேச ஆட்சி காரணமாக மன்னாரும் வவுனியாவும் இருவேறு பிரதேசங்களாக புவியியல் ரீதியாக வெறுபடுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் மல்வத்து ஓயா இந்த இடங்களின் அந்தங்களை இணைக்கின்றது. ஆனால் மக்களின் மனங்கள் அந்த நீரைப்போல் கனிந்தோடவில்லை. அங்கே பாயும் நீருக்கு வேறுபாடோ பாகுபாடுகளோ இல்லாமல் எல்லா மக்களுக்கும் கிடைக்கின்றது. எல்லா இனங்களும் நன்மையடைகின்றனர்.

மல்வத்து ஓயா நீரில் இருந்து விவசாயத்திற்காக அதிகளவு பலன் எதுவும் எடுக்கப்படாத நிலையில் மன்னாரில் அது இந்து சமுத்திரத்துடன் கலக்கின்றது. இந்த ஆற்றிற்கு குறுக்காக தந்திரிமலை பிரதேசத்தில் ஒரு அணையை நிர்மாணித்து நீரை திசை திருப்பி நீர்ப்பாசன வசதி செய்வதற்கான திட்டம் ஒன்று 1969 ஆம் ஆண்டு வரையப்பட்டது. ஆனாலும் இலங்கை அரசாங்கம் அந்த திட்டத்தை நிறைவேற்ற தவறிவிட்டது. அரை நூற்றாண்டு கால கனவு நனவாகும் வகையில் மல்வத்து ஓயாவுக்கு குறுக்காக அணையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நடை பெற்றிருக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாண மற்றும் தந்திரிமலை புராதன விஹாரை பிரதம சங்க நாயக்கரும் பிரதம பிக்குவுமான தந்திரிமலை சந்திரரத்ன தேரர் தந்திரிமலையில் இந்த அணை நிர்மாணத்திற்கான அடிக்கல் நடும் வைபவத்திற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.


அநுராதபுர மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள தந்திரிமலை பகுதியானது அடிக்கடி வரட்சியால் பாதிக்கப்படுகின்ற பகுதியாகும். இந்த பிரதேச மக்களின் பிரதான ஜீவனோபாயம் விவசாயமாகும். கிராம மக்களுக்கு அவர்கள் எதிர் நோக்குகின்ற குடிநீர்ப் பிரச்சினைக்கும் விவசாயத்திற்கு நீர் இல்லாத பிரச்சினைக்கும் தீர்வாக நிலையான நீர்ப்பாசன வசதி தேவைப்படுகின்றது. கீழ் மல்வத்து ஓயா திட்டம் பூர்த்தியடையும் போது கிடைக்கின்ற நீர்ப்பாசன வசதி காரணமாக அப்பிரதேச மக்கள் தடையின்றி விவசாய செய்கையை மேற்கொள்ள முடிகின்றது. மன்னார் மாவட்டத்தில் கீழ் பிரதேசத்தில் அமைந்துள்ள யோதவெவ நீர்த்தேக்கத்திற்கும் நிரந்தரமாக நீரை வழங்கும் ஒரு திட்டம் தேவைப்படுகின்றது. இந்த யோதவெவ நீர்த்தேக்கத்தால் கிடைக்கும் நீர் மூலம் மன்னார் மாவட்டத்தில் 40.000 ஏக்கர்களில் விவசாயம் செய்யப்படுகின்றது. ஆனாலும் அந்த யோதவெவ குளத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே நீர் விடப்படுவதால் தொடர்ச்சியான விவசாய செய்கைக்கு பாரிய அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.

“எங்களது பிரதேசத்தில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்களாவர். எங்களது பிரதான ஜீவனோபாயமாக அமைவது விவசாயமாகும். அத்துடன் சில விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடுகின்றனர். மிகவும் சிலரே வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைகளுக்கு நீர் மிகவும் அத்தியாவசியமானதாகும். மிகவும் குறைந்தளவிலே பாசன வசதி கிடைத்து வருவதால் விவசாயம் செய்வதற்கு வேண்டிய 8.500 ஏக்கர் நிலத்திலும் விவசாயம் செய்வது மிகவும் சிரமமானதாக இருந்து வருகின்றது. இந்த பிரதேசத்திற்கு நீரை திசை திருப்புவதற்காக மல்வத்து ஓயாவின் கிழ் பிரிவில் உள்ள கால்வாயை திசை திருப்பி மேலும் ஒரு கால்வாய் அமைத்து நீர்ப்பாசன வசதி வழங்குவதற்கான திட்டம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அந்த அறிவிப்பானது எங்களது எதிர்பார்ப்பை மேலிடச் செய்திருக்கின்றது. “நாங்கள் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொண்டால் அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களுடன் பரந்தளவிலான வர்த்தகத்தை நடவடிக்கைகளை எங்களால் மேற்கொள்ள முடியும்” என்று வேப்பங்குளம் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதியான ஏ.எம். கடாபி நம்பிக்கை தெரிவிக்கின்றார்.
“எங்களது வாழ்க்கையின் முக்கியமான பகுதி வரட்சியாலும் யுத்தம் காரணமாகவும் வீணாகி விட்டதாக இப்பிரதேச விவசாயியான எம். வஹாப் தெரிவிக்கின்றார். பாசன வசதியை அதிகரிக்கும் வகையில் நீர்த்தேக்கம் ஒன்றை நிர்மாணிப்பதானது எங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை வளம் படுத்த பிரயோசனமானதாக அமையும். நீர் இல்லாத பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் இப்பிரதேசத்தில் உள்ள நிலங்களின் பெறுமதியும் உயர்வடையும்” என்றும் அவர் கூறினார்.

Chandarathana-thero

இந்த நீர்த்தேக்கமானது தந்திரிமலை புராதன விஹாரையை அண்மித்ததாகவே அமைய இருக்கின்றது. இங்கு அதிகமான உல்லாசப் பயணிகளும் உள்ளுர் பக்தர்களும் வந்து போகின்றனர். தந்திரிமலை பிரதேசத்தில் அதிகமான மக்கள் அடையாளம் தெரியாத நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதோடு குறிப்பாக சிறுநீரக நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக அமைவது நல்ல குடி நீர் வசதி இல்லாததால் இந்த பிரச்சினைக்கும் தூய்மையான குடி நீர் வசதி கிடைக்குமானால் நல்ல தீர்வாக அமையலாம். அத்துடன் நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள் அபிவிருத்திக்கு எவ்வாறு பங்களிப்பு செய்கின்றனர் என்பது தொடர்பாக ரத்கமை வீதி தந்திரிமலையில் வசிக்கும் ஒரு பிரதேசவாசியான டி.பி. டிங்கிரி மெனிகா தெரிவிக்கையில் “இப்பிரதேசத்தின் பாதைகள் அபிவிருத்தி செய்யப்படவேண்டும். வில்பத்து சரணாலயத்திற்கான பாதை எங்களது கிராமத்தை ஊடறுத்ததாகவே நிர்மாணிக்கப்பட இருக்கின்றது. அந்த சந்தர்ப்பத்தில் எங்களது வியாபாரங்கள் முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கிறோம்”
இந்த திட்டத்திற்கு செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடானது 2300 கோடி (23 பில்லியன்) ரூபாய்களாகும். அம்பாறையில் அமைந்துள்ள சேனாநாயக்க சமுத்திரத்திற்கு இரண்டாவதாக அமையும் வகையில் இந்த திட்டம் நிறைவு செய்யப்பட்டால் 165,000 கண அடி நீரை விவசாயத்திற்காக வழங்கக் கூடியதாக இருக்கும் என்று நம்பப் படுகின்றது. தற்போதைய நிலையில் நீர் இன்றி வற்றிப் பேய் இருக்கின்ற சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 150 குளங்கள் அளவில் இந்த நீர்த்தேக்கத்தால் நீர் வசதி பெற்று போசணையடைய இருக்கின்றது. இது மூன்று மாவட்டங்களினதும் எல்லையாகும். பல மொழி பேசக்கூடிய பல்லினங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நீரால் நன்மை அடையவுள்ளனர். அதனால் இந்த நீர்த்தேக்கம் “நல்லிணக்கத்திற்கான பாசன வசதி” என்று அழைக் கப்படுகின்றது.

யொதவெவ குளத்தை நம்பி வாழும் மக்கள் இந்த திட்டத்தால் அதிகமாக மகிழ்ச்சியடைவார்கள். விளாங்குளம் பகுதியைச் சேர்ந்த உதயன் தெரிவிக்கையில் கூறியதாவது “இந்த வைபவத்திற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்குபற்றினோம். இந்த திட்டம் மூலம் எங்களது பிரச்சினை தீர்ந்து அபிவிருத்தியை எதிர்பார்க்க முடிகின்றது”
நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் மற்றும் பாதைகளுக்கு வேறுபாடுகள் இல்லை. அதன் பிரதி பலன்கள் எல்லா இனங்களுக்குமாகும். அவை மனிதர்கள் மற்றும் மிருகங்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் பொதுவானதாகும். அதனால் மனிதர்கள் இதன் மூலம் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

This article was originally published on the catamaran.com

SHARE NOW
கட்டுரைகளுக்கான பொறுப்புத் துறப்பு இந்த வெளியீட்டில் உள்ளடக்கப்பட்ட அவதானங்கள் மற்றும் கருத்துகள் குறித்த படைப்பின் எழுத்தாளர் சொந்த கருத்துக்கள். அவர்களின் வெளியீட்டில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நோக்கங்கள் அல்லது கருத்துக்களை பிரதிபலிக்கும் நோக்கமில்லை.

Related Posts