கமந்தி விக்ரமசிங்க எமது அயல்நாடான இந்தியாவின் மீதான பிடியை கோவிட் – 19 இறுக்கிக் கொண்டிருக்கிறது. அநேக பிரஜைகள் மருத்துவ ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் இந்த பயங்கர வைரசுக்கு இரையாகின்றனர். மூச்சுத்திணரல் காரணமாக அதிகமானோருக்கு மருத்துவ ஒக்சிஜன் தேவைப்படுகிறது என்று அண்மையில் வெளிவந்த அறிக்கைகள்
நயனதாரா ஜயதிலக்க “எனது உடலின் மிகவும் வலிமையான பகுதி எனது முழங்கால்கள் ஆகும். நான் ஒருபோதும் முழந்தாளிட மாட்டேன்” என ஆங் சான் சூகி குறிப்பிட்டார். இந்த கட்டுரை எழுதப்பட்ட சந்தர்ப்பத்தில், மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி 100 நாட்கள் கடந்துவிட்டன. இராணுவ தோட்டாக்களை எதிர்த்து மக்கள் ஜனநாயகத்திற்காக போராடுகின்றனர். இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்யக்கூடிய,
சம்பத் தேசப்பிரிய முழு நாட்டையும் சூழ்ந்திருந்த 1988 மற்றும் 1989 கலவரம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. கொள்ளுபிடியில் எலொய் எவனியுவில் அமைந்திருந்த அலுவலகத்தை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்த யுக்திய பத்திரிகை இரு வாரங்களுக்கு ஒரு முறை அச்சிடப்பட்டு விநியோகப்பட்டது. இனங்களுக்கு இடையிலான சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருந்த அப்பத்திரிகையின்
அஜித் பெரகும் ஜயசிங்க இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் வித்தியாசமான ஒரு கருத்தாடலில் நான் பிரவேசித்தது, 1994 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சமாதான இயக்கத்துடன் தொடர்புபடுவதன் மூலமாகும். அப்போது ஐக்கிய தேசிய கட்சியின் 17 வருட ஆட்சி தொடர்பில் விரக்தியடைந்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற் சங்கங்கள் மற்றும் ஏனையை சிவில் சமூக
நெவில் உதித வீரசிங்க பௌத்த துறவியான அதுரலியே ரத்தன தேரரின் புனித தலதா மாளிகைக்கு முன்னரான உண்ணாவிரதம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவி நீக்கம் செய்து கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநரை நியமித்ததை தொடர்ந்து 2019 ஜூன் 4 ஆம் திகதி முடிவுறுத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, ஹிஸ்புல்லாவின் செய்திகள் ஊடகங்களில் பழையதாக இருந்தபோது, ரத்ன தேரரின் முகத்துடன்
சபீர்மொஹமட்&ஹர்ஷனதுஷாரசில்வா “எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீ அனாவசியமானதொரு பயத்தையே தோற்றுவிக்கின்றது. இதன் மூலம் பாரிய சுற்றாடல் பாதிப்புகள் இல்லை” என்ற தலைப்பின் கீழ் சிறீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் துறை பேராசிரியர் எஸ்.டி.எம் சின்தக தெரிவித்ததாக ஒரு கூற்று வட்ஸ்அப், முகப்புத்தகம் போன்ற சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டதுடன் மக்கள்
மல்லியப்புசந்தி திலகர் கொவிட் -19 பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தவென தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை உலகளாவிய ரீதியாக இடம்பெற்று வருகிறது. தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியமானது என பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல நாடுகள் தேசிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி தடுப்பூசிகளை வழங்கி வருகின்றன. இலங்கை அரசாங்கமும் கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை
சுதர்ஷினி முத்துலிங்கம் புத்தகமொன்றில் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே போகின்றோம், எப்பக்கத்திலேனும் விடை கிடைக்காதா என்று…ஆனால் காலம் சொல்கிறது அது விடையில்லாப் புத்தகமென்று. கொரோனாவின் கோரத்தாண்டவத்தை சுமார் ஒன்றரை வருடங்களிற்கு மேலாய் அனுபவித்து இன்னல்களைக் கடந்து இன்று வரை போராடிப் போராடி பயணமாகிக் கொண்டிருக்கின்றோம். இதிலிருந்து மீள எதிர்ப்பு சக்தியைக் கொடுத்து கொரோனாவை
ந.மதியழகன் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 20வீதம் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களிற்கு என இந்த நாட்டில் ஒரு தனியான வைத்தியசாலை இல்லை. எனவே அதனை முதன் முதலாக வடக்கில் ஆரம்பிக்க வேண்டும் என ஓர் கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. மூத்த பிரஜைகளுக்கான உடனடித்தேவையாகவும் அது உள்ளது. இன்று இலங்கை மக்களாலும் அரசினாலும் அதிகம் செலவு செய்யும் துறையாக சுகாதாரத் துறையே உள்ளது.
பா.கிருபாகரன் கொரோனா என்னும் கொடிய வைரஸின் தாக்கம் உலகெங்கும் கட்டுக்கடங்காது பரவி ஒட்டுமொத்த உலகையுமே வீட்டுக்குள் முடக்கிவைத்துள்ளதுடன், உலக பொருளாதாரத்தையே குழி தோண்டிப் புதைத்து வருகின்றது. வல்லரசு நாடுகளில் தொடங்கி வளரும் நாடுகள்வரை, பணம் கொழிக்கும் நாடுகளிலிருந்து பட்டினி கிட க்கும் நாடுகள் வரை இந்த வைரஸிடமிருந்து தப்பவில்லை.






