யு.எல்.மப்றூக் சிறுபோக நெற்பயிர்கள் குடலைப் பருவத்திலும் கதிர்கள் வெளியாகிய நிலையிலும் காணப்படுகின்றன. தற்போது அவற்றுக்கு இடவேண்டிய இரசாயனப் பசளையினை பெறமுடியாது மக்கள் அவதியுறுகின்றனர். அப்படிக் கிடைத்தாலும் மிக அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள
ஜீவா சதாசிவம் மனிதனின் கண்டுபிடிப்புகளில் மகத்தானது தீ! அந்த தீ அவனது கட்டுப்பாட்டில் இருக்கும் வரை பல பயன்தரவல்லது. அதுவே அந்தக் கட்டுப்பாட்டை இழக்கும் போது பல ஆபத்தை ஏற்படுத்த வல்லது. அதனை தீ விபத்து என கூறிக் கொண்டாலும் அது தீ ஆபத்து என்பதே உண்மை.தீ விபத்துச் சம்பவங்கள் சிறு குடிசையில் இருந்து ஆடம்பர மாளிகைகள் வரை அழித்து விட்ட பல சம்பவங்கள் உண்டு. தீ சமூக
நடாலி சொய்சா நான் ஒரு பெண்ணியவாதி அல்ல எனச் சிந்தித்தவாறு அதிக நேரத்தை செலவிட்டேன். இது நானாக, எட்டிய ஒரு முடிவு அல்ல – அது ஒரு எதிர்வினையாகவே பெறப்பட்டது. ஏனெனில், பெண்ணியவாதிகள் தூரமாவதை நான் கண்ணுற்றேன். நான் கருத்திற்கொள்ளாத மேலும் என்னால் புரிந்து கொள்ள முடியாத மொழிநடையை அவர்கள் பயன்படுத்துகின்றனர். உண்மையில் எவரும் இதனை எனக்கு விளக்கவில்லை, நான் இன்று உள்ள
கிருஷ்ணி கந்தசாமி இஃபாம் “உலகின் எந்த பகுதியிலும் ஒரு பத்திரிகையாளராக பணிபுரிவது அதுவும் ஓரு பெண்ணாக இருந்தால் கூடுதலான பல சவால்களைக் கொண்டிருக்கலாம், ஏனெனில் அங்கு அதிகார அடுக்குகளில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இலங்கையில் கொடூர யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கையிலேயே நான் இலங்கையின் பிரதான தமிழ்ப் பத்திரிகையில் இணைந்து எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன்;.
ஆர்.ராம் “13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அகற்ற வேண்டும், பகுதியாக அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சிங்களத் தலைமைகளும், 13ஆவது திருத்தச்சட்டத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தலைமைகளும் பகிரங்கமாகவே கூறிவிட்டன. எனினும் 13ஆவது திருத்தச்சட்டம் தான் ஏட்டளவிலாவது தமிழ் மொழி உரிமை உறுதிப்படுத்தப்படுத்தப்படுவதற்கு அடிநாதமாக
சம்பத் தேசப்பிரிய கொவிட்-19 தொற்றுநோயால் மில்லியன் கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். இதற்கான தீர்வு குறித்து பல நாடுகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுடன் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே பல தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பல நாடுகள் தீர்வுக்காக ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் போது, இந்த வைரஸ் எங்கிருந்து உருவானதென அமெரிக்கா தீவிர
நிமால் அபேசிங்க மனிதகுலத்திற்கு சரியான பாடம் புகட்ட, இயற்கையை விஞ்சிய சட்டம் எதுவும் கிடையாது. நோய்கள், வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற பேரழிவுகளின் வடிவத்தில் இயற்கையின் படிப்பினைகள் வந்தடைகின்றன. மத அல்லது இன வேறுபாடுகளின்றி இயற்கை அனைவருக்கும் சமமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தற்போது நாம் அனுபவித்துவரும் கொவிட்-19 தொற்றுநோய், மிகவும் அண்மித்த மற்றும் சிறந்த
சி. ஜே. அமரதுங்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பாக, இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது மிகவும் முக்கியமானதென்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென்பதையும் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். அதேநேரம், இத்தீர்ப்பானது சுதந்திரத்தையும் அரச ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க வழிவகுத்ததாகவும் பலரும் கருதுகின்றனர். ஆனால்,
சி. ஜே. அமரதுங்க இக்கட்டுரை எழுதப்படும் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பலர் நினைக்கின்றனர். ஆனால் அவர் விளக்கமறியலில் இல்லையென தகவலறிந்த சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டுகின்றனர். சந்தேகநபர் ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும்போது எதற்காக அவர் சந்தேகத்தின் பேரில்
பிரியந்த கருணாரத்ன ஜனவரி 8, 2015 முதல் 2019 நவம்பர் 16 வரையிலான காலகட்டத்தில் அரச ஊழியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கலுக்கு ஆளானமை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழுவிற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமை தாங்கியதுடன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா





