ஊடகம் என்பதால் விளங்கிக் கொளளப்படுவது ஏதாவதொரு நிகழ்வு அல்லது அதனோடு சம்பந்தப்பட்ட நபர் தொடர்பான தகவல்களை பரந்தளவிலான மக்களை அறிவூட்டல் செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்ற வழிமுறையாகும். ஓலிபரப்பு ஊடகம், சினிமா, நாடகம், அச்சு ஊடகம், இணையத்தளம் உட்பட அனைத்து ஊடகங்களும் பின்பற்ற வேண்டிய
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை மூடுவதற்கு கடந்த 2020 டிசம்பர் முதலாம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது நாட்டில் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்துடன் 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இலங்கை மின்சாரத் துறையின் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு
சிறைத்துறையில் தற்போது காணப்படும் திருத்த கட்டமைப்பிலுள்ள பலவீனங்கள் மற்றும் புனர்வாழ்வில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த ஆய்வில், தண்டனை வழங்குவதைக் காட்டிலும் குற்றத்தை திறம்பட தடுக்கவேண்டியதை பற்றி கவனஞ்செலுத்தியுள்ளது. இலங்கையில் மீண்டும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடும் விகிதம் அதிகரித்துள்ளமையானது, சிறையிலிருந்து
ஒரு மனிதன் இறந்த பிறகு அந்த உடலுக்கு செய்யும் இறுதி மரியாதை அவரவர் மத கலாசார நம்பிக்கைகளின் அடிப்படையில் வேறுபட்டது. அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் இறந்த உடலை அகற்றுவது அந்த மனிதருக்கு செய்யும் பெரும் மரியாதையாகவும் ஆத்ம திருப்தியாகவும் உள்ளது. இது அவரவர் விருப்பப்படி செய்ய முடியுமான அடிப்படை சுதந்திரமாகவும் உள்ளது. ஆனால் இலங்கையில் இந்த உரிமை பெரும்
பவித்ரானி திசாநாயக அறிவுசார் சொத்து (Intellectual Property) என்பது இன்று உலகின் மிக முக்கியமான சட்ட பிரிவுகளில் ஒன்றாகும். இது சட்டபூர்வமான நியாயத்தன்மை, பொருளாதார நன்மை மற்றும் மனிதனின் அறிவினால் உண்டாக்கப்பட்ட புத்தாக்கங்களுக்கு பெறுமதி மற்றும் பாதுகாப்பை வழங்க முற்படுகிறது. சட்டத்தின் தனித்துவமான அம்சமான இது இப்போது உலகம் முழுவதும் பரவலாக விவாதிக்கப்படும் விடயமாக
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் உண்மையான பொருள் உணர்திறன் ஆகும். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கான நினைவுச் சின்னமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் நினைவுத் தூபியொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லை அதன் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா ஜனவரி 11ஆம் திகதி நாட்டிவைத்தார். அதற்கு முன்னதாக, யாழ்ப்பாண
யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் தூபி இடிக்கப்பட்டமை நாட்டில் சமுகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பை வழங்கியதா? அதிகாரிகள் அந்தத் தூபியை இடித்துத் தள்ளியதை அடுத்து கருத்துத் தெரிவித்த பல்கலைகழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இத் தூபி வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான சமாதானத்திற்கு
இனப்பிரச்சினையால் தூண்டப்பட்ட 30 வருடகால ஆயுத மோதல் முடிவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேலாகின்றது. எனினும், சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் சிறிதளவிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன. நீண்டகால மோதலொன்றின் முடிவானது ஒரு நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்காது என்பதை இது வெளிப்படுத்துகின்றது. சமாதானத்தை கட்டியெழுப்பும் செயன்முறையின் வரையறையை
மதிப்பும் மரியாதையும் எங்களது வாழ்க்கையை மேம்படுத்துகின்றது. மிருகங்களில் இருந்து இந்த பண்பு வேறுபடுகின்றது. இந்த பண்பானது மனிதனுக்கு மனிதன், மதத்திற்கு மதம் வேறுபடுவதாக அமைகின்றது. மனித நேய பண்புகளானது எங்களை ஒருவரோடு ஒருவர் ஒன்றிணைப்பதாக அமைவதோடு மற்றவர்களது கண்ணியத்தையும் பாதுகாப்பதாக அமைகின்றது. கொவிட் 19 வைரஸ் தொற்று எங்களது வாழ்க்கையை தலைகீழாக மாற்றி இருக்கின்றது. பல
நீண்ட காலப் பேசு பொருளாய்க் கலந்துரையாடப்பட்டும்; விரிவாக ஆராயப்பட்டும் பரிசோதிக்கப்பட்டும்; இருப்பவை போலிச் செய்தியும் வெறுப்பூட்டும் பேச்சுகளுமாகும். இவை வெளித்தெரிய வருகையில் உள்ளூர் மற்றும் சர்வதேச கருத்துக்களங்களில் ஆதிக்கஞ் செலுத்துபவையாக இருந்ததுடன் நடப்புக்கால சமூகத்தின் மீது பெருந் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பல வருடங்களாக இதனை இலங்கையிலே பெருவழக்கிற்










